சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

சந்தாதாரர்களுக்கு ZEE5 வழங்கும் அடுத்த திட்டம்
Updated on : 30 September 2021

‘லாக்கப்’ ‘கபெ.ரணசிங்கம்’”மதில்’  ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ “டிக்கிலோனா” உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க ஜீ5 திட்டமிட்டுள்ளது.



 



 இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “விநோதய சித்தம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.



 





 



 மேலும் “விநோதய சித்தம்”படத்தில் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மூத்த ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஒளிப்பதிவை மேற்கொள்ள ரமேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.



 



 சமுத்திரகனி கூறுகையில், ‘மனித மனம் வேடிக்கையான முறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின் கதையை  உணர்ந்துகொள்ள முடியும். இந்த கதை பார்வையாளர்களுடன் உரையாடும். இந்த படத்தை பார்வையாளர்களுக்கு காண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.’ என்றார்.



 



தம்பி இராமையா அவர்கள், ‘இந்த கதை அனைத்து மக்களையும் இணைக்கிறது. பார்வையாளர்கள் ஒரு தத்துவ நாவலை முடிப்பது போல் உணர்வார்கள், மிகவும் விரும்புவார்கள்’ என்றார்.



 





 



முனிஸ்காந்த் அவர்கள் கூறுகையில், ‘சமுத்திரகனி இயக்கத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. முண்டாசுப்பட்டி, பசங்க 2, மாநகரம், மரகதநாணயம் படங்களை போல் இப்படமும் எனக்கு நல்ல பெயரை பெற்று தரும்’ என்றார்.



 



சஞ்சிதா ஷெட்டி அவர்கள், ‘அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளும் இந்த படத்தை முழுமையாக விரும்புவார்கள். இது ஒரு குடும்ப பொழுதுபோக்காக இருக்கும்.  இந்த படத்தில் நடித்ததை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்".



 



 தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அவர்கள், ‘"தன்னால் மட்டுமே தனது குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும், தான் இல்லையென்றால் தனது குடும்பத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாகிவிடும் என்று நினைக்கும் ஒவ்வொரு நபருக்கும்  தகுந்த பதிலை கூறும் படமே ‘விநோதய சித்தம்’. இந்த படத்தின் மூலம் ஜீ5 உடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி” என்றார்.



 



ஜீ5 ஒரிஜினல் படமான ‘விநோதய சித்தம்’ அக்டோபர் 13  அன்று ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா