சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

வட இந்தியாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் 'கபளீகரம்'.
Updated on : 03 December 2021

நாட்டில் எவ்வளவோ குற்றங்கள் நடக்கின்றன சில குற்றங்கள் காவல் துறைக்கே பெரும் சவாலாக இருக்கும். அப்படி காவல்துறையைக் கதிகலங்க வைத்த லாரி கொள்ளை என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'கபளீகரம்'.



 



வட இந்தியாவில் லாரிகளைத்  திட்டமிட்டு ஒரு கும்பல் திருடிக் கொண்டுபோகும் குற்றங்கள் நடைபெற்று வந்தன.பல்வேறு சவால்கள், சிரமங்களுக்கிடையே இதைக் காவல்துறை கண்டுபிடித்தது பரபரப்பூட்டியது. இந்தச் சம்பவத்தை மையமாக வைத்துத்தான் 'கபளீகரம்' படம் உருவாகியிருக்கிறது



 



இப்படத்தை மகிழ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தக்ஷன் விஜய் நாயகனாக நடித்து இயக்கி உள்ளார்



 



இப்படத்திற்கு ஒளிப்பதிவு செல்வம், இசை கார்த்திக்.



 



ஒரு நேர்மையான துடிப்பான காவல்துறை அதிகாரியாக நாயகன் தக்ஷன் விஜய் நடித்துள்ளார். மேலும் மைம் கோபி, யோகிராம் மற்றும் பலர்  நடித்துள்ளனர். 



 



 இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பெங்களூர், கிருஷ்ணகிரி, ஓசூர், மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது. 



 



கதை கிருஷ்ணகிரியிலிருந்து கொல்கத்தா செல்லும் நெடுஞ்சாலையில்  நடப்பதால் பெரும் பகுதி படப்பிடிப்பு நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.



 



"சில உண்மைச் சம்பவங்கள் கற்பனையை மிஞ்சும் அளவிற்கு இருக்கும். இப்படிப்பட்ட லாரி திருடும் கும்பல் கல்கத்தாவில் சிக்கியது. இந்தக்கும்பல் லாரிகளைத் திருடும் போது லாரி ஓட்டி வந்த ஓட்டுநரையும் உடனிருக்கும் கிளீனரையும் கொலைசெய்து எரித்து அடையாளம் தெரியாமல் ஆக்கி விடுவார்கள்.எந்தத் தடயமும் இருக்காது அவர்களின் செயல்களைப் பார்த்த போலீசார் அது கற்பனையையே மிஞ்சுவதாக இருந்ததாக வியந்துள்ளனர். அந்தச் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது" என்கிறார் இயக்குநர் தர்ஷன் விஜய்.



 



இப்படத்தில்  சோகப் பாடல் ஒன்றும் மெலோடி பாடல் ஒன்றும் என இரண்டு பாடல்கள் உள்ளன. ஒன்றை மதுபாலகிருஷ்ணனும் இன்னொன்றை ஸ்ரீகாந்த் ஹரிசரணும் பாடியுள்ளனர்.சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளனர்.



 



படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா