சற்று முன்

சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |   

சினிமா செய்திகள்

தென்னிந்திய திரைத்துறையை கலக்கும் நடிகை ரிது வர்மா !
Updated on : 17 May 2022

தென்னிந்திய திரைத்துறையில் சிறந்த நடிகைகளில் ஒருவராக விளங்க கூடியவர் நடிகை ரிது வர்மா. நவநாகரீக நகர்ப்புற வேடங்களிலும் மற்றும் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற வேடங்களிலும் பொருந்தக்கூடிய அரிதானவர்களில் இவரும் ஒருவர். தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’ படத்தின் மூலம் கவனத்தைத் திருடியதில் இருந்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் தமிழ் மக்களைக் கவர்ந்தது வரை, ரிது வர்மா ஒரு சிறந்த நடிகையாக தனது திறனை நிரூபித்துள்ளார். தற்போது, அவர் அடுத்தடுத்து மிக சுவராஸ்யமான பல படங்களில் நடித்து வருகிறார், அவை தயாரிப்பின்  பல்வேறு கட்டங்களில் உள்ளன.



 



தற்போது, நடிகை ரிது வர்மா,  விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்காக அடுத்த மாதம் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பைத் தொடங்குகிறார். அவர் ஓகே ஓக ஜீவிதம் (தெலுங்கு)- கானம் (தமிழ்) என்ற இருமொழித் திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுது, மேலும் இப்படம் விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.



 



மேலும் இவர் அசோக் செல்வனின் நித்தம் ஒரு வானம் (தெலுங்கில் ஆகாசம்) படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரடக்சன்  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில்  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



 



ரிது வர்மா தென்னிந்திய திரைத்துறையின் பல மொழிகளிலும் பணிபுரிவதால் மிக பிஸியான நடிகையாக மாறியுள்ளார். விரைவில் மலையாள திரையுலகிலும் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா