சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

விரைவில் 'சதுரங்க வேட்டை 2'உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது !
Updated on : 08 December 2021

திரைக்கு வருகிறது “சதுரங்க வேட்டை 2” திரைப்படம்,  ONSKY Technology PVT. LTD நிறுவனத்தின் தயாரிப்பாளர் முத்து சம்பந்தம் வெளியிட, வருகின்ற ஜனவரி மாதம் உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது !



 



\ஒரு தனி நபர், தன் மீதான நம்பிக்கையில், மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு முயற்சியைத் தொடங்கும்போது, ​​அதன் முடிவுகள் கண்டிப்பாக வெற்றியின் உச்சத்தைத் தொடுவது உறுதி, அந்த முயற்சியானது அவர் சார்ந்து இயங்கும் தொழில்துறையின் அந்தஸ்தையும் உயர்த்தும். இது ONSKY Technology PVT. LTD நிறுவனத்தின் தயாரிப்பாளர் முத்து சம்பந்தம் மூலம் உறுதியாகியுள்ளது. மிகச்சமீபத்தில் தான் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கினார். அவரது முதல் தயாரிப்பான “2030”, தமிழ் திரையுலகில்  முதல் முறையாக ஃப்ளாஷ் ஃபார்வர்டு வகை திரைப்படமாக, விறுவிறுப்பான வேகத்தில் உருவாகி  கொண்டிருக்கும் வேளையில், அவர் தற்போது திரைப்பட ரசிகர்களுக்கு, குறிப்பாக ‘சதுரங்க வேட்டை’ படத்தின் தீவிர திரைக்காதலர்களுக்கு ஒரு நல்ல செய்தியைக் கொண்டு வந்துள்ளார். ஆம், நீங்கள் நினைப்பது சரி தான். அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா முக்கிய வேடங்களில் நடித்துள்ள சதுரங்க வேட்டை 2 படத்தின் உரிமையை அவர் வாங்கியுள்ளார். H.வினோத் (வலிமை, நேர்கொண்ட பார்வை, தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் சதுரங்க வேட்டையின் இயக்குனர்) எழுதி, NV நிர்மல் குமார் (விஜய் ஆண்டனியின் ‘சலீம்’ புகழ்) இயக்கிய இந்தப் படத்தை,  தயாரிப்பாளர் மனோபாலாவின் Picture House and Cinema city நிறுவனம் தயாரித்துள்ளது.



 





 



ONSKY Technology PVT. LTD நிறுவனர் திரு.முத்து சம்பந்தம் இது குறித்து கூறியதாவது…

“அடிப்படையில், நான் ஒரு தீவிரமான சினிமா ரசிகன், கிட்டத்தட்ட எல்லா திரைப்படங்களையும் தவறவிடாமல் தீவிரமாகப் பார்க்கிறவன். சதுரங்க வேட்டை திரைப்படம் இந்திய திரைத்துறையில் வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று. இதன் இரண்டாம் பாகம் சதுரங்க வேட்டை 2 வெளிவருவதைப் பற்றி கேள்விப்பட்டபோது, ​​மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது.  குறிப்பாக, அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் நடிப்பில் காட்சி துணுக்குகளை கண்டபிறகு, என்னுள் மிகப்பெரும் ஆர்வம் குடிகொண்டது. இருப்பினும், எதிர்பாராத சூழ்நிலைகளால் படம் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிப்பதைப் பார்த்து, நான் பெரிதும்  ஏமாற்றமடைந்தேன். நான் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியபோது, ​​உள்ளடக்கத்தில் சிறந்த  திரைப்படங்களைத் தயாரிப்பது மட்டும் அல்லாமல், மொழியியல் தடைகள் மற்றும் எல்லைகளை கடந்து வெற்றி பெறும் படங்களை உருவாக்க வேண்டும்  என்று நான் பெரிதும் விரும்பினேன். அப்படியான ஒரு படைப்பு, ரிலீஸாகமல் இருப்பது கண்டு வேதனையுற்றேன். இறுதியில் சதுரங்க வேட்டை 2 படத்தை எங்கள் நிறுவனம் மூலம் வெளியிட  முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மனோபாலா சார், Cinema city கங்காதரன் மற்றும் படம் வெளியாவதைப் பார்க்க  ஆர்வமாக இருந்த பல உன்னத உள்ளங்களுக்கு நன்றி. திரு அரவிந்த் சாமி அவர்களுக்கு அவர் கொடுக்கும் ஒத்துழைப்புக்கு கோடானு கோடி நன்றி. இப்படத்தை வெளியிடும் வாய்ப்பை வழங்கியதற்காக இப்படம் சம்மந்தப்பட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பிரபலமான பழமொழி உள்ளது - சரியான நேரத்தில் மற்றும் சரியான இடத்தில், சரியான விஷயம் நிகழும். சதுரங்க வேட்டை 2 படத்தில் அது நடப்பதைக் கண்டு, நான் மனமார மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்தபோது, ​​பார்வையாளர்களை மகிழ்விக்கும் மற்றும் விமர்சனப் பாராட்டுகளையும் வெல்லும் அனைத்து கூறுகளும இப்படத்தில் இருப்பதை, என்னால் எளிதாக உணர முடிந்தது. இப்போது, ​​படத்தை வெளியிட முயற்சியில்இறுதி பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன, மேலும்  ஜனவரி 2022 இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இபடவெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.



 



அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா உடன், பிரகாஷ் ராஜ், , ராதா ரவி, நாசர், சாந்தினி, ஸ்ரீமன், மனோபாலா, குமரவேல், இ.ராமதாஸ் மற்றும் பல தமிழ் சினிமா முன்னணி நட்சத்திர நடிகர்கள்  சதுரங்க வேட்டை 2 படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா