சற்று முன்

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |   

சினிமா செய்திகள்

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் டிரெய்லர் வெளியானது !
Updated on : 22 April 2022

தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்,  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா இணைந்து நடிக்கும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் இன்று வெளியானது. 



 



2022  ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து,  ரசிகர்களிடம்  பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  முக்கியமான படங்களின் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா என தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் நட்சத்திர கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தென்னிந்திய திரைத்துறையின் முதன்மை நாயகிகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் சமந்தா முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.  



 



தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று, இணையத்தில் வைரலாகி வருகிறது, முன்னதாக  இப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட டீசர் மற்றும் இசையமைப்பாளார் அனிருத் இசையில் வெளியான  “டூ டூடூ டூ டூடூ” பாடல், ரெண்டு காதல், நான் பிழை போன்ற பாடல்கள் பல மில்லியன் பார்வைகள் குவித்து, சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான “டிப்பம் டப்பம்” சிங்கிள் பாடல் அனைவர் மனதை கவர்ந்த பாடலாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வெளியான டிரெய்லர், பெரும் வரவேற்பை பெற்றதுடன், இணையமெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது.   



 



தமிழ் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க,  ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில்  இயக்கியுள்ள படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”. 



 



தமிழ் சினிமாவில் காதல் காமெடி படங்கள் இல்லையெனும் ஏக்கத்தை போக்கும் படி, நீண்ட இடைவேளைக்கு பிறகு, அழகான காதல் கவிதையாக, மனம் விட்டு சிரித்து மகிழும் இனிமையான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளதை டிரெய்லர் நிரூபித்துள்ளது.



 



இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, S.R.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கத்தை ஸ்வேதா செபாஸ்டியன் கவனிக்க, ஸ்டண்ட் பணிகளை திலீப் சுப்பராயன் செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இப்படத்தை, தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரித்துள்ளார். 



 



இப்படம் வரும் 2022 ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி, உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் திரு உதயநிதி ஸ்டாலின் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா