சற்று முன்

கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

உதவி இயக்குநர்களுக்கு முதல்முறையாக விருதுகள் வழங்கி கௌரவித்த Directors Club !
Updated on : 19 December 2021

Directors Club என்ற வாட்ஸப் செயலியில் உதவி இயக்குநர்களுக்காக இயங்கி வரும் குழு சார்பில் நடந்த ஆண்டு விழாவில் இந்தியாவிலேயே முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.



 



கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக உதவி இயக்குநர் சக்தி அவர்களால் வாட்ஸ் ஆப் செயலியில் இக்குழு ஆரம்பிக்கப்பட்டது. இக்குழுவில் தமிழ் சினிமாவின் உதவி இயக்குநர்கள் உறுப்பினர்களாக இணைந்தனர். இயக்குனர்கள மணிரத்னம், SS ராஜமௌலி, ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் சிவன், ரவிவர்மன், கதாநாயகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் என சினிமாவின் அனைத்து துறையினரும் இக்குழுவில் வந்து உதவி இயக்குநர்களோடு கலந்துரையாடி வருகின்றனர்,  



 



உதவி இயக்குனர்களுக்கு ஒரு அரிய களமாகவும், அவர்களுக்கு இலவச பயிற்சி பட்டறையாகவும் விளங்கும் Directors Club குழுமம் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.



 





 



Directors Club நான்காம் ஆண்டு மற்றும் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் 17.12.2021 வெள்ளிக்கிழமை அன்று சென்னை ராணி சீதை ஹாலில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் மற்றும் நடிகர் விஜய் அவர்களின் தந்தையுமான SA சந்திரசேகர் அவர்கள், மற்றும் இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து அவர்கள்,மற்றும் நடிகர் காளி வெங்கட் உட்பட எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.



 



இவ்விழாவில்



கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது, CSI காது கேளாதோர் பள்ளி சார்பில் வாய் பேசமுடியாத மற்றும் காது கேளாத குழந்தைகள் நடத்திய நாட்டிய நிகழ்வு அனைவர் மனதையும் கவர்ந்தது. இதனையடுத்து, 2020 மற்றும் 2021 ஆண்டில் வெளியான திரைப்படங்களில் ஒரு சிறந்த படத்தை Director's club, உறுப்பினர்கள் வாக்கு அடிப்படையில் தேர்ந்தெடுத்து, அதில் பணியாற்றிய உதவி இயக்குநர் குழுவிற்கு, விழாவில் விருது வழங்கும் விதமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பட்டா பரம்பரை திரைப்பட உதவி இயக்குநர் குழுவிற்கு விருதுகள் வழங்கப்பட்டது.



 





 



இந்தியாவிலேயே உதவி இயக்குநர்கள் அங்கிகரிகப்படுவதும் அவர்களுக்கு விருது வழங்கப்படுவதும் இதுவே முதல் முறை. இந்த ஆண்டின் நிறைவில் Director's Club அரசு அங்கீகாரம் பெற்றுள்ளது. உதவி இயக்குநர்களுக்கான இலவச பயிற்சி பட்டறையாகவும், அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் களமாகவும் செயல்பட்டு வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா