சற்று முன்

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |   

சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன், இனிதே துவங்கியது !
Updated on : 23 April 2022

விஜய் ஆண்டனியின் “ரத்தம்”  படத்தின் முழு பணிகளும் கச்சிதமான ஒழுக்கத்துடன் நடந்தேறி வருகிறது. Infiniti Film Ventures நிறுவனத்தின்  திறமையான திட்டமிடல் பணியில் காட்டும் தீவிரம், ஆகியவற்றால் தயாரிப்பு சரியான வேகத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில் தான், இப்படத்தின் இந்திய ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். வெளிநாட்டு படப்பிடிப்பை  படக்குழு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் இன்று (ஏப்ரல் 23, 2022) காலை சென்னையில் எளிமையான பூஜையுடன்  இனிதே தொடங்கியது.



 



“ரத்தம்” படத்தை இயக்குநர் CS அமுதன் இயக்குகிறார் மற்றும் கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், B. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் Infiniti Film Ventures சார்பில் இப்படத்தை தயாரிக்கின்றனர்.



 



Infiniti Film Ventures உறுதி தந்தபடி, முற்றிலும் புதிய களத்தில்  பரபர திருப்பங்களுடன் கூடிய, அனைவருக்கும் பிடிக்கும்படியான ஒரு மாஸ் பொழுதுபோக்கு  படமாக உருவாகிறது. "ரத்தம்"  படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஜெகன் நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ் (Family man புகழ்), OAK சுந்தர், மீஷா கோஷல் மற்றும் அமேயா ஆகியோர் நடிக்கின்றனர், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



 



கண்ணன் (இசை), கோபி அமர்நாத் (ஒளிப்பதிவு), சுரேஷ் (எடிட்டிங்), திலிப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணியாற்றுகின்றனர். தவிர, தெருக்குரல் அறிவு "ரத்தம்" திரைப்படத்தில் ஒரு தீம் பாடலை எழுதியதோடு, பாடலை பாடியுமுள்ளார்.



 



நடிகர் விஜய் ஆண்டனி இதே Infiniti Film Ventures தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, 'கொலை' மற்றும் 'மழை பிடிக்காத மனிதன்' என்ற மேலும் இரண்டு படங்களில் பணியாற்றி வருகின்றார். அப்படங்கள் தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா