சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

பெரும் விவாதத்தை ஏற்படுத்திய இசைஞானியின் ‘மாயோன்’ படத்தின் சிங்கிள் ட்ராக்
Updated on : 28 December 2021

தமிழ் திரையிசை ஆர்வலர்களிடத்தில் ‘மாயோன்’ படத்தின் சிங்கிள் ட்ராக்கின் லிரிக்கல் வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



 



டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் 'மாயோன்'. இந்த திரைப்படத்தில் சிபி சத்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் என் கிஷோர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.



 



இசைஞானி இளையராஜாவின் இசையில், கர்நாடக இசை கலைஞர்களான ரஞ்சனி & காயத்திரி குரலில் வெளியான 'மாயோன்' பட பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. 'மாயோனே மணிவண்ணா..' என்ற இந்த பாடலின் லிரிகல் வீடியோவும் பாடலுடன் வெளியானது. தற்போது இந்த லிரிகல் வீடியோ இசை ஆர்வலர்களிடத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



 



இதுதொடர்பாக இசை விமர்சகர்கள் பேசுகையில், ''மாயோனே மணிவண்ணா..' என தொடங்கும் பாடலில் 'தஞ்சம் என்று நம்பி உந்தன் தாழ் பணிந்தோம்..' என்ற வரிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த வரிகளில் 'தாள் பணிந்தோம்' என்பதற்கு பதிலாக 'தாழ் பணிந்தோம்' என்றிருக்கிறது. 'தாள்' என்பதன் பொருள் வேறு. 'தாழ்' என்பதன் பொருள் வேறு. பக்திப் பாடலாக உருவாகியிருக்கும் இந்த பாடலில் இசைஞானி இளையராஜாவும், பாடகிகளான ரஞ்சனி & காயத்ரியும் 'தாள் பணிந்தோம்’ என பொருள் மற்றும் உச்சரிப்பு பிசகாமல் பாடியிருக்கிறார்கள். ஆனால் லிரிகல் வீடியோவை உருவாக்கிய தொழில்நுட்ப குழுவினர், 'தாழ் பணிந்தோம்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே படக்குழுவினர், ‘தாள் பணிந்தோம்’ என்பது பொருத்தமானதா? அல்லது ‘தாழ் பணிந்தோம்’ என்பது பொருத்தமானதா? என்பதைப் பற்றி உடனடியாக தெளிவுப்படுத்தவேண்டும்.” என குறிப்பிட்டனர்.



 



'தாள் பணிந்தோம்' என்பதற்கு, 'இறைவனின் பாதம் பணிந்தோம்' என நேரடியான பொருளை வழங்குகிறது. 'தாழ் பணிந்தோம்' என்பதற்கு 'தாழ்மையுடன் பணிந்தோம்' என்ற பொருளை தருகிறது. இந்த துல்லியமான வேறுபாட்டால், இசை ஆர்வலர்கள் பலரும் இணையத்தில் விவாத பொருளாக மாற்றி வருகிறார்கள்.



 



இது குறித்து படக்குழுவினர் தெரிவிக்கையில், “கதைச்சூழலின் படி ‘ தாள் பணிந்தோம்’,‘ தாழ் பணிந்தோம்’ என இரண்டுமே பொருத்தமானது தான் என்றும், லிரிக்கல் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் ‘தாழ் பணிந்தோம்’ என்ற சொல்லும், இசை விமர்சகர்கள் உணர்த்தும் ‘தாள் பணிந்தோம்’ என்ற சொல்லும் புறநானூற்று இலக்கிய ஆதாரத்தின் படி இறைவனின் பாதம் பணிந்து வழிபடும் பொருளைத் தான் குறிப்பிடுகிறது. இருந்தாலும் இசை விமர்சகர்கள் சுட்டி காட்டியதை ஏற்றுக்கொண்டு, 'தாள் பணிந்தோம்' என லிரிக்கல் வீடியோவில் மாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.  ''என விளக்கமளித்திருக்கிறார்கள்.

இசை ரசிகர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு பெருமுயற்சி எடுத்து  'தாள் பணிந்தோம்' என்று பதிவேற்றம் செய்ததற்கு இசை ரசிகர்கள், படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா