சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

பிரபாஸின் ராதே ஷியாம் படத்திலிருந்து காதல் ததும்பும் கீதம் வெளியானது
Updated on : 02 December 2021

யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் திரைப்படத்திலிருந்து 'தரையோடு தூரிகை' எனும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 



 



அகில இந்திய திரைப்படமான ராதே ஷியாமின் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக காதல் ததும்பும் கீதமான 'தரையோடு தூரிகை' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 



 



சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள இப்பாடலில் படத்தின் நாயகனான பிரபாஸ் நாயகி பூஜாவை இருசக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். இதயம் தொடும் இசை, இடங்களுக்கு ஏற்ற பொருத்தமான உடை அமைப்பு, கண்ணைக்கவரும் ஒளிப்பதிவு ஆகியவை இதை ஒரு கனவு பாடலாக ஆக்கி உள்ளன.



 



பாடலின் முக்கிய அம்சமாக நாயகன் மற்றும் நாயகிக்கு இடையேயான 'கெமிஸ்ட்ரி' உள்ளது. ரசிகர்களை இது மிகவும் கவரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஏனென்றால், இப்பாடலின் போஸ்டர் மற்றும் முன்னோட்டம் வெளியான போதே ரசிகர்கள் பரவசத்தில் ஆழ்ந்தது குறிப்பிடத்தக்கது.  



 





ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். 'தரையோடு தூரிகை' பாடல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதோடு மட்டுமில்லாமல் படம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.



 



ஜனவரி 14, 2021 அன்று பல்வேறு மொழிகளில் ராதே ஷியாம் வெளியாகிறது. யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ள இப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா