சற்று முன்

கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

கதையின் மீதுள்ள நம்பிக்கையால் படத்தின் தயாரிப்பாளராக மாறிய தயாரிப்பாளர் !
Updated on : 25 January 2022

இதுவரை தமிழ் சினிமாவில் பல ரோட் மூவிக்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை.. ஆனால் முதன்முறையாக அந்தக்குறையை போக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் துரிதம்.



 



கதையின் நம்பகத்தன்மைக்காக தமிழ்நாட்டில், அதுவும் கதை நிகழும் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கே பயணப்பட்டு மொத்த படப்பிடிபையும் நடத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 65 நாட்கள் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதற்காக  தமிழகத்துக்குள்ளேயே 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து சாலைகளில் மட்டுமே பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். படத்தின் கதை விறுவிறுப்பாக நகரும் விதமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் விதமாக படத்திற்கு 'துரிதம்' என்றே தலைப்பும் வைத்துள்ளனர்.



 



எல்லோருக்குமே தாங்கள் செய்யும் விஷயங்கள் அவர்கள் கண்ணோட்டத்தில் சரி என்பது போலத்தான் தெரியும்.. ஆனால் அடுத்தவர்கள் பார்வையில் அது தவறாக தெரிய வாய்ப்பு உண்டு. இந்த கருத்தை மையப்படுத்தி உண்மையில் நடந்த சம்பவம் ஒன்றை தழுவி இந்த துரிதம் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சீனிவாசன். இவர் இயக்குனர் ஹெச்.வினோத்தின் சீடர்.. குருவை போலவே இந்தப்படத்தை விறுவிறுப்பு குறையாமல் இயக்கியுள்ளார்.



 





 



'சண்டியர்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெகன் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தின் கதை மீதுள்ள நம்பிக்கையால் இந்தப்படத்தின் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.



 



கதாநாயகியாக மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்ற ஈடன் நடித்துள்ளார் இவர் ஏற்கனவே, ‘இருக்கு ஆனா இல்ல’, ‘பனி விழும் நிலவு’ உள்ளிட்ட சில தமிழ் படங்கள் மற்றும் மலையாளம் தெலுங்கு மொழிகளில் ஏற்கனவே நடித்துள்ளார்., கதாநாயகியின் தந்தையாக இயக்குனர் ஏ.வெங்கடேஷ், நாயகனின் நண்பனாக பாலசரவணன் மற்றும் பூ ராமு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, வில்லனாக ராமச்சந்திரன் (ராம்ஸ்) நடித்துள்ளார்.



 



புதியவரான நரேஷ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் மில்டனின் உதவியாளராக பணியாற்றிய வாசன் என்பவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை நாகூரான் கவனிக்க, ஆக்சன் காட்சிகளை  மணி என்பவர் வடிவமைத்துள்ளார். அதுமாட்டுமல்ல மேற்கு தொடர்ச்சி மலை பட இயக்குனர் லெனின் பாரதி இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளை உடனிருந்து கவனித்து மேற்பார்வை செய்து உதவியுள்ளார்.



 



இந்த படத்தில் 'சண்டியர்' ஜெகன், ஈடன், ஏ.வெங்கடேஷ், பாலசரவணன், பூ ராமு, ராமச்சந்திரன் (ராம்ஸ்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.



 



தயாரிப்பு ஜெகன், இயக்கம் சீனிவாசன், இசை நரேஷ், ஒளிப்பதிவு வாசன்,  படத்தொகுப்பு நாகூரான், ஆக்சன் மணி, மக்கள் தொடர்பு KSK செல்வா

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா