சற்று முன்

கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

இயக்குனர் ரவிஅரசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த திரையுலகினர் !
Updated on : 23 January 2022

ஈட்டி, ஐங்கரன் திரைப்படங்களின் இயக்குனர் ரவிஅரசுவுக்கு பிறந்த தினத்தை ஒட்டி திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



 



அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் இயக்குனர் ரவிஅரசு இயக்கத்தில் 2015-ல் வெளியாகிய திரைப்படம் ஈட்டி. வசூல்  ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.  ஒரு சவாலான தடகள சாம்பியனின் கதையை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் அழுத்தமாகவும் ஜனரஞ்சகமாகவும் அளித்திருந்தார் இயக்குனர் ரவிஅரசு. குறிப்பாக ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.



 



தனது இயக்கத்தில் இரண்டாவது படமாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ஐங்கரன் படத்தை இயக்குநர் ரவிஅரசு இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்களும் டிரைலரும் பலரின் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஐங்கரன் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.



 



இயக்குநர் ரவிஅரசு இன்று (ஜனவரி 23-ஆம் தேதி) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகின் முக்கிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



 





 



இதனிடையே இயக்குநர் ரவிஅரசுவின் அடுத்த திரைப்படம் குறித்த அசத்தலான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. அந்த திரைப்படம் அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையிலான மாறுபட்ட கதைக்களத்தில் இருக்கும் என்று இயக்குனர் ரவிஅரசு தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா