சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

கடின உழைப்பு, திறமை மற்றும் வசீகரத்தால் திரையில் முத்திரை பதிக்க தயாராகும் 'அவந்திகா மிஸ்ரா'
Updated on : 06 December 2021

வெற்றிகரமான மாடலாக இருந்து மின்னும் திரை நட்சத்திரமானது வரை, அவந்திகா மிஸ்ராவின் பயணம் கடின உழைப்பு, திறமை மற்றும் வசீகர தோற்றத்தால் கட்டமைக்கப்பட்டது எனலாம். 



 



புது தில்லியை பூர்வீகமாகக் கொண்டு பெங்களூருவில் தனது கல்வியை கற்ற இவர், நீலகண்டா இயக்கிய தெலுங்கு படமான மாயா மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். பின்னர் இவர் தருண் ஷெட்டியுடன் இணைந்து மீகு மீரே  மாகு மேமே எனும்  திரைப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்தார். 



 



வியாஷகம், மீகு மாத்திரமே செப்தா மற்றும் பீஷ்மா உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்த அவந்திகா மிஸ்ரா, டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஹரிஹரன் இயக்கத்தில் அஸ்வின்குமார் லட்சுமிகாந்தன் நடிக்கும் என்ன சொல்ல போகிறாய் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.



 



இது தவிர, நெஞ்சமெல்லாம் காதல் மற்றும் டி பிளாக் ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் இன்னும் சில திரைப்படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கி வரும் கல்லூரியை பின்னணியாகக் கொண்ட டி பிளாக் படத்தில் அருள்நிதியுடன் அவந்திகா நடித்து வருகிறார். 



 



"நல்ல கதாபாத்திரங்களை எனக்கு வழங்கி வரும் சுவாரசியமான திரைப்படங்களில் நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். எனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் சவாலான வேடங்களையே நான் எதிர் நோக்குகிறேன். தெலுங்கு ரசிகர்களின் அன்பை பெற்றதற்கு அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். திறமைகளை அங்கீகரிப்பதில் முன்னணியில் உள்ள தமிழ்நாட்டு ரசிகர்களிடம் இருந்தும் அதே அன்பை நான் எதிர்பார்க்கிறேன். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் நான் தொடர்ந்து நடிப்பேன்," என்று அவந்திகா கூறுகிறார். 



 





 





 



தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் போது மொழி சிக்கல் ஏதேனும் அவர் எதிர்கொண்டாரா என்று கேட்டபோது, "கட்டாயமாக இல்லை. கலைக்கு மொழியும், எல்லைகளும் கிடையாது. ஒரு நடிகையாக மொழிக்கு அப்பாற்பட்டு ரசிகர்களை திருப்திப்படுத்துவதே எனது கடமை," என்று அவந்திகா நம்பிக்கையோடு தெரிவித்தார். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா