சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

ஜி வி பிரகாஷ் உருவாக்கி பாடியுள்ள ‘புத்தம் புது காலை விடியாதா' ஆந்தாலஜியின் தலைப்பு பாடல்
Updated on : 10 January 2022

அமேசான் பிரைம் வீடியோ சமீபத்தில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆந்தாலஜி தொடரான “புத்தம் புது காலை விடியாதா”தொடரின்,  பல இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்த ஆல்பத்தை  அறிமுகப்படுத்தியது. இந்த ஆல்பம் தமிழ் திரைத்துறையில் மிகவும் திறமையான மற்றும் நம்பிக்கைக்குரிய இசைக் கலைஞர்களால் இசையமைக்கப்பட்டுள்ளது. வார்னர் மியூசிக் இந்தியா (WMI) அமேசான் ஒரிஜினல் சீரிஸின் இசை பங்குதாரராக, கூட்டாளியாக இணைந்து செயல்படவுள்ளது. வடக்கு, மத்திய மற்றும் மேற்கு இந்தியாவில் அதன் வலுவான துவக்கத்தை, தெற்கு சந்தைகளில் வார்னர் மியூசிக் நுழைவை WMI இது குறிக்கிறது.



 



புத்தம் புது காலை விடியாதா… ஆல்பத்தில் 6 பாடல்கள் உள்ளன - ஒரு தலைப்புப் பாடல் மற்றும் ஒவ்வொரு கதைக்கும் ஒரு பாடல் வீதம் 5 பாடல்கள் உள்ளன. பன்முகத் திறமையாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ‘புத்தம் புது காலை விடியாதா' ஆந்தாலஜியின் தலைப்பு பாடலை உருவாக்கி பாடியுள்ளார். ரிச்சர்ட் ஆண்டனியின் ‘நிழல் தரும் இடம்’ படத்திற்கு பிரதீப் குமார் ஒரு பாடலை  இசையமைத்து பாடியுள்ளார். இயக்குநர் பாலாஜி மோகனின் ‘முககவச முத்தம்’ படத்திற்காக ஷான் ரோல்டன் ‘கிட்ட வருது’ பாடலை இசையமைத்து பாடியுள்ளார், ஹலிதா ஷமீமின் ‘லோனர்ஸ்’ படத்திற்காக கௌதம் வாசு வெங்கடேசன் ‘தனிமை என்னும்’ பாடலையும், சூர்யா கிருஷ்ணாவின் ‘தி மாஸ்க்’ படத்திற்கு கபேர் வாசுகியும், ‘முகமூடி’ பாடலை எழுதி, இசையமைத்துள்ளார். கார்த்திகேயா மூர்த்தி “விசிலர்” பாடலை இயக்குநர் மதுமிதாவின் “மௌனமே பார்வையாய்” படத்திற்காக இசையமைத்து பாடியுள்ளார்.



 



வெவ்வேறு மனநிலைகளை பிரதிபலிக்கும், வெவ்வேறு  பாணியிலான இசையில் அமைந்துள்ள, பல்வேறு இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கும் இந்த ஆல்பத்தின் இசை, நேர்மறை எண்ணத்தை வளர்ப்பதாகவும், சிக்கலான சமயங்களை கடக்க உதவும், மனித ஆத்மாவின் சக்தியை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது. புத்தம் புதுக் காலை விடியாதா… என்பது கடந்த ஆண்டு வெளியான ‘புத்தம் புதுக் காலை’ தொடரின் கதையை முன்னோக்கி எடுத்துச் செல்லும்  ஒரு தமிழ் தொடர் ஆகும், இது ஒவ்வொரு தனி நபரின் நம்பிக்கை மீதான பயணம் மற்றும் மனித உறவுகளுடன் கூடிய  புதிய தொடக்கங்ளை மையமாக கொண்ட கருப்பொருளில் கதைகளை சொல்கிறது. முதல் தொடரினைப் போலவே, இந்த அமேசான் ஒரிஜினல் சீரிஸ் என்பது 5 தனித்த கதைகளின் தொகுப்பாகும். இந்தியாவில் தொற்றுநோய் காலகட்டத்தின் போது, இரண்டாவது லாக்டவுனில் அமைக்கப்பட்ட கதைகளில் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அர்ஜுன் தாஸ், திலிப் சுப்பராயன், கௌரி G கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந்த் மற்றும் டீஜே (TeeJay), அருணாசலம் ஆகியோர் நடித்துள்ளனர், மேலும் இயக்குநர்கள் பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் ஆண்டனி மற்றும் சூர்யா கிருஷ்ணா ஆகியோர் இத்தொடரை இயக்கியுள்ளனர். “புத்தம் புது காலை விடியாதா… “ அமேசான் பிரைம் வீடியோவில் ஜனவரி 14, 2022 அன்று உலகமெங்கும் பிரத்யேகாமாக  வெளியாகிறது, இதன் இசை இப்போது அனைத்து மியூசிக் ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெளியாகியுள்ளது

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா