சற்று முன்

விமர்சனங்களை தொகுத்து ஆல்பமாக வெளியிட விரும்பும் இயக்குனர் !   |    தாஜ்மகாலை பார்க்க வரும் மக்கள், இனி தஞ்சை பெரிய கோவிலையும் பார்க்க வேண்டும் - சரத்குமார்   |    கிஷோர் கதையின் நாயகனாக நடிக்கும் 'மஞ்சக்குருவி'   |    ரசிகர்களை உற்சாகப்படுத்தும் 'ஆதி புருஷ்' படத்தின் புதிய அப்டேட்!   |    என்னால் அப்படி உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை - ‘பனாரஸ்’ பட தயாரிப்பாளர்   |    சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள படம் 'காபி வித் காதல்'   |    'வாரிசு' படத்தின் டிஜிட்டல் உரிமையை அதிக விலை குடுத்து வாங்கிய OTT நிறுவனம் !   |    அஜித்தின் 'துணிவு' படத்தின் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றியது பிரபல தொலைக்காட்சி நிறுவனம்   |    துருவ் விக்ரம் பிறந்தநாளை கல்லூரி மாணவிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினர்   |    சிவ பக்தர்களை பரவசப்படுத்திய இயக்குனர் செல்வராகவன் !   |    அசுரமான நடிகரின் அடுத்த படம் !   |    'பஃபூன்' திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது.   |    'இஷ்க்' படத்தின் தழுவல் தான் 'ஆசை' திரைப்படம்   |    பிரபுதேவா, சிரஞ்சீவி, சல்மான் கான் இணைந்து நடனமாடும் 'காட்ஃபாதர்' பட பாடல் வெளியானது   |    படப்பிடிப்பை நிறைவு செய்தது 'டாடா' படக்குழு !   |    டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் தனுஷின் 'வாத்தி'   |    'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யாராய்க்கு பதிலாக முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிகை !   |    அகாடமி 2022-ம் ஆண்டுக்கான விருதுக்கு தேர்வு ஒருமனதாக தேர்வு செய்யபட்ட இந்திய திரைப்படம் !   |    'வள்ளி மயில்' படத்தின் க்ளைமாக்ஸ்காக பழமையான கோவில் செட் தத்ரூபமாக அமைக்கப்பட்டது   |    'ஆதார்' படத்தின் திரைக்கதை புத்தகத்தை வெளியிட்ட சீமான் !   |   

சினிமா செய்திகள்

தந்தைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை சினேகா !
Updated on : 29 July 2022

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சினேகா. சினிமாவில் பிசியாக நடித்து வந்த சமயத்தில், புகழின் உச்சியில் இருந்துவந்த காலகட்டத்திலேயே நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்டு அன்பான இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இனிய இல்லறம் நடத்தி வருகிறார். அதேசமயம்  தற்போதும் செலக்டிவான, கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார் சினேகா. இந்தநிலையில் இன்று சினேகாவின் தந்தை ராஜாராமுக்கு 70வது பிறந்தநாள்... தந்தையின் பிறந்தநாளில் அவர் எதிர்பாராத விதமாக சர்ப்ரைஸ் தரவேண்டும் என விரும்பினார் சினேகா, அதன்படி சென்னை ரெட்ஹில்ஸில் உள்ள ஷெல்ட்டர் ஹோமுக்கு தனது தந்தையை அழைத்து சென்ற சினேகா, அங்கிருந்த சிறப்பு குழந்தைகளுடன் சேர்ந்து தந்தையின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதை எதிர்பாராத சினேகாவின் தந்தை ராஜாராம் இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார். . ..  இந்த நிகழ்வின்போது அந்த இல்லத்தில் இருந்த குழந்தைகளின் வாழ்த்துக்களுடன் கேக்கை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார் சினேகாவின் தந்தை ராஜாராம். மேலும் அதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்கு மதியம் சுவையான பிரியாணி விருந்தளித்தும் அவர்களை மகிழ்வித்துள்ளனர்.. தாத்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சினேகாவின் மகன் விஹானும் மகள் ஆத்யந்தாவும் கூட கலந்துகொண்டனர். இவர்கள் இருவரும் அங்கிருந்த குழந்தைகளுக்கு தங்களது கைகளால் உணவு பரிமாறியதுடன், அவர்களுக்கு பரிசாக புத்தகங்களும் வழங்கியது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 

  

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா