சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

சுகாதாரத்துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் வெளியிட்ட சிக்கில் குருசரணின் 'எழுவோம்' பாடல்
Updated on : 03 December 2021

பிரபல பாடகர் சிக்கில் குருசரண் மற்றும் நண்பர்களின் 'எழுவோம்' என்ற பாடலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் 3 டிசம்பர், 2021 அன்று வெளியிட்டார்.



 



பெயருக்கு ஏற்றார் போல் ஊக்கமளிக்கும் பாடலாக 'எழுவோம்' அமைந்துள்ளது. கொரோனாவைரஸ் நெருக்கடியில் இருந்து மீண்டு வர மக்கள் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறார்கள் என்பதைப் பற்றிய பாடல் தான் 'எழுவோம்'.



 



அரவிந்தன் ஆர் இயக்கியுள்ள இந்தப் பாடலுக்கு சிக்கில் குருசரண் இசையமைத்து பாடியுள்ளார். ஒளிப்பதிவை வினோத் சௌந்தர் மேற்கொள்ள, படத்தொகுப்பை கவின் ஆதித்யா கையாள பாடல் வரிகளை ராம்நாத் பகவத் எழுதியுள்ளார்.



 



இந்த பாடலின் வரிகள் உணர்வுபூர்வமாகவும், இசையும் குரலும் உற்சாகமூட்டக்கூடியதாகவும், காட்சி அமைப்பு அனைவரையும் கவரும் வகையிலும் உள்ளன.



 



தென்னிந்தியாவிற்கான மலேசியா தூதர் கே சரவணன், கேட் சென்டர்  நிர்வாக இயக்குநர் காரையடி செல்வன், லீப் ஸ்போர்ட்ஸ் ஆலோசகர் ரமேஷ் மற்றும் வீணை வித்வான் ராஜேஷ் வைத்யா ஆகியோர் முன்னிலையில் இந்த பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.



 



டோக்கியோ தமிழ் சங்கம், ஸ்ருசன் டெக்னாலஜி, இன்னோவேட்டிவ், நிகில் முருகன் மற்றும் லீப் ஸ்போர்ட்ஸ் ஆகியோரின் ஆதரவோடு

இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.



 



சிக்கில் குருசரண் பாடிய 'எழுவோம்' பாடலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு எம் சுப்பிரமணியன் டிசம்பர் 3-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னையில் உள்ள தி பார்க் விடுதியில் வெளியிட்டார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா