சற்று முன்

கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

ஓரின சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் இசை ஆல்பம்! விரைவில் சரிகமா ஒரிஜினல்ஸில்
Updated on : 20 November 2021

கௌரி கிஷன் என்று பிரபலமாக அறியப்படும் 96 திரைப்பட புகழ் கௌரி ஜி கே மற்றும் டிக்கிலோனா புகழ் அனகா ஆகியோர் மகிழினி என்ற இசை ஆல்பத்திற்காக இணைந்துள்ளனர்.



 



வி ஜி பாலசுப்ரமணியன் எழுதி இயக்கி, ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌஸ்துபா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில், ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக உருவாகியுள்ள மகிழினி நவம்பர் 22 அன்று சரிகமா ஒரிஜினல்ஸால் வெளியிடப்படும்.



 



மகிழினியில் கௌரியும் அனகாவும் ஓரின சேர்க்கையாளர்களாக நடிக்கிறார்கள். இருவருக்கும் இடையேயான உறவு குறித்து அவர்களது குடும்பத்தினரை புரிந்துகொள்ள வைப்பதற்காக எடுக்கும் முயற்சிகளில் அவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதே ஆறு நாட்களில் படமாக்கப்பட்ட மகிழினி ஆல்பத்தின் கருவாகும்.



 



அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் இணை இயக்குநராக பணியாற்றி வரும் மகிழினி ஆல்பத்தின் இயக்குநர் பாலசுப்ரமணியன் கூறுகையில், "எல்ஜிபிடி என்று அழைக்கப்படும் ஓரின சேர்க்கையாளர்களை பற்றி சமுதாயத்திற்கு புரிய வைக்க வேண்டும் என்பதுதான் மகிழினியின் பின்னணியில் உள்ள எண்ணம் ஆகும். இந்த ஆல்பத்திற்காக அனாமார்பிக் லென்ஸை முதன்முறையாக பயன்படுத்தியுள்ளோம். ஒட்டுமொத்த குழுவின் ஈடுபாடு மற்றும் ஆதரவின் காரணமாக ஆல்பம் நன்றாக உருவாகியுள்ளது," என்றார்.



 



 





 



இது குறித்து மேலும் பேசிய அவர், “சென்னையை சேர்ந்த மலர் (கௌரி) மற்றும் தில்லியில் இருந்து வரும் இந்துஜா (அனகா) பரதநாட்டியம் மீது கொண்ட பற்றால் சந்திக்கிறார்கள். ஒத்திகை ஒன்றின் போது அவர்களுக்குள் காதல் தீ பற்றுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதே மகிழினி," என்றார்.



 



மகிழினிக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுத, கீர்த்தனா வைத்தியநாதன் பாடியுள்ளார். விஷ்வகிரண் நடனம் அமைத்துள்ளார்.



 



"கௌரி மற்றும் அனகா ஆகியோரை மகிழினிக்காக நாங்கள் அணுகியபோது, அவர்கள் அதை சரியாக புரிந்துகொண்டு உடனடியாக சம்மதம் தெரிவித்தனர். மிகவும் சிறப்பான நடிப்பை அவர்கள் இருவரும் வெளிப்படுத்தியுள்ளனர். கோவிந்த் வசந்தாவின் இசை, மதன் கார்க்கியின் பாடல் வரிகள் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதனின் இசையமைப்பு ஆகியவை சொல்ல விரும்பிய கருத்தை சரியாக சொன்னதோடு, ஆல்பத்தை புதிய உயரத்திற்கு இட்டு சென்றுள்ளன.  



 



விஷ்வகிரணின் நடன அமைப்பு மகிழினியின் மற்றொரு சிறப்பம்சமாக இருக்கும். அருண் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு மிகப்பெரிய பக்கபலம். இந்த ஆல்பத்தை தயாரிக்க முன்வந்த ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌஸ்துபா மீடியா வொர்க்ஸுக்கு நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மகிழினியை சரிகமா வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி” என்று பாலசுப்ரமணியன் மேலும் கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா