சற்று முன்

கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

வித்யாசமான பரிமாணங்களில் நடிக்கும் ஆர்வத்துடன் மீண்டும் களமிறங்கியுள்ள பூமிகா சாவ்லா!
Updated on : 13 December 2021

தமிழில் கடைசியாக வெளியான நயன்தாரா நடித்த 'கொலையுதிர் காலம்' படத்தைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'கண்ணை நம்பாதே' படத்தின் மூலம் பூமிகா சாவ்லா மீண்டும் நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார் .கண்ணை நம்பாதே படத்தில் தனது கதாபாத்திரத்தை பற்றி  விவரிக்கும் அவர், "கதையை முன்னோக்கி நகர்த்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் மையக் கதாப்பாத்திரத்தில் நான் நடிக்கிறேன். மேலும், உண்மையைச் சொல்வதென்றால், சாதாரண கதாபாத்திரங்களில்  நடிப்பதில் எனக்கு அலுப்பாக இருக்கிறது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இது போன்ற  வேடங்களில் நடித்துள்ளேன், அதனால்தான் 'கொலையுதிர் காலம்' படத்தில் வித்தியாசமான நடிப்பை தேர்வு செய்தேன். எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடிப்பதில் எனக்கு கவலையில்லை, ஒரு நடிகராக, வெவ்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடிக வேண்டும் . தமிழ் சினிமா சில அற்புதமான உள்ளடக்கங்களை வழங்குகிறது. இன் தமிழில் அடிக்கடி பல படங்களில் பணியாற்றுவேன் என்று நம்புகிறேன். 'கண்ணை நம்பாதே' படத்தில் எனது கதாபாத்திரத்தைப் பற்றி அதிகம் சொல்ல விரும்பவில்லை , ஆனால் வித்தியாசமான பரிமாணத்தில் நான் நடித்திருப்பதை நீங்கள் காண்பீர்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்."



 



கொரோனா ஊரடங்கு காலத்தை எப்படி கடந்து வந்தீர்கள்  என கேட்கப்பட்டபோது, புன்னகையுடன் பதிலளித்தார் , "நான் தொடர்ந்து யோகா செய்தேன் ,  அமைதியான மனது மற்றும் வாழ்க்கை முறைக்காக தியானம் செய்து வந்தேன் , மகிழ்ச்சியாக மற்றும் பிஸியாக இருக்க முயற்சி செய்துகொண்டே இருந்தேன் ".



 



சமீபத்தில் வரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் சென்னையில் காணப்பட்ட பூமிகா சாவ்லா, சென்னையை தனது இரண்டாவது வீடாக கருதுகிறார், மேலும் நகரத்தில் உள்ள மக்களின் அன்பையும் அரவணைப்பையும் ஒரு ஆசீர்வாதமாக கருதுகிறார். பூமிகா சாவ்லா சமீபத்தில் தெலுங்கில் இரண்டு பிளாக்பஸ்டர் படங்களான  கோபிசந்தின் 'சீட்டிமார் ' மற்றும் விஸாக் சென்னின் 'பாகல்' படங்களில் நடித்திருந்தார் .தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தனது அடுத்த சில சுவாரஸ்யமான படங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா