சற்று முன்

கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ள 'கணம்' டீஸர்
Updated on : 29 December 2021

வித்தியாசமான கதைகளங்கள் எப்போதுமே ரசிகர்களை வசீகரிக்கத் தவறியதில்லை. அப்படி வித்தியாசமான கதைகளங்களை எப்போதுமே ரசிகர்களுக்கு விருந்தாக்கி வரும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். அந்நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக திரைக்கு வரவுள்ளது 'கணம்'. இந்தப் படத்தின் டீஸரை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளது. பல்வேறு திரையுலகினரும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.



 



இயக்குநராக அறிமுகமாகியுள்ள ஸ்ரீகார்த்திக் இப் படத்தை குறித்து சொன்னதாவது.



"அம்மா பாசத்தை மையமாக வைத்து ஒரு அழகான சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் தான் 'கணம்'. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கியுள்ளேன்.

சின்ன பட்ஜெட் படமாக தொடங்கப்பட்டு, தற்போது சயின்ஸ் ஃபிக்‌ஷன் மற்றும் இரண்டு மொழிகளின் படபிடிப்பு செலவு உள்ளிட்டவைகளால் பெரும் பொருட்செலவு கொண்ட படமாக மாறியிருக்கிறது.



 





 



இதில் அம்மா வேடத்தில் தென்னிந்திய சினிமாவில் கனவுக்கன்னியாக விளங்கிய அமலா மேடம் நடித்துள்ளார். இந்தக் கதையை அவரை மனதில் வைத்தே எழுதினேன். 25 வருடங்களாக நடிக்காமல் இருந்தவர், இந்தக் கதையைக் கேட்டவுடன் ஒப்புக் கொண்டார். படம் பார்ப்பவர்கள் அனைவரது மனதிலும், அவரவர்களின் நிஜ அம்மாவை நினைவு கூர்வார்கள். 'கணம்' படத்தின் சிறப்பே அம்மா பாசத்துக்குள் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்திருப்பது தான்.  இந்தப் படம் அம்மாவை இழந்தவர்களுக்கு மீண்டும் அம்மாவை ஞாபகப்படுத்தும். படம் முடிந்ததும் அம்மாவிடம் பேசத் தோன்றும். அம்மாவை நேரில் பார்த்துக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கத் தோன்றும்.



 



அவருடன், சர்வானாந்த்,ரீத்து வர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதைக்கு மிக முக்கியமான கதாபாத்திரங்களில் ஹித்தேஷ், ஜெய், நித்யா என மூன்று சிறுவர்கள் நடித்துள்ளார்கள்.



 





 



தமிழில் சதீஷ், திலக் ரமேஷ் நடித்த கேரக்டரில், தெலுங்கில் வெண்ணிலா கிஷோர், பிரியதர்ஷி ஆகியோரும் நடித்துள்ளனர். இதர கதாபாத்திரங்கள் இரண்டு மொழிகளிலும் ஒன்று தான்.





படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சயின்ஸ் ஃபிக்‌ஷன் என்பதால் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மிகவும் மெனக்கிட்டு வருகிறோம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள், அது போல் இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்பதற்கு ஒரு சின்ன முன்னோட்டமே இந்த டீஸர். இன்னும் பல ஆச்சரியமூட்டும் விஷயங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. விரைவில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அம்மா பாடலொன்றை வெளியிடவுள்ளோம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் கலக்கி வரும் நம் சித் ஸ்ரீராமின் மயக்கும் குரல் இப்படத்தில் அம்மா பற்றிய பாடல் மூலமாக கண்டிப்பாக மேலும் உங்கள் மனதில் நீங்காத இடம்பிடிக்கும். தமிழ் சினிமாவில் அம்மாவைப் பற்றிய பாடல்கள் வரிசையில் மிக முக்கியமான இடத்தை இந்தப் பாடல் இருக்கும்" என்று தெரிவித்தார்.



 



தமிழில் 'கணம்' என்ற பெயரிலும், தெலுங்கில் 'ஒகே ஒக ஜீவிதம்' என்ற பெயரிலும் அடுத்த ஆண்டு பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.



 



 














சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா