சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

நவம்பர் 20 அன்று,வெளி வருகிறது இந்த ஆண்டின் மிகச்சிறந்த பெப்பி பாடல்
Updated on : 19 November 2021

Trident Arts நிறுவன தயாரிப்பாளர்  R.ரவீந்திரன் தயாரிப்பில், அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், A.ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள, “என்ன சொல்ல போகிறாய்” படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான  ‘CUTE PONNU’ 2021 நவம்பர் 20 அன்று வெளியாகிறது.



 



Trident Arts நிறுவன தயாரிப்பாளர்  R.ரவீந்திரன் தயாரிப்பில், அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “என்ன சொல்ல போகிறாய்” படத்தின் எந்த ஒரு அறிவிப்பும், திரை ஆரவலர்களிடையேயும் இசை காதலர்களிடமும்  பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மனம் மயக்கும் ரொமாண்டிக் காமெடிகள் இந்நாட்களில் மிக அரிதாகவே திரையில் நிகழ்கிறது. ஆனால் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் டீசர் மிக அழுத்தமாக காதல் உணர்வை காற்றில் பரப்பியது. அதனை தொடர்ந்து வெளியான முதல் சிங்கிள் பாடல் “ஆசை” மொத்த நகரத்தையும் மயக்கத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தற்போது படக்குழு படத்தின் இரண்டாவது சிங்கிளான  ‘CUTE PONNU’  பாடலின் வெளியீட்டை அறிவித்துள்ளது. இப்பாடல் 2021 நவம்பர் 20 அன்று வெளியாகிறது.



 



பாடல் குறித்து இயக்குநர்  A.ஹரிஹரன் கூறியதாவது…



 



இது ஒரு பார்டியில் நிகழும் பெப்பி பாடல், இப்பாடலில் அஷ்வின் குமார், புகழ், தேஜு அஷ்வினி மற்றும் அவந்திகா மிஸ்ரா இணைந்து நடனமாடியுள்ளார்கள். இப்பாடலில் இளமை துள்ளலும் வண்ண கோலாகலமும் இணைந்து நடக்கும் மேஜிக்கை நிகழ்த்தியுள்ளார் தன் குரலில் பாடலை பாடியுள்ள இசையமைப்பாளர் அனிருத். விவேக் மெர்வின் கூட்டணியில் வெளியாகும் பெப்பி பாடல்கள், டான்ஸ் ஃப்ளோர்களை அதிரச்செய்யும்  அந்த வகையில் இந்தப்பாடல்,  பார்டியில் அனைவரையும் உற்சாகத்தின் உச்சிக்கு அழைத்து செல்லும் பாடலாக இருக்கும். மேலும் படத்தின் இளமை துள்ளலையும் வண்ணமய தோற்றத்தையும் பிரதிபலிப்பதாக இப்பாடல் இருக்கும். இந்த தலைமுறையினரை எளிதில் கவரும் பாடலாசிரியர் தெருக்குரல் அறிவு இப்பாடலை எழுதியுள்ளார். முன்பே கூறியபடி இசையமைப்பாளர் அனிருத் தனது அட்டகாசமான குரலில் மாயத்தை நிகழ்த்தியுள்ளார்.



 



இயக்குநர்   A.ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ள   “என்ன சொல்ல போகிறாய்” படத்தை Trident Arts நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  R.ரவீந்திரன் தயாரித்துள்ளார். தொழில்நுட்ப குழுவில்  ரிச்சர்ட் M நாதன் (ஒளிப்பதிவு ), G.துரைராஜ் (கலை), மதிவதனன் (எடிட்டர்), பாலகுமாரன் M (உரையாடல்), அப்சர் R (நடன அமைப்பு), A கீர்த்திவாசன் (ஸ்டைலிஷ்), ஜெயராமன் (தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்), S.ரூபினி (புரடக்சன் கண்ட்ரோலர் ) , D.செல்வராஜ்-SN அஷ்ரஃப் (தயாரிப்பு நிர்வாகி), சுரேஷ் சந்திரா -ரேகா D one  (மக்கள் தொடர்பு), Beat Route/ஹரிஹரன் (கிரியேட்டிவ் & மார்க்கெட்டிங்), தண்டோரா (பப்ளிசிட்டி டிசைன்ஸ்).

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா