சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

'பிரம்ம முகூர்த்தம்' டி.ஆர்.விஜயன் இயக்கத்தில் உருவாகும் நகைச்சுவை கலந்த காதல் படம்
Updated on : 26 December 2021

மாலை 6 மணிக்கு துவங்கி மறுநாள் காலை 6.மணிவரை நடைபெறும் நகைச்சுவை கலந்த காதல் படத்தின் கதை திரைக்கதை எழுதி டைரக்ட் செய்கிறேன். பிரபல முன்னணி கதாநாயகி இதில் நாயகியாக நடிப்பதற்கும், முன்னனியில் பிரபல நான்கெழுத்து நகைச்சுவை நடிகர் முக்கிய வேடத்தில் நடிப்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.  தேனி,கம்பம், போடி, ஏற்காடு மற்றும் சென்னையிலும் இதன் படப்பிடிப்பை நடத்தி மார்ச் மாதம் திரைக்கு வருவதற்கு உருவாகும் இதற்கு  " பிரம்ம முகூர்த்தம்" என்று பெயர் வைத்துள்ளோம். தொழில் அதிபர் பி.செந்தில்நாதன் கே.வி.மீடியா நிறுவனம் சார்பில் இதை தயாரிக்கிறார்" என்று இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, எழுதி இயக்கும் புதியவரான டி.ஆர். விஜயன் கூறினார்.



 





 



 



விஜய் விஷ்வா, மனோஜ்குமார், இருவருடன் முல்லை கோதண்டம், விஜய் டி.வி.பாலா, உட்பட மேலும் பல நகைச்சுவை நடிகர்களும் இதில் நடிக்கின்றனர்.



பி. முகமது ஜாபர் வசனம் தீட்ட, சினேகன், சி.பாலமுருகன், ராஜா மூவரின் பாடல்களுக்கு ஸ்ரீசாஸ்தா இசையமைக்கிறார். பம்மல் ரவி சண்டைப் பயிற்சியையும், கேசவ் நடன பயிற்சியையும், ப்ரியன் படத்தொகுப்பையும், சேகர் கலையையும், இ.கே.நவ்சாத் ஒளிப்பதிவையும், ஜெ. மணி தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர்.



பிரபல தொழில் அதிபரான பி. செந்தில்நாதன் தயாரிக்கும் " பிரம்ம முகூர்த்தம்" படத்தின் கதை, திரைக்கதை எழுதி டி.ஆர்.விஜயன் டைரக்ட் செய்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா