சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

மோகன்லால் நடிப்பில் தேசிய விருது வென்ற மரைக்காயர் – டிசம்பர் 17 முதல் Prime Video-இல் நான்கு மொழிகளில்
Updated on : 13 December 2021

விமர்சன ரீதியாகப் பெறும் பாராட்டு பெற்ற இப் படத்தை இந்தியாவில் உள்ள Prime மெம்பர்கள, டிசம்பர் 17 முதல் , மலையாளம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில்  மொழிகளில் Prime Video-இல் காணலாம்.



 



ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் வெளிவந்துள்ள மரக்கார்: லயன் ஆப் அரபியன் சீ ( மரைக்காயர் – அரபிக்கடலின் சிங்கம்)  திரைப்படத்துடன்  தென்னகத்தின் பிரபல நட்சத்திரம் மோகன்லால் மற்றும் இயக்குனர் பிரியதர்ஷன் ஆகியோரின் மிகவும் வெற்றிகரமான நடிகர்-இயக்குனர் கூட்டணி உங்கள் திரைக்கு வருகிறது.



 



சமீபத்திய மற்றும் பிரத்யேகத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம் விளம்பரமில்லா மியூசிக், இந்தியத்தயாரிப்புகளின் மிகப் பெரிய கலெக்ஷனின் இலவச விரைவான டெலிவரி, சிறந்த டீல்களுக்குமுன்கூட்டிய அணுகல், வரம்பற்ற வாசிப்புக்கு PRIME Reading மற்றும் மொபைல் கேமிங் உள்ளடக்கம் கொண்ட PRIME Gaming இவை அனைத்தும் Prime உறுப்பினர் சந்தாவில் கிடைக்கிறது. Prime Video மொபைல் பதிப்பிற்குச் சந்தா செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் மரக்கார்: லயன் ஆப் அரபியன் சீ ( மரைக்காயர் – அரபிக்கடலின் சிங்கம்)  திரைப்படத்தை கண்டு ரசிக்க முடியும். Prime Video மொபைல் பதிப்பு Airtel ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குத் தற்போது கிடைக்கக்கூடிய ஒற்றைப் பயனர், மொபைல் மட்டுமே திட்டமாகும்.



 



மும்பை, இந்தியா, டிசம்பர்-13, 2021—பிரபல நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்துள்ள இந்த ஆண்டின் மிகப்பெரிய காவிய சாகசமான மரக்கார்: லயன் ஆப் அரபியன் சீ ( மரைக்காயர் – அரபிக்கடலின் சிங்கம்)  திரைப்படத்தின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் பிரீமியரை இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றான Prime Video உங்கள் திரைக்கு எடுத்து வருகிறது. ஆசீர்வாத் சினிமாஸ்ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் பிரியதர்ஷன் எழுதி இயக்கி, அர்ஜுன் சர்ஜா, சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், மறைந்த நெடுமுடி வேணு மற்றும் பிரணவ் மோகன்லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்பிரம்மாண்டமான மலையாள மொழித் திரைப்படம் இம்மாத தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம், இந்தியாவில் டிசம்பர் 17 ஆம் தேதி முதல் Prime Video-இல் திரையிடப்படும், மேலும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் காணக் கிடைக்கும்.



 



இந்த சரித்திர நாடகம், இந்தியாவின் தலைசிறந்த கடற்படைத் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் குஞ்சாலி மரக்கார் IV-இன் வாழ்க்கை வரலாறு ஆகும். மலபார் கடற்கரையின் இந்த அச்சமற்ற கடற்தளபதியின் தலைமையில் போர்த்துகீசிய படையெடுப்பாளர்களுக்கு எதிராக போரிட்டு  பின்னர் கோழிக்கோட்டை ஆண்ட ஜாமோரின்-இன் கடற்படைத் தளபதியாக ஆன மரக்கார் பற்றிய கதை இது. மலையாளத் திரையுலகில் இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே  அதிகம் செலவு செய்யப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது, இது அக்டோபர் 2021 இல் 67வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் சிறந்த காஸ்ட்யூம்க்கான விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

“திரைப்படத்தைக் கண்டு ரசித்த  பார்வையாளர்களின் கருத்துகளை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், மேலும் எனது ஒவ்வொரு ரசிகர்களும் அளித்த அன்புக்கும் எனது நன்றிகள். இந்தியாவின் முதல் கடற்படைத் தளபதி என்று அழைக்கப்படும் குஞ்சாலி மரக்கரின் பிரபலக் கதையை உயிர்ப்பிக்கும் இப்படத்தின் நான் ஒரு பகுதியாக இருப்பது பெருமைக்குரியது, ”என்று பிரபல நடிகர் மோகன்லால் கூறினார். அவர் மேலும் கூறுகையில்  “இது ஒவ்வொரு இந்தியனின் இதயங்களையும் உணர்ச்சிகளையும் தொடும் கதை என்று நான் நம்புகிறேன். இக்கதையை அசாதாரணமான அளவில் உயிர்ப்பிக்க முடிந்தது ஏன் கனவு நனவானதை உறுதி செய்தது. Prime Video-இல் மரக்கார் டிஜிட்டல் பிரீமியராகக் காட்சிப்படுத்தப்படுவதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இது நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து இத்திரைப்படத்தைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பை வழங்கும்." என்றார்.



 



“Prime Video-இல் மரக்கார்: லயன் ஆப் அரபியன் சீ ( மரைக்காயர் -அரபிக் கடலின் சிங்கம்)  திரைப்படம்  வெளியாவதை அறிந்து  நான் மிகவும் உற்சாகம் கொண்டுள்ளேன். இப் படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது, கடந்த 20 வருடங்களாக எனக்கும் லாலேட்டனுக்கும் இருந்த ஒரு கூட்டுக் கனவு இது. இந்த திட்டத்தை நிறைவேற்ற அவர் அளித்த ஆதரவிற்கு நான் நன்றி கூறுகிறேன், ”என்று படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான பிரியதர்ஷன் கூறினார். மேலும் கூறுகையில் “மரக்கார் வெறும் திரைப்படம் அல்ல, ஒரு இலக்கியம்; என்றென்றும் நினைவில் நிற்கும் அனுபவம் இது.  இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களால் Prime Video-இல் இப்படம் கண்டு ரசிக்கப்படும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். " என்றார்.



 



Amazon Prime Video, இந்தியாவின் கன்டென்ட் லைசன்சிங் துறையின் தலைவர் மணீஷ் மெங்கானி கூறியதாவது: “விருது வென்ற பிரம்மாண்டமான திரைப்படம்  மரக்கார்: லயன் ஆப் அரபியன் சீ ( மரைக்காயர் -அரபிக் கடலின் சிங்கம்)  திரைப்படத்தின் ஸ்ட்ரீமிங் பிரீமியரை Prime Video-இல் வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஆசீர்வாத் சினிமாஸ் உடன் மீண்டும் ஒருமுறை இணைந்து செயலாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் மற்றும் மோகன்லால் மற்றும் பிரியதர்ஷன் ஆகியோரின் வெற்றிகரமான நடிகர்-இயக்குனர் கலவையில் அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினரால் வலுப்படுத்தப்பட்ட இத்திரைப்படத்தை எங்கள் பார்வையாளர்களுக்கு கொண்டு வருகிறோம். வாடிக்கையாளருக்கு முன்னுரிமை எனும் அணுகுமுறையை தொடர்ந்து கடைப்பிடிப்பதில் PrimeVideo பெருமிதம் கொள்கிறது, மேலும் இந்த ஆண்டை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மெகா என்டர்டெய்னருடன் நிறைவு செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.



 



டிரெய்லர் இணைப்புகள்:

மரக்கார் அரபிக்கடலின்ட சிம்ஹம் (மலையாளம்):

மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் (தமிழ்):

மரக்கார் அரப் சாகர் கா ஷேர் (இந்தி):

மரக்கார் அரேபிய சமுத்திர சிம்மம் (தெலுங்கு):

கதை சுருக்கம்: மரக்கார்: லயன் ஆப் அரபியன் சீ ( மரைக்காயர் -அரபிக் கடலின் சிங்கம்) , இந்தியாவின் தலைசிறந்த கடற்படைத் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் நிஜ வாழ்க்கைக் கதாபாத்திரத்தின் வாழ்க்கை வரலாறு ஆகும். 15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் காட்சிப்படுத்தப்படுள்ள இந்தத் திரைப்படம், மலபார் கடற்கரையின் அச்சமற்ற கடற்தளபதியாகவும் பின்னர் கோழிக்கோட்டை ஆண்ட ஜாமோரின் (சாமூத்திரி)-இன் கடற்படைத் தளபதியாகவும் இருந்த குஞ்சாலி மரக்கார், , போர்த்துகீசியர்கள் ஒரு கடற்படை போரில் தோற்கடித்த கதையைக் கூறுகிறது. கதை குஞ்சாலி மரைக்காயர் 4 (முகமது அலி) -ஐ மையமாகக் கொண்ட இந்தத் திரைப்படம் பல்வேறு நாவல்கள் மற்றும் குஞ்சாலி மரைக்காயர் பற்றி எழுதப்பட்ட நூல்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்டது மற்றும் இது ஒரு ஆடம்பரமாகஉருவாக்கப்பட்ட சரித்திர நாடகமாகும்.

Prime Video கேடலாகில் உள்ள ஆயிரக்கணக்கான ஹாலிவுட் மற்றும் பாலிவுட், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் மரக்கார்: லயன் ஆப் அரபியன் சீ ( மரைக்காயர் -அரபிக் கடலின் சிங்கம்)  திரைப்படமும் இணைகிறது. மும்பை டைரிஸ். தி பேமிலி மேன்,காமிக்ஸ்தான்  சேம காமெடி பா, ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ், பாண்டிஷ் பண்டிட்ஸ், பாதாள்லோக், தாண்டவ், மிர்சாபூர் சீசன் 1&2, தி ஃபார்காட்டன் ஆர்மி - ஆசாதி கேலியே, சன்ஸ் ஆப் சாயில் - ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ், ஃபோர் மோர் ஷாட்ஸ் பிளீஸ், மேட் இன் ஹெவன் மற்றும் இன்சைட் எட்ஜ் போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Amazon Original series தொடர்கள் மற்றும் இந்தியத் திரைப்படங்களான கூலி நம்பர் 1, குலாபோ சிதாபோ, துர்காமதி, சலாங், சகுந்தலா தேவி, ஜெய் பீம், பொன்மகள் வந்தாள், ஃபிரெஞ்ச் பிரியாணி, லா, சுஃபியூம் சுஜாதயும், பென்குயின், நிசப்தம், மாரா, வி, சி.யூ சூன்,சூரரைப் போற்று, பீமாசேன நல மகாராஜா, திருஷ்யம்-2, ஹலால் லவ் ஸ்டோரி, மிடில் கிளாஸ் மெலடீஸ், பித்தம் புதுக் காலை மற்றும் அன்பாஸ்ட் உடன் Amazon Originals-இன் சர்வதேச திரைப்படமான போராட் சப்சிகியுவன்ட் மூவி பிலிம், தி வீல் ஆப் டைம், டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், ஃப்ளீபேக் மற்றும் தி மார்வெலஸ் மிசஸ் மைசெல் போன்றவையும் Prime உறுப்பினர்களுக்கு கூடுதல் செலவின்றிக் கிடைக்கிறது. இந்தச் சேவையில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளில் பல திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் உள்ளன.



 



ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி போன்றவற்றிற்கான பிரைம் வீடியோ செயலியின் மூலம் Prime உறுப்பினர்கள் டிப்பூக் திரைப்படத்தை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் காணலாம். Prime Video செயலியில், எபிசோடுகளைப் பதிவிறக்கம் செய்து மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்டுகளில் எவ்விதக் கூடுதல் கட்டணமின்றி ஆஃப்லைனில் எங்கும் காணும் தேர்வும் Prime உறுப்பினர்களுக்குக் கிடைக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு ₹999 அல்லது மாதத்திற்கு ₹129 என்ற கட்டணத்தில் Prime உறுப்பினராக இணைவோருக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி Prime Video இலவசமாகக் கிடைக்கிறது. புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime-இல் மேலும் தகவல் பெறலாம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா