சற்று முன்

‘ஜெய் பீம்’, ‘குட்நைட்’, ‘லவ்வர்’ வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடிக்கும் ‘குடும்பஸ்   |    இனி யார் படம் எடுத்தாலும் 'பாட்டல் ராதா' படத்தை விட சிறப்பாக எடுக்கமுடியாது - இயக்குனர் அமீர்   |    கண்ணப்பாவை ஒரு கதை என்று நினைக்க கூடாது, அது ஒரு வரலாறு, சரித்திரம் - நடிகர் சரத்குமார்   |    சந்தானத்தின் பிறந்த நாளான இன்று 'டிடி நெக்ஸ்ட் லெவல்' முதல் பார்வை!   |    யூடுபிலிருந்து சினிமாவிற்கு வருவது அத்தனை எளிதல்ல - இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட்   |    நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படத்துக்கு விருது!   |    படப்பிடிப்பு நிறைவு, உற்சாகத்தில் 'நிறம் மாறும் உலகில்' படக்குழுவினர்!   |    சிறு இடைவேளைக்குப் பிறகு, முன்னணி நடிகை நஸ்ரியா நஜிம் நடிக்கும் 'சூக்ஷ்மதர்ஷினி'   |    முதல் முறையாகக் குழந்தைகளின் உலகத்தில், அரசியல் 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்'!   |    நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |   

சினிமா செய்திகள்

‘என்ன வாழ்க்கடா’ சரிகமாவின் முதல் இசை வீடியோ ஆல்பம் ரிலீசானது
Updated on : 29 September 2021

திரைப்பட பாடல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வந்த மக்களின் ரசனை தற்போது மாற தொடங்கியுள்ளது. இதனால், தனி இசை பாடல்களின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தனி இசை வீடியோ ஆல்பங்கள் தயாரிப்பில் பல முன்னணி இசை நிறுவனங்களும், முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இசை ஆல்பங்களில் மக்களிடம் பிரபலமாக இருக்கும் திரைப்பட நடிகர், நடிகைகளும் நடித்து வருகின்றனர்.



 



அந்த வகையில், பொழுதுபோக்குத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழும் சரிகமா, தனது சரிகமா ஒரிஜினல்ஸின் முதல் தென்னிந்திய இசை ஆல்பத்தை தயாரித்துள்ளது. ‘என்ன வாழ்க்கடா’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த இசை வீடியோ ஆல்பத்தில் ரக்‌ஷன், சுனிதா, ஸ்வஷ்திஸ்டா, ஜிபி முத்து ஆகியோர் நடித்துள்ளனர்.



 



டாங்க்லி இயக்கியுள்ள இப்பாடல் ஏ.பி.ஏ.ராஜா எழுத, எஸ்.கணேசன் இசையமைத்துள்ளார். பென்னி தயாள், விருஷா ஆகியோர் பாடியுள்ள இப்பாடலுக்கு அபு மற்றும் சால்ஸ் நடனம் அமைத்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.



 



சரிகமா மற்றும் நாய்ஸ் அண்ட் கிரைய்ன்ஸ் இணைந்து வழங்கும் இப்பாடல் நேற்று வெளியானது. இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் தங்கள் சமுக வலைத்தள பக்கம் மூலம் இப்பாடலை வெளியிட்டனர்.



 



மேலும், நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற இப்பாடல் அறிமுக விழாவில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.



 



இப்பாடல் குறித்து சரிகமா நிறுவனம் சார்பில் பேசிய பி.ஆர்.விஜயலட்சுமி, “SAREGAMA இந்தியாவின் பழமையான, மிகவும் பெருமைமிக்க நிறுவனம். இந்நிறுவனம் மூலம் தொடர்ந்து புதிய திறமைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். புதிதாக SAREGAMA Originals எனும் அமைப்பு மூலம், தற்போது புதிய இசை திறமைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். முன்பு ஒரு நிகழச்சிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் பள்ளியில் இருந்து இந்த குழுவை மும்பைக்கு அழைத்து போயிருந்தோம், அப்போது இவர்கள் செய்த கலாட்டா மறக்க முடியாதது. இப்போது கணேசன் முதலான அதே குழு,  SAREGAMA Originals உடைய  முதல் பாடலை செய்துள்ளது, மிகுந்த மகிழ்ச்சி.” என்றார்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா