சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

வேலம்மாள் பள்ளியில் நடைபெற்ற தீபாவளி குறித்த பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழிச்சி
Updated on : 28 October 2021

முகப்பேர் வேலம்மாள் பள்ளி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையுடன் இணைந்து நடத்திய பாதுகாப்பான தீபாவளி பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு 26.10. 21 அன்று வேலம்மாள் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தீப ஒளித்திருநாளாம்  தீபாவளி அன்று பட்டாசு வெடி விபத்துகளை தவிர்த்து தீபாவளிக் கொண்டாட்டங்களை மிகுந்த பாதுகாப்புடன் கொண்டாட மாணவர்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகத் தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் இணை இயக்குனர் திருமதி. N. பிரியா ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட அலுவலர் திரு. சரவணன் அவர்கள் கூடுதல் மாவட்ட அலுவலர்கள் கார்த்திகேயன் மற்றும் சூர்யபிரகாஷ் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விழா நிகழ்வினை தனது உரையுடன் இனிதே துவங்கிய சிறப்பு விருந்தினர் திருமதி      என். பிரியா ரவிச்சந்திரன் அவர்கள் மாணவர் மனம் கவரும் வகையில் பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுவது பற்றிய அறிவுரைகளை எடுத்துரைத்து அவர்களை ஊக்குவித்தார். அதன்பின் தொடர்ச்சியாக தீயணைப்பு வீரர்கள் பட்டாசுகளை அரசாங்க விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் வெடிப்பது எவ்வாறு என்பதை தாமே முன்னின்று பட்டாசுகளை வெடித்து ஒத்திகை செய்து காண்பித்தார். 



 





 



பல்வேறு உத்திகளை அறிமுகப்படுத்திய வீரர்கள் முதன்மையாக தீயணைப்பான்களின் செயல்முறை விளக்கம் எண்ணெய்த் தீ விபத்தினை இருசக்கர வாகனத்தின் உதவியுடன் அணைக்கும் புதிய உத்தி குடிசை தீ மற்றும் மனிதனின் மீதான தீ இவற்றை அணைக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை செய்து காண்பித்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ண நீர்க் கண்காட்சியுடன் நிறைவுசெய்தனர். இந்தச் செயல்முறைகள் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய ஒரு பரந்த வழிகாட்டலை வழங்கின.



 



இறுதியாகத் தமிழ்நாடு தீயணைப்புக் குழுவினரின் மேற்பார்வையில் மாணவர்களுக்கு பட்டாசுகள் வெடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பல ஆயிரம் மாணவர்கள் கண்டுகளித்தனர். வேலம்மாள் பள்ளி முன்னெடுத்த இந்த உன்னதமான பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுங்கள் என்ற நிகழ்வு சமூக அக்கறையுடன் கூடியதாக அமைந்திருந்தது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா