சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

4 நாயகிகளுடன் நட்டி கதாநாயகனாக நடிக்கும் 'வெப்'.!
Updated on : 25 January 2022

வேலன் புரடக்சன்ஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன்  திரில்லர் படம் 'வெப்'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹாரூன்  இயக்கியுள்ளார். நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார்.



 



4 நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் 'காளி' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.



 



'எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்' படத்தின் நாயகி ஷாஸ்வி பாலா, 'முந்திரி காடு' & 'கண்ணை நம்பாதே' படங்களில் நடித்த சுபப்ரியா மலர் மற்றும் விஜே அனன்யா மணி ஆகியோர் மற்ற 3 நாயகிகளாக நடிக்கிறார்கள்.



 



இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன், முரளி, தீப்ஸிகா, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



 



கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். காட்பாதர், மோகன்தாஸ் ஆகிய படங்களில் பணியாற்றிய அருண் சங்கர் கலை இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.



 





 



3 பாடல்கள் உள்ள இப்படத்தில் சாண்டி மாஸ்டர், சிவசங்கர் மாஸ்டர்  மற்றும் ஹரிஷ் கார்த்திக் ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர்.  அருண் பாரதி, ஆர்ஜெ விஜய் மற்றும் ஜெகன் கவிராஜ் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.



 



சிலந்தி வலையில் மாட்டிக்கொண்டு வெளியேற துடிக்கும் பூச்சிகளின் போராட்டத்தை போன்று இந்த கதை உருவாகி உள்ளதால் அதற்கு பொருத்தமாக 'வெப்' என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தில்  நட்டிக்கும் ஷில்பா மஞ்சுநாத் குரூப்புக்கும் நடக்கும் பூனை எலி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.



 



ஐடி தொழில்துறை வளர ஆரம்பித்த பின்பு கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக உருவெடுத்த பார், பப் கலாச்சாரத்தை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர்  ஹாரூன்.



 



கோவா உள்ளிட்ட பகுதிகளில் இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்த முதலில் திட்டமிடப்பட்டு இருந்தாலும் கொரோனா பரவல் காரணமாக, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.



 



படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.



 



சண்டைப்பயிற்சி ஃபயர் கார்த்திக், ஆடை வடிவமைப்பு டோரத்தி ஜெய், நிர்வாக தயாரிப்பு கே.எஸ்.கே செல்வா, புரொடக்ஷன் கண்ட்ரோலர் : பவித்ரன்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா