சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

மார்கழி மாதத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது - பா.ரஞ்சித்
Updated on : 19 December 2021

‘மார்கழி மாதத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது, மங்கள இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் வேறுபாடில்லை இரண்டும் மண்சார்ந்தது தான்’ எனத் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.



 



மதுரை காந்தி அருங்காட்சியகத்தில், ’மார்கழியில் மக்களிசை’ என்ற தலைப்பில், நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட தாரை தப்பட்டை, மேளம், கரகாட்டம் மற்றும் ஒப்பாரி பாடகர்கள் கலந்துகொண்டு மேடையில் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது,



 



”மார்கழியில் மக்களிசை பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டு இன்று மதுரையிலும், நாளை கோவையில் நடத்துகிறோம், மேலும் வரும் 24 முதல் 31 ஆம் தேதி வரை 7 நாட்கள் தொடர்ச்சியாக பல்வேறு சபாக்களில் சென்னையில் நடைபெறுகிறது.



 





 



நாட்டுப்புற இசைக்கலையை மக்களுக்கானதாக மாற்றுவதற்கான முயற்சியாக இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளோம். மக்களுக்கான இசையை மக்களிடத்தில் கொண்டு செல்கிறோம். மார்கழி என்பது தமிழ் மாதம் இதனை யாரும் உரிமை கொண்டாட முடியாது, மங்கள இசையும் நாட்டுப்புற இசையும் நம் மண் சார்ந்தது தான்.





 

நாட்டுப்புற பாடல்கள் வாழ்வியல் சம்மந்தப்பட்ட தினசரி விசயங்களை இசை வடிவமாக கொண்டுவருவது தான், இதனை சிஸ்டமாக உருவாக்கி வைத்துள்ளோம் தற்போது அதற்கான இடம் கிடைத்துள்ளது. சினிமா இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வாய்ப்பு போன்று மண் சார்ந்த இசைக் கலைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு தான் இந்த மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி.



 





 



நாட்டுப்புற இசையை வேறொரு தளத்திற்கு கொண்டுசெல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது தான் இந்த நிகழ்வுக்கு கிடைத்த வரவேற்பு. இந்த நிகழ்வை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கும் போது ஆதரவு கிடைக்குமா என எண்ணிய நிலையில், மக்களிடத்தில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது தென் தமிழக ஒப்பாரி பாடல் கலைஞர்களை மேடையில் ஏற்ற வேண்டிய வாய்ப்பை இந்த நிகழ்ச்சியில் வழங்கியுள்ளோம்.



 



நாட்டுப்புற இசைகளை மேடை ஏற்ற அரசு தரப்பு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம், மக்களிடம் கலையை ஜனநாயக படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துகிறோம். சென்னை சங்கமம் மீண்டும் தொடங்கினால் பல கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவே அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,





 நாட்டுப்புற கலைகளை ஊக்கப்படுத்த வேண்டும், கலைகளின் தன்மையை புரிந்து வாய்ப்பு அளித்தால் இந்த கலை அடுத்த பரிமாணத்தை அடையும். சமூக வலைதளங்களின் மூலமாக உருவாகும் வரவேற்பால் கலைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்துள்ளது. நாட்டுப்புற கலைகளில் இளம் கலைஞர்களை உருவாக்க கல்லூரிகளில் வாய்ப்பும், போதிய விழிப்புணர்வும் வழங்க வேண்டும்”என்றார்.



 



நிகழ்சியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர் சிறப்பு விருந்தினராக  சு.வெங்கடேசன் MP, சமூக செயல்பாட்டாளர் எவிடன்ஸ்கதிர், எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் கலந்துகொண்டனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா