சற்று முன்

கார்த்தியின் வித்தியாசமான தோற்றத்தில் 'வா வாத்தியார்' படத்தின் டீஸர் வெளியானது!   |    இந்தியாவின் முதல் பான்-இந்திய நட்சத்திரமானது எப்படி? 22 வருட திரை வாழ்க்கை பற்றி பிரபாஸ்   |    டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'பாராசூட்' டீசரை வெளியிட்டுள்ளது!   |    ஜப்பான் நாட்டில் வெளியிடப்பட உள்ள 'கல்கி 2898 கிபி'!   |    ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படத்தில் ஒப்பந்தம்!   |    #NaniOdela2 திரைப்படத்திற்கு 'தி பாரடைஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது!   |    'அமரன்' பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனுஷின் #D55   |    ராம் சரணின் ஸ்வாக், ஸ்டைல் மற்றும் மாஸ் என அதிரடியாக கலக்கும் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர்!   |    அரசாங்கத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து வரும் ராதாரவி!   |    அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நிரபராதி என விடுவிக்கப்பட்டார் #நிவின்பாலி !   |    2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வரலாற்றின் சிறப்பு மிக்க பக்கத்தைக் காணத் தயாராகுங்கள்!   |    நடிகர் பிரபாஸ் எழுத்தாளர்களுக்காக துவக்கி வைத்த ‘தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்’ இணையதளம்!   |    'கேம் சேஞ்சர்' பட கூட்டணியின் மாஸ் அப்டேட்!   |    நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மெகாஹிட் 'ஏ.ஆர்.எம்' திரைப்படம்!   |    கேபிஒய் பாலா மற்றும் நியதி நடிப்பில் காதலை கலகலப்பாக சொல்லும் பாடல் 'ராக்காயி'   |    ‘பிரேக் ஃபாஸ்ட்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கும் நடிகை ரோஸ்மின்!   |    3 ஆயிரம் கோடி வசூலைக் கடந்த திரைப்படங்களைத் தந்த இந்தியாவின் ஒரே நடிகர் பிரபாஸ்!   |    நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் 'தண்டேல்' திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது!   |    ZEE5 இல் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வரும் 'ஐந்தாம் வேதம்’ சீரிஸ்!   |    யூனிஃபார்ம் அணிந்தாலே வேறு மாதிரியான கம்பீர உணர்வு நமக்கு வரும் - போலீசாக நடித்த நகுல் பேச்சு   |   

சினிமா செய்திகள்

'அன்னா பெல்லே சேதுபதி' டாப்ஸிக்காக ஆங்கில குரலில் பேசிய பிரபல நடிகை
Updated on : 20 September 2021

விஜய் சேதுபதி, டாப்ஸி  நடித்த "அன்னா பெல்லே சேதுபதி" ஒ டி டி பிளாட்ஃபாமில்  வெளியானது. படத்தில், வெளிநாட்டு பெண் வேடம் ஏற்று நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார், டாப்சி.  அதிலும், ஆங்கில உச்சரிப்பில் டாப்சி பேசும் அழகு அந்த கதாபாத்திரத்திற்கு மேலும் உயிரூட்டியது. அந்த குரலுக்கு  உயிரூட்டியவர், தென்னிந்திய  நடிகை  பிரியா லால்.



 



ஆம், சுசீந்திரன் இயக்கிய ஜீனியஸ் மற்றும் தெலுங்கில் ராம் கோபால் வர்மாவின் உதவியாளர் மோகன் இயக்கிய " குவா கோரின்கா "(Love Birds) ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்த அதே பிரியாலால் தான் டாப்சிக்கு ஆங்கிலத்தில் குரல் கொடுத்துள்ளார்.



 



இந்த கதாபாத்திரத்திற்காக பல நடிகைகள் மற்றும்  டப்பிங் கலைஞர்களை  வரவழைத்து டப்பிங் செய்து பார்த்தனர் . ஆனால் எந்த குரலும்  பிரிட்டிஷ் பாணியில் உச்சரிப்புடன் கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை.  அந்த வேளையில் தான்  வெளிநாட்டு பெண்ணான பிரியலால் குறித்தும் அவரது குரல் வளம் மற்றும் துல்லியமான ஆங்கில உச்சரிப்பு பற்றியும்  தெரியவந்தது. ஆனால் தமிழ் -தெலுங்கு பாடங்களில் ஹீரோயினாக நடித்து வரும் அவர் டப்பிங் பேச சம்மதிப்பாரா என்ற சந்தேகம் பட குழுவினருக்கு. இருந்தாலும் படத்தின் தன்மை உணர்ந்து  பட குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்கி பிரியாலால் குரல் கொடுக்க ஒப்பு குரல் கொடுத்துள்ளார்.



 





 



பிரியாவின் குரல், அவ்வளவு துல்லியமாக பிரிட்டிஷ் பாணியில் பேசி அசத்தியதை படத்தின் இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் மற்றும் அனைவரும் பாராட்டினார்கள். இப்பொழுது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.



 



துபாயிலுள்ள ராசல் கைமாவில் பிறந்து  லண்டனில் படித்து வளர்ந்த பிரியா லாலுக்கு நடிப்பும் நடனமும் தான் உயிர் மூச்சு. தமிழ் , மலையாளம், தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்து தன் திறமையை வெளிப்படுத்திய பிரியா லால், ஹீரோயினாக நடிக்கும் தனது அடுத்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். நடிப்புன் மீது இருக்கும் ஆர்வத்தால் தமிழில் சொந்த குரலில் பேசி நடிப்பதற்காக தமிழ் மொழியும் கற்று கொண்டுள்ளார். லண்டன் வாசியாக இருந்த பிரியா லால் கொச்சியில் தங்கி கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா