சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV மற்றும் சன்னி போகலாவின் ஹூட்டில் இணைந்த தமிழ்நாடு வெதர்மேன்
Updated on : 30 November 2021

சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV மற்றும் சன்னி போகலா இணைந்து சமீபத்தில் தொடங்கிய சமூக வலைத்தளமான ஹூட், சக்திவாய்ந்த குரல்களின் சமூகமாய் மாறியுள்ளது. அதில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இணைந்துள்ளார்.



 



திரு.பிரதீப் ஜானை வரவேற்று சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV கூறியதாவது,"தமிழகத்தின் வானிலையைத் துல்லியமாகக் கணித்தல், பொது அக்கறையோடு மக்களுக்கு சரியான நேரத்தில் வானிலை தகவல்களை வழங்கி எச்சரித்தல் ஆகியவற்றில் பிரதீப் ஜானின் பங்கு அளப்பரியது. அவரின் குரலை ஹூட்டில் மென்மேலும் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம்." எனக் கூறியுள்ளார்.



 



மேலும், "தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானின் குரலைக் கேட்பது மகிழ்ச்சியாக உள்ளது. வானிலை பற்றின அவரது ஆழமான பகுப்பாய்வு, சமீபத்திய தமிழ்நாடு மழை குறித்த அறிவிப்புகள் பொதுமக்களுக்கு பெருமளவில் பயனளித்துள்ளன. அவர் ஹூட்டில் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது", என ஹூட்டின் இணை நிறுவனர் சன்னி போகலா கூறியுள்ளார்.



 



இதற்கிடையில், பல்வேறு துறைகளைச் சார்ந்த முன்னணி நபர்களும் ஹூட்டில் இணைந்துள்ளனர். மிக எளிய செயல்முறையின் மூலம் ஒருவர் ஹூட்டில் இணைந்து 60 வினாடிகள் (சரிபார்க்கப்பட்ட பயனர்களுக்கு 180 வினாடிகள்) வரை ஆடியோ செய்தியைப் பதிவு செய்து உலகிற்குப் பகிரலாம். பயனர்கள் தங்கள் குரலுக்குத் திரைப்படம் போன்ற அனுபவத்தைக் கூட்டுவதற்கு பின்னணி இசையைச் சேர்க்க ஹூட் அனுமதிப்பது அதன் தனித்துவமான அம்சமாகும். மேலும் ஒரு செய்தியின் காட்சி நுணுக்கங்களை வெளிப்படுத்த புகைப்படத்தை இணைப்பதற்கும் ஹூட் உதவுகிறது. Cloud-Native தொழில்நுட்பத்தினாலான ஹூட், இந்தியாவின் முதல் குரல் அடிப்படையிலான சமூக வலைத்தளம் ஆகும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா