சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

அரசு கட்டுப்பாட்டை மீறிய ஜெயின் கல்லூரி !
Updated on : 22 December 2021

ஸ்கைமன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தலைமகன் முபாரக்  தயாரிப்பில் கவின் இயக்கத்தில் முகேன் ராவ், பிரபு, சூரி, மீனாட்சி  கோவிந்தராஜன் ஆகியோர் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'வேலன்'.



 



'வேலன்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று திநகரில் உள்ள ஸ்ரீ  சங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் திரைத்துறையினர் மட்டுமின்றி கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அதிலும் அநேகர் மாஸ்க் அணியாமல் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 



 



தியேட்டர், மால்,வழிபாட்டுத்தலங்கள், அரசு அலுவலகங்கள் பள்ளிகள் கல்லூரிகளில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதித்து செயல்படுத்தி வரும் அரசு இப்படி ஒரு விழாவை நடத்த எப்படி அனுமதித்தது என்று தெரியவில்லை. இதனால் தொற்றுகள் பரவும் அபாயம் இருந்தும் ஜெயின் கல்லூரி நிர்வாகம் எப்படி அனுமதித்தது, 



 





 



இந்த படத்தின் தயாரிப்பாளர் தலைமகன் முபாரக் இந்த துறைக்கு புதிதானவர் என்பதால் அவருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் நடிகர் திலகம் சிவாஜி வாரிசான மூத்த நடிகர் பிரபுவுக்கு அரசின் கட்டுப்பாடுகள் தெரியாதா.



 



மேலும் நடிகர் சூரி கொரோனா காலத்தில் விழிப்புணர்வு வீடியோவில் கை கழுவுங்கள், மாஸ்க் அணியுங்கள், என பல பதிவுகளை அவரது சொந்த சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துவிட்டு இப்படி ஒரு தவறை செய்யலாமா 



 



பொதுவாக இதுபோன்ற திரைத்துறையை சார்ந்த விழாக்கள் ஒரு குறிப்பிட்ட அரங்கங்களில் நடத்துவார்கள். அதில் சம்பந்தப்பட்ட படத்தின் படக்குழுவினர், பத்திரிகையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள்.  ஆனால் இன்று ஸ்ரீ  சங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் பெண்கள் கல்லூரியில் நடந்த இந்த நிகழ்வால் கல்லூரி மாணவிகளுக்கு ஏதேனும் தொற்று பாதிப்புகள் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள்.



 



அஜித்தின் படங்களை வரிசையாக இயக்கிய சிறுத்தை சிவாவின் உதவி இயக்குனர் கவின் தான் இந்த வேலன் படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.



 



சுயவிளம்பரத்திற்காக கல்லூரி மாணவிகளை பழிகேடாக்கவேண்டாம். கல்லூரி மற்றும் படக்குழுவினருக்கு வேண்டுகோள்! 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா