சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

இயக்குனர் பொன்குமரனுக்கு சைமா விருது
Updated on : 20 September 2021

2019-ஆம் ஆண்டில் வெளியான யஜமானா என்ற கன்னட திரைப்படத்திற்காக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளின் (siima) சிறந்த இயக்குநர் (கன்னடம்) விருதை பொன்குமரன் வென்றுள்ளார்.



 



தமிழ்நாட்டை சேர்ந்த பொன்குமரன் தனது வெற்றியில் தனது குருநாதர்களான  இயக்குநர்கள் கே பாக்யராஜ் மற்றும் கே எஸ் ரவிக்குமாருக்கு முக்கிய பங்குண்டு என்று தெரிவித்தார்.



 



பாரம்பரிய எண்ணெயைப் பயன்படுத்தும் கிராமம் ஒன்று பெரிய மாஃபியா மோசடியை எவ்வாறு சமாளிக்கிறது என்பதுதான் யஜமானா படத்தின் கதை. தர்ஷன், ரஷ்மிகா மந்தனா மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கர்நாடகா முழுவதும் 100-நாட்களுக்கு மேல் ஓடியது.



 



2011 ஆண்டு வெளியான 'விஷ்ணுவர்தனா' மூலம் இயக்குநராக அறிமுகமானார் பொன்குமரன். இந்த படத்திற்கு அவருக்கு siima சிறந்த அறிமுக இயக்குநர் விருது கிடைத்தது.



 



பொன்குமரன், தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான சாருலதா படத்தையும் இயக்கியுள்ளார். கே எஸ் ரவிக்குமார் இயக்கி ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தின் கதையை பொன்குமரன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



 



முன்னணி நடிகர்களை வைத்து பொன்குமரன் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தை மிருகா உள்ளிட்ட படங்களை தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோஸ் பேனரில் பி வினோத் ஜெயின் தயாரிக்கிறார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா