சற்று முன்

கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

தோல்வியில் இருக்கும் போது தோளோடு தோளாக, உடனிருந்து உற்சாகப்படுத்தியது பத்திரிக்கைகள் தான்
Updated on : 26 October 2021

இந்த நன்பர்களுக்கு என்று சொல்வதில் ஒரு ஸ்பெஷல் அர்த்தம் இருக்கிறது, வெறும் பத்திரிக்கையாளர்களாக, ஊட்கவியலாளர்களாக இல்லாமல், எப்போதும் எனக்கு நண்பர்களாகவே நீங்கள் இருக்கிறீர்கள். உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே இடுக்கண் கலைவதாம் நட்பு எனும் குறளுக்கேற்ப, என் தோல்விப்படங்கள் என்னுடைய வெற்றிப்படங்களை கணக்கிட்டால்  வர்த்தக ரீதியாக எனது தோல்விப்படங்களே அதிகமாக இருக்கும் ஆனால்  அதிலும் நான் ஏதாவது குடைக்குள் மழை போல்,  சிறிய அளவிலாவது புதிய முயற்சிகளை செய்திருப்பேன். 



 



ஒத்தையடி பாதியிலிருந்து ஒத்த செருப்பு வரை  என்னுடைய பயணத்தை மிக இலகுவான நெடுஞ்சாலை பயணமாக்கியதில் பத்திரிக்கையாளர்களின் பங்கே அதிகம். துவண்டு கிடக்கும் போது, தோல்வியில் இருக்கும் போது தோள் கொடுப்பவர்களை தான், நாம் நன்பர்கள் என்று சொல்வோம். அந்த வகையில் என்னைப் பற்றி தொடர்ந்து ஒரு நற்செய்தி, எங்காவது ஒரு பத்திரிக்கையில் வந்து கொண்டே இருக்கும். அது எனக்கு மிகப்பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தரும்.



 





 



சில நேரங்களில், என் படங்கள் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போகும் காலங்களில் கூட, எனக்கு பத்திரிக்கைகள் ஊக்கம் தந்திருக்கின்றன.  எனது முயற்சிகளை பாராட்டியுள்ளன. தற்போது தேசிய விருது வாங்கும் அளவிலான படத்தை செய்வதற்கு என் தோளோடு தோளாக, உடனிருந்து உற்சாகப்படுத்தியது அவர்கள் தான். 



 



இப்போது தான்  வெற்றியை நோக்கிய எனது பயணம் துவங்கியிருக்கிறது. ஒவ்வொரு படமும் செய்யும் போது அதை எனது இறுதிப்படமாகவே நினைத்து செய்வேன். எனது முழு உழைப்பையும் அதற்கு தருவேன். தேசிய விருது முதல் ஆஸ்கர் விருது வரை அப்படம் வெல்ல வேண்டும் என முயற்சிப்பேன். அம்மாதிரியான முயற்சிகளில் பத்திரிக்கை தரும் பாராட்டு பெரும் மகிழ்ச்சியை தரும். இம்மாதிரி முயற்சிகளை நான் தொடர்ந்து செய்துகொண்டிருப்பேன், அப்படியான எனது அடுத்த முயற்சி தான் “இரவின் நிழல்”



 





 



நான் படத்தை பார்த்து விட்டேன். அதற்கடுத்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பார்த்து விட்டு, பிரமித்து என்னை பாராட்டினார். இப்போது இசையமைக்க ஆரம்பித்துள்ளார். இதன் முதல் பிரதியை, முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே ஆசைப்படுகிறேன். அடுத்து “ஒத்த செருப்பு” படத்தை இந்தியில் என் ஆதர்ஷ நாயகன் அமிதாப்பச்சன் தயாரிப்பில், அபிஷேக் பச்சனை நாயகனாக வைத்து இயக்கியுள்ளேன்.



 



இரவின் நிழல் படத்தை உங்களுக்கு தான் முதலில் காட்ட விரும்புகிறேன். ஒத்த செருப்புக்கு இன்னும் எத்தனை பெருமைகள் கிடைத்தாலும் அது  உங்களையே சாரும். அதே போல் எனது அடுத்தடுத்த முயற்சிகளையும் நீங்கள் பாராட்டுவீர்கள் துணை நிற்பீர்கள் என நம்புகிறேன் 



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா