சற்று முன்

கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

'கோடியில் ஒருவன்' வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா
Updated on : 22 September 2021

விஜய் ஆண்டனி ,ஆத்மிகா நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் TD  ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் , பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பட  கோடியில் ஒருவன் படக்குழு மற்றும் பலர் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்.



 





விஜய் ஆண்டனி பேசியவை:



வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. விழாவின் நாயகன் உண்மையாகவே ஆனந்தகிருஷ்ணன் தான். எந்தப்படம் ஜெயிச்சாலும் அதற்கு காரணம் இயக்குனர்தான். இந்தப் படம் மட்டுமல்ல நான்  நடித்த அனைத்து படத்திற்குமே இது பொருந்தும். ஆனந்த் என்னிடம் கதை சொல்லும் போதே கண் கலங்கி விட்டார். உண்மையான விஜயராகவன் அவர்தான். இயக்குனர்கள் அட்லி ,லோகேஷ் கனகராஜ் போல ஆனந்த கிருஷ்ணனும் விஜய் ,அஜித் போன்றவர்களை  வைத்து படம் இயக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து தகுதியும் இவருக்கு இருக்கிறது. என் மேல் நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராஜா சாருக்கு நன்றி. இந்த கோடியில் ஒருவன் படத்தின் வெற்றி அதில் பணிபுரிந்த அனைவருக்கும் கிடைத்த வெற்றி. மக்களிடம் இந்த படத்தை கொண்டு சேர்த்ததற்கு  ஊடக நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.



 





தயாரிப்பாளர் டி .டி ராஜா பேசியவை,



இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் போதே ஊரடங்கு வந்தது.6 மாதத்தில் முடிக்க வேண்டிய படம் 20 மாதங்கள் கடந்தது. OTT இல்  இப்படத்தை கொடுப்பதற்கு எங்களுக்கு அதிக விலையில் வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் இப்படத்தின் மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை இருந்தது .தியேட்டரில் தான் ரிலீஸ் ஆக வேண்டும் என்று நினைத்து இப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பை மக்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் ஊடகத்துறையும் ,பத்திரிகை துறையும் தான்.



 





தனஞ்ஜெயன் பேசியவை,



இரண்டாவது கொரோனா ஊரடங்கிற்கு  பிறகு மக்களை தியேட்டருக்கு கொண்டுவந்த முதல்படம் கோடியில் ஒருவன் தான். இரண்டாவது கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா இல்லையா என்ற கேள்விகளை தவிடுபொடியாக்கி கோடியில் ஒருவன் ஜெயித்து இருக்கிறது. இந்த படத்தை எந்தவித பிரச்சனையுமின்றி தயாரித்துக் கொடுத்த தயாரிப்பாளர் ராஜா சாருக்கும் இயக்குனருக்கும் நன்றி. இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய இடத்தை அடைவார். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இரண்டு வருடங்களாக படத்தின் செய்தியை மக்களுக்கு கொண்டு சேர்த்த ஊடக நண்பர்களுக்கு நன்றி.



 





நடிகர் கதிர் பேசியவை,



தமிழ் சினிமாவில் திமிருபிடித்தவன் படத்தின் மூலம் எனக்கு அறிமுகம் கொடுத்தவர் விஜய் ஆண்டனி சார் தான். தற்போது கோடியில் ஒருவன் படம் மூலம் ஒரு அங்கீகாரம் கொடுத்தவரும் விஜய் ஆண்டனி சார் தான் . பிச்சைக்காரன் 2 படத்திலும் நான் நடிக்கிறேன்.



 



இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் பேசியவை:



என் அம்மாவிடம் நான் சொல்லியிருந்தேன் பத்திரிகையாளர்களை நம்பிதான் நான் படம் எடுக்கிறேன் என்று .எனது கருத்துக்களை மக்களிடம் அவர்கள் கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்று நம்பினேன் .நான் நினைத்ததை விட சிறப்பாகவே தற்போது நடந்திருக்கிறது. மெட்ரோ படத்திற்கு எனக்கு பல பாராட்டுகள் கிடைத்தன .ரசிகர்களுக்கு பிடித்த கமர்சியல் படம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது என தயாரிப்பாளர் சொல்லும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .இந்த படத்திற்காக எனக்கு அதிக சப்போர்ட் அளித்த விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. விஜய் ஆண்டனி தான் உண்மையான கோடியில் ஒருவன். கோடியில் ஒருவன் ஜெயிப்பான் என முதலில் நம்பியது விஜய் ஆண்டனி சார் தான். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ,ஊடக நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .கண்டிப்பாக கோடியில் ஒருவன் 2 படம் இருக்கிறது.



 





கமல் போக்ரா பேசியவை,



இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த மிகப்பெரிய வெற்றியடைய செய்த  ஊடக நண்பர்களுக்கு கோடான கோடி நன்றி.கண்டிப்பாக தமிழ் சினிமாவிற்காக பல நல்ல படங்களை கொடுப்போம் .

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா