சற்று முன்

கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி சென்னை ஐஐடி-யில் கோலாகாலமாக தொடங்கியது
Updated on : 27 December 2021

நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி பெரும் மக்கள் கொண்டாட்டத்துடன் நான்காவது நாளாக சென்னை ஐஐடி-யில் பெரும் பறையிசை மற்றும் ஒப்பாரி பாடலுடன் தொடங்கியது .



 



மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் பா.ரஞ்சித் , இயக்குனர் அதியன் ஆதிரை ,தோழர் திருமுருகன் காந்தி ,தோழர் செல்வா மற்றும் இசையமைப்பாளர் சாம் ரோல்டன் ஆகியோர் கலந்துக்கொண்டு மக்களோடு மக்களிசையை கொண்டாடினர். மேலும் இசையமைப்பாளர் சாம் ரோல்டன் அவர்கள் "உலக இசையில் பறையிசை மிக முக்கியமானது மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் எழுச்சிக்கான ஒரு மாபெரும் முயற்சியை எடுத்துள்ளார்" என்று நிகழ்ச்சியை சிறப்பித்து கூறினார் பின்பு பேசிய இயக்குனர் அதியன் ஆதிரை "கிராமப்புற வாழ்வியலை மக்களிசையோடு தொடர்ப்பு படுத்தியது பெரும் வரவேற்பை பெற்றது" என்று வாழ்த்து கூறினார். நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட தோழர் செல்வா அவர்கள் "உரிமைக்கான முழக்கம் இந்த பண்பாட்டு தளத்தில் ஒலிக்கிறது" என்று மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் மகிழ்ச்சியோடு கூறினார். நிகழ்ச்சியின் முடிவில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் இசைக் கலைஞர்களை பற்றி "நாம் எழுத வேண்டும் என்றும் இம்மக்களிசையை நாம் மிகவும் முக்கியமாக ஆவண படுத்த வேண்டும் என்றும் கூறி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மக்களிசை கலைஞர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்கள் விருது கொடுத்து கௌரவித்தனர்.



 



இதனை தொடர்ந்து மார்கழியில் மக்களிசையின் ஐந்தாவது நாளாக மீண்டும் சென்னை ஐஐடி-யில் நடைப்பெற உள்ளது.அரங்கம் அதிரும் இசையோடு இன்று (27/12/2021) மக்கள் முன்னிலையில் அனைவரும் வாரீர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா