சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

கிராமிய சூழலில் மண்வாசனை மாறாமல் எடுக்கப்பட்ட படம் 'சில்லாட்ட' விரைவில் திரையில்
Updated on : 26 October 2021

சிவஞானம் பிலிம் புரொடக்சன் சார்பில் சிவஞான ஹரி---- 

மற்றும் எம்.பி.அழகன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.



 



சரவணனாக கதாநாயகன் விஜீத் அறிமுகமாகிறார்

இதில் இவருக்கு நான்கு ஜோடிகள் . டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களை சேர்ந்த மாடல் அழகிகளான ஹமைரா பரத்வாஜ், நதியா . நேசி, ஸ்டெபி ஆகிய நால்வர் தான் அவர்கள்.



 



மேலும் இதில் முத்துக்காளை, கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரநாத், விஜய்கணேஷ், பயில்வான் ரங்கநாதன், வைகாசி ரவி, சுப்புராஜ், பிகில் வேணி, பேபி அக்சயா, கேசவன், ஜோதிராஜ் ஆகியோருடன் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவஞான ஹரி, மற்றும் சுருட்டு சுடலையாக இயக்குநர் சிவராகுல் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.



 



பவர் சிவா, அட்சயா ஆனந்த் நடன பயிற்சியையும், ராம்நாத் படத்தொகுப்பையும், தஷி - வசந்த் இசையையும், லாவண்யா, சீனிவாசன்,  பாடல்களையும், , விஜய் ஜாக்குவார் சண்டை பயிற்சியையும், பகவதி பாலா ஒளிப்பதிவையும் கவனித்துள்ளனர்.



 



" சில்லாட்ட" படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகும் சிவராகுல் படத்தை பற்றி கூறியதாவது 





" சில்லாட்ட" என்ற வழக்குச் சொல் தென்தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளதாகும்.

சில்லாட்ட என்பது பனைமரத்தை சார்ந்தது. பனைமரத்தில் உள்ள ஓலைகளையும்  மட்டைகளையும்  தாங்கி நிற்கும் வலைதான் ,சில்லாட்ட. அந்த காலத்தில் தண்ணீர் பதனீர் போன்ற திரவ பொருள்களை சல்லடை செய்வதற்கு இந்த சில்லாட்டயையே பயன் படுத்தினார்கள்.



 



காலபோக்கில் சில்லாட்டயையே மக்கள் மறந்து புதுவிதமான செற்கை சில்லாட்டைகளை உருவாக்கி விட்டார்கள்.



 



அப்படிப்பட்ட புனிதமான பனைதொழிலை அழித்து  சுருட்டு சுடலை செங்கல் சூலையை எழுப்பி தான் செய்யும் சமூகத்திற்கு விரோதமான தொழிலுக்கு பயன்படுத்துகிறார். இதனால் பனை தொழிலை செய்துவரும் சரவணன் மற்றும்  பனை தொழிலையே நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. 

தனது தொழிலுக்கு சரவணன் மிகப்பெரிய இடைஞ்சலாக இருப்பது சுருட்டு சுடலைக்கு தெரிய வருகிறது .



 



இதனால் சரவணனை போட்டுத்தள்ள  சுருட்டு சுடலை களத்தில் குதிக்கிறான். அதேநேரத்தில் தனது பனைதொழிலை  மீட்பதற்கு சரவணன் களத்தில் குதிக்கிறான்.

இறுதியில் வெற்றிபெற்றது யார் என்பதை கிராமிய சூழலில் மண்வாசனை மாறாமல் படமாக்கி இருக்கிறேன்".என்று கூறினார்.



 



தென்தமிழகத்தில் வளர்ந்துள்ள "சில்லாட்ட" விரைவில் திரைக்கு வர உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா