சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

தேசிய ஹாக்கி அணியில் தமிழக வீரர்கள் இடம் பெற வேண்டும் - விளையாட்டுத்துறை அமைச்சர்
Updated on : 10 December 2021

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெறவுள்ள பதினோராவது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கச் செல்லும் வீரர்களை வாழ்த்தி வீரர்களுக்கு தேவையான உடமைகளை விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்



 



18 நபர்கள் கொண்ட தமிழக ஹாக்கி அணியினருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை அமைச்சர் வழங்கினார்.18 பேர் கொண்ட தமிழக ஹாக்கி அணியின் கேப்டனாக சதீஷ் செயல்பட உள்ளார்.



 



நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை யூனிட் ஆப் தமிழ்நாடு அமைப்பின் தலைவர் சேகர் J மனோகரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது



 









அமைச்சர் பேட்டி



விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்  தமிழகத்தில் இருந்து வருகின்ற 11 ம் தேதி புனைவின் நடைபெற உள்ள ஹாக்கி போட்டியில் பங்கேற்ற செல்லும் வீரர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறினார்



 



இந்திய அளவிலான ஹாக்கி போட்டியில் தமிழக வீரர்கள் இடம்  பெற வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக உள்ளது.எனவே தான் வீரர்களுக்கு சரியான பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளது அவர்களில் 18 பேர் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஹாக்கி வீரர்கள் ஏன் பயணம் வெற்றி பயணமாக இருக்க வேண்டுமென வாழ்த்துக்கள் கூறுவதாக அமைச்சர் தெரிவித்தார்.



 





 



தமிழகத்தில் அனைத்து விதமான விளையாட்டு வீரர்களையும் நேர்மையாக தேர்வு செய்யப்படுகின்றனர்.மாவட்டங்களில் உள்ள விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.உலக அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற  தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணிகள் வழங்கப்பட்டுள்ளன.



 



சிலம்பம் போட்டிகளை பள்ளி அளவில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விளையாட்டு அரங்கம்25 தொகுதிகளில் உள்ளன 209 தொகுதிகளில் நிலம் தேர்வு செய்யப்பட்டவுடன் உள்ளரங்க விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.2022 ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிக்கு தமிழக வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெறும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா