சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

கே பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் 'யாரது'
Updated on : 27 September 2021

"சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க மூவரால் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இவர்களை சாட்சியுடன் கைது செய்ய இன்ஸ்பெக்டர் ரவி களம் இறங்குகிறார். ஆனால் அந்த மூவரும் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் கொலையாகின்றனர்.



 



ஏன்? எப்படி? என்ற கேள்விக்குறியோடு மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் இன்ஸ்பெக்டர் ரவி தீவிர விசாரணை செய்கிறார். அப்பொழுதுதான் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சம்பவம் நடைபெறுகிறது. படத்தில் நடித்தவர்களுக்கு மட்டுமல்ல படம் பார்ப்பவர்களுக்கும் வியப்பூட்டும் வண்ணம் இந்தப் படம் இருக்கும் என்கிறார் " இயக்குனர் நம்பிராஜ். இவர் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்த தனது அனுபவத்தை கொண்டு இயக்கி உள்ளார்.



 



 





 



வி.ஆர். இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் ஏகனாபுரம் ரவி தயாரித்துள்ள " யாரது " திரைப்படத்தில் இன்ஸ்பெக்டராக வி. ரவி, மதுஸ்ரீ, போஸ் வெங்கட், பெசன்ட்நகர் ரவி, வையாபுரி, காளியப்பர், போண்டாமணி, பெஞ்சமின், விஜய்கிருஷ்ணராஜ், அனிதா, ஜானகி, ஜெயமணி ஆகியோருடன்  வடத்தில் கே. பாக்யராஜ் நடித்துள்ளார்.



 



திண்டுக்கல் , சின்னாளபட்டி, சென்னையில் வளர்ந்துள்ள இதற்கு சபேஷ் -- முரளி இசையையும், ரவிசுந்தரம் கேமராவையும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பையும், ஆக்சன் பிரகாஷ் சண்டை பயிற்சியையும், நோபல் நடன பயிற்சியையும், கவனித்துள்ளனர்.



 



கதை திரைக்கதை வசனம் எழுதி நடிகர் நம்பிராஜ் இயக்கி உள்ளார்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா