சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

ஜெய் பீம் பார்க்க இனியும் காத்திருக்க முடியாது! காரணம்...
Updated on : 27 October 2021

ஒவ்வொரு பண்டிகையும் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரும். அதுவும் தீப ஒளித் திருநாள் என்பது புதிய தொடக்கம், கொண்டாட்டத்துக்கான நாள். இந்த தீபாவளியில், அமேசான் ப்ரைம் வீடியோ அதன் வாடிக்கையாளர்களுக்காக சூர்யா நடிக்கும் ’ஜெய் பீம்’ திரைப்படத்தை கொண்டு வருகிறது. வாய்மையே வெல்லும் என்ற நம்பிக்கையூட்டும் நற்செய்தியை பண்டிகை கால மனோபாவத்துக்கு ஏற்ப ஜெய் பீம் மூலம் கொண்டு வருகிறது.



 





அண்மையில் வெளியான ஜெய்பீம் படத்தின் டீஸரே இது ஒரு நீதிமன்றம் சார்ந்த கதை என்பதையும், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான கதை என்பதையும் சொல்லியிருக்கிறது.



 





இப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குரலற்றவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க உண்மையைக் வெளிக்கொணர வழக்கறிஞர் சந்துரு அயராது பாரம் சுமக்கிறார். இத்தகைய சக்தி வாய்ந்த கதையம்சமே போதும், ஜெய் பீம் படத்தைத் தவறவிடக் கூடாது என்பதை உணர்த்த.... ஆனால் இத்துடன் முடிந்துவிடவில்லை. இந்தப் படத்தை தவறவிடக் கூடாது என்பதற்கு இன்னும் 5 காரணங்கள் இருக்கின்றன.



 



 











புதிய அவதாரத்தில் சூர்யா:



ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கட்டிப்போட்ட சூர்யா அதன் பின்னர் தன்னை ஒரு பாக்ஸராக, தொழில்முனைவராக என பல கதாபாத்திரங்களில் நிரூபித்தார். அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் அனைத்திலும் வெற்றி கண்டிருக்கிறார். ஒவ்வொரு முறை திரையில் வரும்போதும் அவர் நம்மை ஆச்சர்யபட வைக்கிறார். ஜெய் பீம் ட்ரெயலரில் நாம் சூர்யாவை, ஒரு பன்முகத்தன்மை கொண்ட நடிகரை அழுத்தமான வழக்கறிஞராகப் பார்க்கவுள்ளோம். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக எந்த அளவுக்கும் அவர் செல்வார் என்பதை அறிய முடியும்.



 





ஆழமான நடிப்பு, அனல் பறக்கும் வசனம் என அசத்தியிருக்கிறார். நிச்சயம் இந்த புதிய கதாபாத்திரத்திலும் அவர் ரசிகர்களின் நெஞ்சை அள்ளுவார்.



 





சிறப்பான நடிகர் பட்டாளம்:



படத்தில் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா உலா வரும் அதே வேளையில், பிரகாஷ் ராஜ், லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், ராவ் ரமேஷ் எனப் பலரும் நடித்திருப்பார்கள். ஒரு நல்ல கதை பாதி வெற்றியைத் தரும். ஆனால் அதை கொண்டு சேர்க்க நல்ல நடிகர்கள் வேண்டும். அப்போது தான் உயிர் கிடைக்கும். ட்ரெய்லரைப் பார்க்கும் போதே நடிகர்கள் தங்கள் உழைப்பை முழுவீச்சில் பாய்ச்சியிருப்பதைக் காண முடியும்.



 



 











கேமராவுக்குப் பின்னால் அசாத்திய திறமை..



படத்தின் முதல் காட்சி தொட்டு கடைசிக் காட்சி வரை கேமராவின் மாய வித்தை நம்மைக் கட்டிப்போடும். இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார் தா.செ.ஞானவேல். இவர் பத்திரிகையாளராக இருந்து திரைத்துறைக்கு வந்தவர். அவர் சூர்யாவின் கதாபாத்திரத்துக்காக நிறைய மெனக்கிடுதல் செய்துள்ளார். அவருடன் கேமராவைக் கையாண்டிருக்கும் எஸ்.ஆர்.கதிர் ஒரு தேர்ந்த கலைஞர்.



 





இசையமைப்பாளர் சீன் ரால்டன், எடிட்டர் ஃபிலோமின் ராஜா என அனைவருமே உண்மையின் மாண்பை சொல்லும் இந்தப் படத்திற்கு மெருகேற்றியுள்ளனர்.



 





உணர்வுகளைத் தூண்டும் இசை:



ஜெய் பீம் படத்தின் முதல் பாடலான பவர் பாடலை அறிவு  பாடியிருக்கிறார். பாடலுக்கு சீன் ரால்டன் இசையமைத்துள்ளார். அதிரடி பாடலான இது அனைவரையும் தாளம் போட்டு ஆட வைக்கும். தல கோதும் என்ற இரண்டாவது பாடல், பிரதீப் குமாரால் பாடப்பட்டுள்ளது. ராஜூமுருகன் எழுதியுள்ளார். மென்மையான மெலடிப் பாடலாக இது இதயத்தை வருடும். நீதிக்கான பயணத்தை நம் கண் முன்னே நிறுத்தும். இந்த இரண்டு பாடல்களும் மிகவும் அழுத்தமானவையே.



 





பரபரப்பான நீதிமன்ற காட்சிகள்:



நீதிமன்றக் காட்சிகளைக் காண்பதில் எப்போதுமே திரை ரசிகர்களுக்கு தனி ஆர்வம் இருக்கும். அதுவும் அழுத்தமான நீதிமன்றக் காட்சிகள் என்றால் கேட்கவா வேண்டும். ஜெய் பீமில் நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் இடையேயான வாதவிவாதங்கள் நீதிமன்ற அறைக் காட்சிகளாக ஆழமாக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ட்ரெய்லரில் நாம் பார்த்தபோது ஏற்பட்ட தாக்கம் படம் முழுவதுமே நமக்கும் ஏற்படும். ரசிகர்களை நிச்சயமாக சீட்டின் நுணியில் அமரவைத்து பார்க்க வைக்கும்.



 





திரைப்படத்தை தா.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். ஜோதிகா, சூர்யா இணைந்து அவர்களின் 2டி என்டர்டெய்ன்மென்ட் பேனரில் தயாரித்துள்ளனர்.  'ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகிறது. ஜெய் பீம் மொத்தத்தில் சக்தி வாய்ந்த திரைப்படம். காட்சிகளும் அது கடத்தும் உணர்வுகளும், அழுத்தமான வசனங்களும் அனைவரையும் சிந்திக்க வைக்கும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா