சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் நடந்த திகில் சம்பவம்! - அலறிய 'ஓட்டம்' படக்குழு
Updated on : 18 April 2022

ரிக் கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேமாவதி ரவிஷங்கர் தயாரிக்கும் முதல் படம் ’ஓட்டம்’. மர்மங்களும் திகிலும் நிறைந்த இந்த படத்தில்  இசையமைத்து கதாநாயகனாக அறிமுகமாகிறார் எஸ்.பிரதீப் வர்மா. இவருடன் ஐஸ்வர்யா சிந்தோஹி, அனுஸ்ரேயா கதாநாயகிகளாக அறிமுகமாக, வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் எஸ்.ரவிஷங்கர். இவர்களுடன் சாய்தீனா, அம்பானி சங்கர், நந்தகோபால், நிக்ஸிதா, ரெஜினி போன்றோர் நடித்துள்ளனர்.



 



ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், ஒரு ஜமீன் பரம்பரையில் நடந்த சம்பவம் ஒன்றை மையமாக கொண்டு நடக்கும் கதையே ‘ஓட்டம்’ படத்தின் ஒன் லைன்.



 



இக்கதையில், காதலித்து கல்யாணம் செய்த மனைவி ஒரு பக்கம், தன்னைக் காப்பாற்ற சொல்லி தஞ்சமடைந்த ஒரு பெண் மறுபக்கம், என்று இருவரிடமும் மாட்டிக்கொண்டு தவிக்கும் கதாநாயகனின் நிலையை நகைச்சுவையும் திகிலும் கலந்து சொல்லப்பட்டிருப்பது படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும்.



 



நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பில் நிஜமாகவே ஒரு திகில் சம்பவம் நடந்து படக்குழுவினரை அலற வைத்துள்ளது. அதாவது, ஒரு நாள் இரவு காட்டுப்பகுதியில் கதாநாயகி ஐஸ்வர்யா சம்பந்தப்பட்ட திகில் காட்சி படமாக்கப்பட்ட போது, அவுட்டோர் யூனிட் லைட்டுகள் ஒரு நிமிடம் அணைந்து அணைந்து எரிந்துள்ளது. லைட்மேன்கள் நன்றாக பரிசோதனை செய்து பார்த்தும் லைட்டுகள் அணைந்து அணைந்து எரிவது நிற்கவில்லை. இதனால், எதற்கும் அஞ்சாத அவுட்டோர் யூனிட் தொழிலாளர்களுக்கே சற்று பயம் ஏற்பட, கதாநாயகி ஐஸ்வர்யாவும் பயத்தில் உரைந்துவிட்டாராம். பிறகு கற்பூரம் ஏற்றி பூஜை செய்ததும், எல்லாம் சகஜ நிலைக்கு வந்ததாம். இந்த சம்பவம் படப்பிடிப்பு தளத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 



ஜோசப் ராய் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு செய்ய, சண்டைக்காட்சிகளை வி.ராம்தேவ் வடிவமைத்துள்ளார். மஞ்சு மற்றும் ஆகாஷ் நடனம் அமைத்துள்ளனர். 



 



படட்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் எம்.முருகன். இவர் இயக்குநர் இராம.நாராயணிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பண்புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



 



வேகமாக வளர்ந்து வரும் ‘ஓட்டம்’ திரைப்படத்தை மே மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா