சற்று முன்

கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

கடலுக்கடியில் 'யானை' பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்ட பாண்டிச்சேரி அருண்விஜய் ரசிகர்கள்
Updated on : 18 September 2021

நடிகர் அருண்விஜய் நடிப்பில் ஹரி இயக்கும் யானை படத்தில் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. குடும்ப கதையோடு ஆக்‌ஷன் கலந்து தயாராகும் இப் படத்தின் போஸ்டரை பாண்டிச்சேரியை சேர்ந்த அருண்விஜய் ரசிகர்கள் கடலுக்கடியில் வித்தியாசமான முறையில் வெளியிட்டார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தியது.





  



*இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் "யானை".

 





*தமிழ் சினிமாவில் கிராமங்கள் முதல் நகரம் வரை அனைவரும் கொண்டாடும்  வகையில் கமர்ஷியல் படங்கள் தருபவர் இயக்குநர் ஹரி. தமிழின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து மிகப்பெரிய வெற்றிப்படங்களை தந்த இவர் தற்போது தொடர் வெற்றிகளால் முன்னணி நாயகனாக மிளிர்ந்து வரும்  நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து ஒரு  படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார்கள். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் ‘சிங்கம்’ பம்பர் ஹிட்டானது இந்நிலையில் இப்படத்திற்கு ‘யானை’ எனபெயரிடப்பட்டுள்ளது, ரசிகர்களிடம் உற்சாக வரவேற்பை பெற்றுள்ளது.



 





 





*அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக  ப்ரியா பவானிசங்கர் நடிக்கிறார். மேலும் இப்படத்தில்  சமுத்திரகனி, ராதிகா, யோகிபாபு, KGF புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும்  முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, தூத்துக்குடியில், பழனி, ராமேஸ்வரம் முதலான பகுதிகளில் கடந்த மாதம் முதல் நடந்து வந்தது. இரண்டு பாடல்கள் மற்றும் அனல் அரசுவின் அற்புதமான சண்டை அமைப்பில் மூன்று சண்டைக்காட்சிகள் உட்பட,  படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து மீண்டும் தூத்துக்குடி, ராமேஸ்வரம், பழநி பகுதிகளில் நடைபெறுகிறது.



 





இயக்குநர் ஹரியின் தனித்தன்மை மிக்க பரபர திரைக்கதையில்,  

நடிகர் அருண் விஜய் இதுவரை திரையில் கண்டிராத வகையில் , கிராமமும் நகரமும் கலந்த பின்னணியில் குடும்பங்கள் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா