சற்று முன்

கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

காயத்ரி ரகுராம், மோகன்.ஜி செயலால் கோடம்பாக்கத்தில் சர்ச்சை கிளம்பியுள்ளது !
Updated on : 26 December 2021

கட்டிட தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் , கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கை முறைகளையும் மிகவும் யதார்த்தமாக பதிவு செய்துள்ள திரைப்படம் 'லேபர்' . குடிகாரர்களால் பல தொழிலாளர்களின் குடும்பங்கள் சீரழிவதையும்.,   கூடவே , திருநங்கையரின் வாழ்க்கை முறையையும் இதுவரை யாரும் சொல்லாத விதத்தில் , பேசாத பதத்தில் பெரிய அளவில் பேசி இருக்கும் படம் தான் 'லேபர்'



 



இதில் கதை நாயகராக முத்து, கதை நாயகியாக சரண்யா ரவிச்சந்திரன் இருவருடன் ஆறுமுக முருகன், திருநங்கை ஜீவா சுப்ரமணியன், பெரோஸ்கான், கமல்... உள்ளிட்ட இன்னும் சிலர் நடித்துள்ளனர். 'ராயல் பார்ச்சுனா  கிரியேஷன்ஸ்' தயாரித்துள்ள , இப்படத்திற்கு கணேஷ்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார் , நிஜில் தினகரன் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவும் செய்து சத்தியபதி இயக்கியுள்ளார்.



 





 



 'லேபர்' திரைப்படத்திற்கு சமீபமாக ட்ரைலர் வெளியீட்டு விழா தயாரிப்பாளர் சங்க பிரதிநிதி கே.ராஜன் தலைமையில் சென்னை, சாவி கிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது., இயக்குநர் சங்க பிரதிநிதிகள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு திருமலை உள்ளிட்டோர்., கலந்து கொண்ட ' லேபர்' திரைப்படத்தின் முன்னோட்டத்தில் ., இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் கதாநாயகி , உடன் இருக்கும் ஒரு வட இந்திய தொழிலாளியைப் பார்த்து "எனக்கு நீ இந்தி கற்றுத்தருகிறாயா .?!'  என கேட்பது போன்று வரும் வசனத்தால்... இந்த படம் தமிழர்களை  இந்தி கற்று கொள்ளவும் சொல்கிறதோ .?! " என சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கும் வேளையில்., பிஜேபி பிரபலமும் நடிகையுமான  காயத்ரி ரகுராமும்,  திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' பட இயக்குனர் மோகன்.ஜியும் இப்பட ட்ரைலரை ரீ-டுவிட் செய்து இருப்பது ., அவர்களும் இந்திக்கு துணைபோகிறார்களோ .?! எனும் சர்ச்சையையும்  பரபரப்பையும் கிளப்பி விட்டுள்ளது கோடம்பாக்கத்தில் !



 





 



இப்படி , சர்ச்சைகளுடன் கூடிய எதிர்பார்ப்புகளுடன் வரும் டிசம்பர் - 31ம் தேதி இந்த வருடத்தின் கடைசி நாளில் திரைக்கு வர இருக்கிறது 'லேபர்'.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா