சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

24 சர்வதேச விருதுகளை வென்று “சின்னஞ்சிறு கிளியே” சாதனை
Updated on : 21 September 2021

கமர்ஷியல் மசாலா திரைப்படங்ளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் எண்ணற்ற திரைவிழாக்களில் கலந்து கொண்டு 24 சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறது “சின்னஞ்சிறு கிளியே”தமிழ் திரைப்படம், 



 



அம்மாவின் பெருமையை உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான படங்கள் பேசியுள்ளன. ஆனால் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் உள்ள பிணைப்பையும் அன்பையும் மனதை உருக்கும் வகையில் திரையில் வடித்திருக்கிறது இத்திரைப்படம். 



 



தந்தை மகள் பாசத்தை  மையமாகக் கொண்டு,  ஆங்கில மருத்துவத்தின் விபரீதத்தையும் இயற்கை மருத்துவத்தின் மகத்துவத்தையும் விளக்கும் விதமாக,  மிகவும் நேர்த்தியாகவும் யதார்த்தமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது நம் இயற்கை  மருத்துவத்தின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் விதமாகவும், மருத்துவதுறையில் புகுந்திருக்கும் வியாபார ரீதியிலான கார்பரேட் வணிகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது இத்திரைப்படம். உலக திரைவிழாக்களில் படத்தை பார்த்த விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்கள்.



 





 



இத்திரைப்படத்தை செண்பா கிரியேஷன்ஸ் சார்பில் செந்தில்நாதன் தயாரித்து, நடித்துள்ளார். பல்வேறு குறும்படங்களை இயக்கி பல்வேறு விருதுகளை வென்றுள்ள சபரிநாதன் முத்துப்பாண்டியன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். கரகாட்டக்காரன் புகழ்,  மறைந்த நடிகர் சண்முகசுந்தரம் அவர்களின் மகன் பாலாஜி சுந்தரம் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு பாண்டியன்,  இசை மஸ்தான் காதர்,  பாடல் வரிகள் பத்மநாபன் மற்றும் கீதா படத்தொகுப்பு குமரேஷ் ஆகியோர்  மேற்கொண்டுள்ளனர்



 



உலக ரசிகர்களின் பாராட்டுக்களை குவித்த இப்படம் தமிழ் ரசிகர்களுக்காக வரும் செப்டம்பர் 24 அன்று திரையரங்கு வெளியீடாக  வெளிவர இருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா