சற்று முன்

கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த 'ஓ மணப்பெண்ணே” திரைப்பட தயாரிப்பாளர்கள்!
Updated on : 02 November 2021

A Studios LLP சார்பில் தயாரிப்பாளர் சத்யநாராயணா கொனேரு, ரமேஷ் வர்மா பென்மட்ஷா மற்றும் A Havish Productions இருவரும் நடிகர் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் “ஓ மணப்பெண்ணே” படத்திற்கு கிடைத்திருக்கும் அற்புதமான வரவேற்பில், மிகப்பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். Disney Plus Hotstar ல் வெளியான இத்திரைப்படம் உலகம் முழுதும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த வரவேற்பை கொண்டாடும் வகையில், படத்தை வெற்றிபெறச்செய்த ரசிகர்களுக்கு, தயாரிப்பாளர்கள்  தங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தரமான கதைகளுக்கு எப்போதும் சிவப்பு கம்பள வரவேற்பு தரும், தமிழ் ரசிகர்களின் மீதான பெரும் நம்பிக்கையில், தங்கள் திரைப்பயணத்தை தமிழ் சினிமாவில் தொடர திட்டமிட்டுள்ளார்கள்.  மிக விரைவில் சில பெரிய திரைப்படங்களை தமிழில் அறிவிக்கவுள்ளார்கள். இத்தயாரிப்பு நிறுவனம்  தெலுங்கில் ரவிதேஜா, அர்ஜூன் நடிப்பில், தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைக்கும் கில்லாடி படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. 



 





 





 



 





 



“ஓ மணப்பெண்ணே” திரைப்படம் Disney Plus Hotstar ல் 2021 அக்டோபர் 22 அன்று வெளியானது. இத்திரைப்படம் தெலுங்கில் தருண் பாஸ்கர் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘பெல்லி சூப்புலு’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இயக்குநர் கார்த்திக் சுந்தர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகேர் இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, கிருபாகரன் படத்தொகுப்பு செய்துள்ளார். முரளி கிருஷ்ணா எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராக பணியாற்றியுள்ளார். 



 



தயாரிப்பாளர் ரமேஷ் வர்மா பென்மட்ஷா, தமிழில் பிரமாண்ட வெற்றி பெற்ற ‘ராட்சசன்’ திரைப்படத்தின், அதிகாரப்பூர்வ ரீமேக்கான தெலுங்கு திரைப்படம் Rakshasudu படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடதக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா