சற்று முன்

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |   

சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் 'சாணிக்காயிதம்' - வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ !
Updated on : 22 April 2022

பழிவாங்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவிலும், மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் மே மாதம் 6 ஆம் தேதி வெளியாகிறது.



 



ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள சாணிக்காயிதம் திரைப்படத்தினை இயக்குநர்  அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.



 



எல்லை இல்லா வகையில் புத்தம் புதிய, மற்றும் தனித்துவமான திரைப்படங்கள்,  டிவி தொடர்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்கள் , விளம்பரங்கள் இல்லாத அமேசான் பிரைம் மியூசிக் இசை, ஆகியவையுடன் இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பில் உள்ள  பொருட்களை இணையம் மூலம் தேர்வு செய்யும் வசதியுடன்,   விரைவாகவும் இலவசமாகவும் நேரடியாக விநியோகம் செய்தல், மதிப்பு மிக்க சலுகைகளை எளிதாக அணுகும் வசதி, பிரைம் ரீட்டிங்கில் எல்லையற்ற வாசிப்பு, பிரைம் கேமிங்கின் மொபைல் கேமிங் உள்ளடக்கங்கள், ஆகியவைகளோடு உங்கள் பணத்துக்கான ஒரு பிரமிக்கத்தக்க மதிப்பை அமேசான்  பிரைம் வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பிரைம் வீடியோ மொபைல் பதிப்புக்கு சந்தா செலுத்துவதன் மூலமே புத்தம் புதிய “சாணிக்காயிதம்”  திரைப்படத்தை  காணமுடியும்,  மேலும் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பானது, மொபைலில் மட்டுமே காணக்கூடிய  ஒரு தனிநபர் பயன்பாட்டு திட்டமாகும், அது தற்போது  ஏர்டெல் ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.



 



மும்பை, இந்தியா – 2022 ஏப்ரல் 22 :  இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான பழிவாங்கும் அதிரடி ஆக்சன்  திரைப்படமான “சாணிக்காயிதம்”  திரைப்படத்தின் உலகளாவிய திரை வெளியீட்டை ப்ரைம் வீடியோ தளம் இன்று அதிகாரப்பூர்வமாக  அறிவித்தது. ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மற்றும் செல்வராகவன் ஆகியோர் முதன்மை  கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். பொன்னி  (கீர்த்தி சுரேஷ் தோன்றும் பாத்திரம்) மற்றும் அவளது குடும்பத்தினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது,  தலைமுறை தலைமுறையாக அக்குடும்பத்திற்கு நீடித்து வந்த சாபம் உண்மையாக மாறத்தொடங்கும்போது,  விளம்பர முன்னோட்ட காட்சிகளில் காணப்படுவது போல அவர் ஒரு கசப்பான கடந்த காலத்தை தன்னோடு பகிர்ந்து கொண்ட சங்கையாவோடு (செல்வராகவன் தோன்றும் பாத்திரம்)  இணைந்து எதிரிகளைப் பழிக்குப் பழி வாங்க ஆரம்பிக்கிறார் இதனை சுற்றியே இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் திரைப்படம் பிரத்யேகமாக  மே 6 ஆம் தேதி பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது,  மற்றும் இந்தத் திரைப்படம் தெலுங்கில் சின்னி- Chinni-என்ற பெயரிலும் மலையாளத்தில் சாணிக்காயிதம் என்றபெயரிலும்  ஒளிபரப்பாகிறது.





 



அமேசான் பிரைம் வீடியோ இந்தியா கான்டெண்ட் லைசென்ஸிங் தலைவர் மணீஷ் மெங்கானி கூறுகையில்...



ப்ரைம் வீடியோவில் நாங்கள் எப்போதுமே மொழி மற்றும் புவியியல் எல்லைகளைத் தாண்டி  அனைவரையும் சென்றடையும் வகையிலான கதைகளை தேடிவருகிறோம். அதிகளவில் மிகவும் ஆவலோடு  எதிர்பார்க்கப்பட்டும் ‘சாணிக்காயிதம்’ திரைப்படத்தின் உலகளவிலான சிறப்புக் காட்சி வெளியீட்டுக்காக பிரைம் வீடியோ சித்தார்த் ரவிபதி மற்றும் அருண் மாதேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்,”



 



படம் குறித்து  இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறுகையில்...



“சாணிக்காயிதம் மனதை உலுக்கும் ஒரு அழுத்தமான படைப்பு; மனதைக்கொள்ளை கொள்ளும்  வகையிலான கதை சொல்லும் பாங்கு மற்றும் அற்புதமான நடிப்பு ஆகியவற்றை கொண்டுள்ள இந்தத் திரைப்படம் அதிரடி காட்சிகளை விரும்பும் ரசிகர்களை இறுதிவரை கட்டிப்போடும்” .



“வழக்கமான கதைகளை வழக்கத்திற்கு மாறாக ரத்தமும் சதையுமாக மயிர்க்கூச்செறியும் வகையில்  மாறுபட்ட வடிவங்களில் சொல்வதில் நான் மிகவும் உற்சாகம் அடைகிறேன். பழிக்குப் பழி வாங்கத்துடிக்கும் கருப்பொருளோடு பின்னிப்பிணைந்த ஒரு பரபரப்பான அதிரடியான கதைக்களம் இப்படத்தில்  அமைந்துள்ளது. பழிவாங்கும்  குறிக்கோளோடு  பயணப்படும் ஒரு பெண்ணின் கதை இது.”  



 



“ ஒவ்வொரு வகையான  கதைக்கும் ஒவ்வொரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது, அமேசான் ப்ரைம் வீடியோவின் பெரும் விநியோகத்தின் துணையோடு இணைந்து உலகெங்கிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு  சாணிக்காயிதத்தை கொண்டு செல்வதில் நான் பரவசமடைந்திருக்கிறேன்”.



 



திரைப்படத்தின் கிரியேட்டிவ் ப்ரொட்யூசர் சித்தார்த் ரவிபதி கூறுகையில்..



 



“சாணிக்காயிதம் இதயத்தைக் கொள்ளைகொள்ளும் அதே அளவில் இதயத்தை கசக்கிப் பிழியும் ஒரு கதை. நீதியைத் தேடி அலையும் ஒரு பெண்ணின் வாழ்வை  கண்முன் கொண்டுவருவதில் அருண் மாதேஸ்வரன் அற்புதமாக செயல்பட்டிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரும் இந்தக் கதைக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் எல்லைகளைக் கடந்த மிகச்சிறப்பான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்” அனைத்து மொழிகளிலும் மே 6 ஆம் தேதி பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் இந்தத்திரைப்படத்தைக் காண நான் ஆவலோடு காத்திருக்கிறேன்”

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா