சற்று முன்

கார்த்தியின் வித்தியாசமான தோற்றத்தில் 'வா வாத்தியார்' படத்தின் டீஸர் வெளியானது!   |    இந்தியாவின் முதல் பான்-இந்திய நட்சத்திரமானது எப்படி? 22 வருட திரை வாழ்க்கை பற்றி பிரபாஸ்   |    டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'பாராசூட்' டீசரை வெளியிட்டுள்ளது!   |    ஜப்பான் நாட்டில் வெளியிடப்பட உள்ள 'கல்கி 2898 கிபி'!   |    ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படத்தில் ஒப்பந்தம்!   |    #NaniOdela2 திரைப்படத்திற்கு 'தி பாரடைஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது!   |    'அமரன்' பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனுஷின் #D55   |    ராம் சரணின் ஸ்வாக், ஸ்டைல் மற்றும் மாஸ் என அதிரடியாக கலக்கும் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர்!   |    அரசாங்கத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து வரும் ராதாரவி!   |    அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நிரபராதி என விடுவிக்கப்பட்டார் #நிவின்பாலி !   |    2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வரலாற்றின் சிறப்பு மிக்க பக்கத்தைக் காணத் தயாராகுங்கள்!   |    நடிகர் பிரபாஸ் எழுத்தாளர்களுக்காக துவக்கி வைத்த ‘தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்’ இணையதளம்!   |    'கேம் சேஞ்சர்' பட கூட்டணியின் மாஸ் அப்டேட்!   |    நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மெகாஹிட் 'ஏ.ஆர்.எம்' திரைப்படம்!   |    கேபிஒய் பாலா மற்றும் நியதி நடிப்பில் காதலை கலகலப்பாக சொல்லும் பாடல் 'ராக்காயி'   |    ‘பிரேக் ஃபாஸ்ட்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கும் நடிகை ரோஸ்மின்!   |    3 ஆயிரம் கோடி வசூலைக் கடந்த திரைப்படங்களைத் தந்த இந்தியாவின் ஒரே நடிகர் பிரபாஸ்!   |    நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் 'தண்டேல்' திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது!   |    ZEE5 இல் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வரும் 'ஐந்தாம் வேதம்’ சீரிஸ்!   |    யூனிஃபார்ம் அணிந்தாலே வேறு மாதிரியான கம்பீர உணர்வு நமக்கு வரும் - போலீசாக நடித்த நகுல் பேச்சு   |   

சினிமா செய்திகள்

பிரமாண்டத்தின் உச்சத்தை தொட்ட இயக்குநரின் விளம்பரம் - வியப்பில் மக்கள்!
Updated on : 30 October 2021

நடிகர், கவிஞர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகத்திறன் கொண்டவராக திகழும் இ.வி.கணேஷ்பாபு,‘கட்டில்’ என்ற திரைப்படத்தை இயக்கி,தயாரித்து நாயகனாகவும் நடித்திருக்கிறார். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் 

திரையிடப்பட்டு விருதுகளை வென்று வரும் ‘கட்டில்’ திரைப்படம் விரைவில்  தியேட்டர்களில் வெளியாக உள்ளது.



 



இந்த நிலையில், இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு, ‘காதி கிராப்ட்’ நிறுவனத்தின் பட்டு புடவைகளுக்காக இயக்கியிருக்கும் விளம்பரபடம் பிரம்மாண்டத்தின் உச்சத்தை தொட்டிருப்பதோடு, அனைத்து முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் 

திரையரங்குகளிலும் காண்போரை வியப்படைய செய்து வருகிறது.



 



எத்தனையோ பிரமாண்டமான விளம்பரப்படங்கள் வெளியாகிக் கொண்டிருந்தாலும், இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு இயக்கியிருக்கும் காதிகிராப்ட் நிறுவனத்தின் பட்டு புடவை விளம்பரப்பாடல்  புதிய சிந்தனையோடு உருவாகியிருப்பது தான் அதன் தனி சிறப்பு.



 



காதிகிராப்ட் பட்டு புடவை தரத்தில் மட்டும் உயர்ந்தது அல்ல, அந்த புடவை நெய்யும் தொழிலாளர்களின் கைவண்ணத்தினாலும் உயர்ந்ததாக கருதப்படுகிறது.மிக நலிவடைந்த நெசவாளர்களால் நெய்யப்படும் காதி கிராப்ட் பட்டு 

புடவைகளை வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும், அதை நெய்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.



 



எளியவர்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை பிரத்யேகமான அனைவரும் வாங்கும் விலைகளில் கிடைக்கும் காதி கிராப்ட் பட்டு புடவைகளின் மற்றொரு தனி சிறப்பு 

என்னவென்றால், 10 வருடங்களுக்குப் பிறகும், அந்த புடவைகளில் இருக்கும் வெள்ளி சரிகைகளின் மதிப்பு,புடவை வாங்கிய விலைக்கு சமமாக இருப்பதோடு, சில நேரங்களில் புடவை வாங்கிய விலையை விட கூடுதலான தொகையும் கிடைக்கும் என்பது உறுதி.



 



இத்தகைய தரம் வாய்ந்த காதி கிராப்ட் பட்டு புடவைகளை, வழக்கமான விளம்பர படங்களைப் போன்று அல்லாமல், புதிய சிந்தனையோடு படமாக்கியிருக்கும் இயக்குநர் இ.வி.கணேஷ்பாபுவின், புதிய முயற்சிக்கு பெரும் வெற்றி கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.



 



ஆம், சுமார் 1400 வருடங்கள் பழமை வாய்ந்த காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் இந்த விளம்பர படத்தை இயக்குநர் கணேஷ்பாபு படமாக்கியிருக்கிறார். இதுவரை எந்த ஒரு திரைப்படம் மற்றும் விளம்பர படங்களின் படப்பிடிப்பும் நடந்திராத இக்கோவிலில் 

காதி கிராப்ட் பட்டு புடவையின் விளம்பர படத்தை இயக்குநர் கணேஷ்பாபு படமாக்கியிருக்கும் விதத்தையும், அக்கோவிலின் பிரமாண்டத்தையும் 40  வினாடிகளே ஓடும் இந்த விளம்பர படத்தைக்கண்டு பலர் வியப்படைந்ததோடு,அவரை தொடர்பு கொண்டு பாராட்டியும் வருகிறார்கள். 



 



எத்தனை கோடி ரூபாய் செலவு செய்து, எப்படிப்பட்ட விளம்பர படத்தை எடுத்தாலும், கணேஷ்பாபு இயக்கியிருக்கும் இந்த விளம்பர படத்தின் பிரமாண்டத்தை நெருங்க முடியாது. காரணம், இந்த விளம்பர படம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் 

படமாக்கப்பட்டிருப்பதால் பிரமாண்டத்தின் உச்சத்தை தொட்டுள்ளது.



 



விளம்பர படத்தை காட்சிப்படுத்தியதில் மட்டும் அல்ல, அதில் இடம் பெறும் பாடலை பதிவு செய்வதில் கூட, பாரம்பரியத்தை கடைப்பிடித்திருக்கிறார் இயக்குநர். பாடலை பாடிய மகதியை பட்டு புடவை அணிந்து பாட வைத்து மேக்கிங் வீடியோ எடுத்துள்ளார் பின்னணி பாடகியாக சுமார் 20 ஆண்டுகளாக பயணித்துக் கொண்டிருக்கும் பாடகி மகதி, எத்தனையோ திரைப்படங்கள் மற்றும் விளம்பர படங்களுக்காக  பாடியிருந்தாலும், பாடல் பதிவின் போது இதுவரை சுடிதார் மற்றும் நவநாகரீக உடைகளை மட்டும் அணிந்து பாடியிருக்கிறார். காதி கிராப்ட் பட்டு புடவை விளம்பர படத்தின் பாடல் பதிவுக்காக முதல்முதலாக புடவை அதுவும் பட்டு புடவை உடுத்தியிருப்பதும் பேசுப்பொருளாகியிருக்கிறது.



 



இந்த விளம்பர படத்தை இயக்கியிருக்கும் இ.வி.கணேஷ்பாபு, அதில் இடம்பெற்றுள்ள பாடலையும் எழுதியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, சுமார் 120-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ராணா ஒளிப்பதிவு 

செய்துள்ளார்.



 



கொரோனா காலங்களில் பல விழிப்புணர்வு பாடல்களை எழுதி இயக்கி வெளியிட்ட இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு, தமிழக அரசுக்காக பல விழிப்புணர்வு படங்களை இயக்கி பலரது பாராட்டை பெற்றதோடு, ஒட்டு மொத்த விளம்பர உலகின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.



 





 





 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா