சற்று முன்

கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

நடிகை அபிராமி, பா.இந்திரன், சுதர்சன் சேஷாத்ரி ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் !
Updated on : 27 December 2021

பரத நாட்டியக் கலையில் சிறந்து விளங்கியதற்காக பிக் பாஸ் புகழ் நடிகை அபிராமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அதேபோல் சமூக சேவை மற்றும் ஊடகத் துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக பா.இந்திரன் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் நிகழ்ச்சி வடிவமைப்பாளராக சிறப்பாக செயலாற்றிய சுதர்சன் சேஷாத்திரி அவர்களுக்கும் கோவையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவப் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன



 



கவுரவ டாக்டர் பட்டங்களை இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தலைவர்  ஜான் அமலன் பரிந்துரையின் பேரில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் ஸ்கூல் ஆஃப் டிஸ்டன்ஸ் எஜுகேஷன் உடன் இணைந்து புனித அன்னை தெரசா  பல்கலைக்கழகம் வழங்கியது குறிப்பிடத்தக்கது



 



இதன் மூலம், வெற்றி என்பது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி  மட்டுமே என்பதை கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற அனைவரும் நிரூபித்து காட்டியுள்ளனர்.



 



கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற திரு பா.இந்திரன் அவர்கள் கடந்து வந்த பாதை...



 



2009 ஆம் ஆண்டில் Nexus PR என்ற ஊடகத்தினர் உடன் தொடர்பு ஏற்படுத்தும் விதமாக நிறுவனத்தை நிறுவினார் இதன் மூலம்   பா.இந்திரன் தொடர்ந்து கடின உழைப்பின் மூலம் நம்பகமான மற்றும் அறிவார்ந்த நற்பெயரைப் பெற்றுள்ளார்.



 



பல ஆண்டுகளாக  பா.இந்திரன் துன்பங்களை எதிர்த்துப் போராடி வாய்ப்புகளைப் பெற்றார் வலுவான ஊடக தொடர்புகளை வளர்த்தார்.  இதன் மூலம் வாழ்க்கை முறை மற்றும் விளையாட்டு முதல் உடல்நலம் மற்றும் ரியல் எஸ்டேட் வரை, அனைத்து துறைகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுடன் நீடித்த தொடர்புகளை அவர் ஏற்படுத்தியுள்ளார்.



 



அதுமட்டுமல்லாமல் பா.இந்திரன் ரோட்டரி இன்டர்நேஷனலின் மை ஃபிளாக் மை இந்தியா திட்டத்தை விளம்பரப்படுத்தியது, 2014 காஷ்மீர் வெள்ளத்தின் போது பிரதமர் நிதிக்காக நிதி திரட்ட உதவியது மற்றும் ஷாருக் கான் உள்ளிட்ட பிரபலங்களுடன் பணிபுரிந்தது.



 



 ஏழு உலக சாதனைகளில் மக்கள் தொடர்பு துறையில்  பா.இந்திரன்  முக்கிய பங்கு வகித்துள்ளார்.



 



பா.இந்திரன் ஷாருக்கானின் இரண்டு திரைப்படங்களுக்கு  சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் போன்ற திரைப்படங்களுக்கு மக்கள் தொடர்பு அலுவலராக செயல்பட்டுள்ளார்



 



பா.இந்திரன் புத்திசாலித்தனமாகத் தொடர்புகொள்ளும் திறன் மற்றும் ஆக்கப்பூர்வத் திறனுடன் ஊடகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றிய கூரான புரிதலுடனும், ஊடகத்துறையில் உறுதியான PR நிபுணராக உருவெடுத்து, நகரத்தில் நடக்கும் அனைத்து விதமான நிகழ்ச்சிகளிலும் தனது ஊடகப் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா