சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

சிம்ரன், சோபனா, தபு உள்ளிட்ட நடிகைகள் நிராகரித்த கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா !
Updated on : 21 December 2021

இன்று பிறந்த நாள் கொண்டாடிய ஆண்ட்ரியா ஜெறேமியா பிண்ணனிப் பாடகியும் பிண்ணனிக் குரல் கொடுப்பவரும் மற்றும்  நடிகையும் ஆவார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் இவரை நடிகையாக உயர்த்தின.



 



ஆண்ட்ரியா, சென்னையிலுள்ள, அரக்கோணத்தில், ஆங்கில-இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர். இவர், நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் கல்வி பயின்றார். இவருடைய தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவருடைய இளைய தங்கை, பெல்சியத்திலுள்ள இலெவன் நகரத்தில் துணை ஆய்வாளராக உள்ளார். 



 



ஆண்ட்ரியா தன்னுடைய பத்து வயது முதல், யங் இசுடார்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். இவர் கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார். இவர், வாழும் கலை மற்றும் கலைஞர்களுக்காகத் த சோ மஸ்ட் கோ ஆன் (The Show Must Go On-TSMGO Productions) என்ற அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார்.



 



திரைப்படங்களில் பாடல்கள் பாடுவதை இன்றும் தொடர்ந்து வருகிறார். . கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு, அவருடைய அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் சேம்சு சீகலின் ஆங்கில நாவலான தீரெயில்டுவின் கதையைக் கொண்டது. 



 



ஆண்ட்ரியா, கல்யாணி வெங்கடேசாகவும் தன்னுடைய கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதால், பிணையக் கைதியாக நடித்தார். சிம்ரன், சோபனா, தபு உள்ளிட்ட நடிகைகளின் நிராகரிப்புக்குப்பின் இக்கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.



 



அதன் பிறகு, செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார். 2011-ம் ஆண்டு, இவர், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஆகத்து 2011இல் வெளியான மங்காத்தா திரைப்படத்திலும் நடித்தார். இவர், கமல்ஹாசனுடன், விஸ்வரூபம் திரைப்படத்திலும், வெற்றிமாறனின், வட சென்னை திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா