சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

நடிகர் கிருஷ்ணா, திரு கூட்டணியில் அஞ்சலி அதிரடியாக நடிக்கும் "ஜான்சி" முன்னணி OTT-ல் விரைவில்
Updated on : 27 December 2021

Disney plus Hotstar இந்திய நாட்டின் மிகச்சிறந்த OTT தளமாக அனைவரையும் ஈர்த்து வருகிறது. ரசிகர்கள் விரும்பும் சிறப்பான கதைகள்,  வித்தியாசாமான உள்ளடக்கம் நிறைந்த கதைகள், நாட்டின் முன்னணி OTT தளமான Disney plus Hotstar உடைய  கட்டாய அளவுகோல்களில் ஒன்றாக  மாறியுள்ளது, ஏனெனில் Disney plus Hotstar கவர்ச்சிமிக்க கதைகளை காட்டிலும், முற்றிலும் புதிய தளங்களில் சொல்லப்படும் கதைகளைத் தான் அதிகம் தேர்ந்தெடுக்கிறது. புகழ்பெற்ற OTT தளமாக இயங்கும் இத்தளம், அதன் சந்தாதாரர்களுக்கு பல்வேறு வகைகளின் அடிப்படையில், சிறப்பான  உள்ளடக்கத்துடன், குறைபாடற்ற கதைகளை ரசிகர்களுக்கு தொடர்ந்து அளித்து வருகிறது, இதன் மூலம் ரசிகர்களுக்கு  100%  முழுமையான பொழுதுபோக்கு அம்சத்தை  அளித்து வருகிறது.  அந்த வகையில் இயக்குநர் திரு இயக்கத்தில் அஞ்சலி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள "ஜான்சி" திரைப்படத்தை அடுத்ததாக ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. Tribal Horse Entertainment சார்பில்  நடிகர் கிருஷ்ணா இந்த  இணைய தொடரை தயாரித்துள்ளார். Zee5 ஒரிஜினல் ‘High Priestess’ மூலம் OTT தளத்தில் தயாரிப்பாளராக அவர் தனது பயணத்தைத் தொடங்கினார், அதைத் தொடர்ந்து அல்லு அரவிந்தின் OTT தளமான AHA உடன் அடுத்த தொடரை  வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, ​​'ஜான்சி' மூலம் ஹாட்ரிக் வெற்றியை கொண்டாடவுள்ளார். இந்த இணைய தொடரில்,  நடிகை அஞ்சலி, முழு நீள அதிரடி வேடத்தில் தோன்றுவது இதுவே முதல் முறை. இந்த இணைய தொடர் ஒரு முழு நீள ஆக்சன் டிரமாவாக உருவாகியுள்ளது. இத்தொடர் பார்வையாளர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை இருக்கை நுனியில் வைத்திருக்கும், பரபர திரில் பயணமாக இருக்கும். 



 





 



இத்தொடரில் அஞ்சலி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, முமைத் கான், கல்யாண் மாஸ்டர், ராஜ் அர்ஜுன், சரண்யா R, சம்யுக்தா ஹோமத் ஆகியோருடன் மற்றும் பல முன்ணனி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். அரவிந்த் (பண்டிகை மற்றும் டிக்கிலோனா புகழ்) ஒளிப்பதிவு செய்துள்ளார், சண்டைக்காட்சிகளை யானிக் பென் அமைத்துள்ளார், அவர் தி ஃபேமிலி மேன் தொடரின் மூலம் உலகளவில் ரசிகர்களை, தனது  அதிரடி சண்டை காட்சி அமைப்பின் மூலம் மிரள வைத்தவர் என்பது குறிப்பிடதக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா