சற்று முன்
சினிமா செய்திகள்
அகாடமி 2022-ம் ஆண்டுக்கான விருதுக்கு தேர்வு ஒருமனதாக தேர்வு செய்யபட்ட இந்திய திரைப்படம் !
Updated on : 20 September 2022

2022-ம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்யும் இயக்குநர் திரு டி. எஸ். நாகபரணா தலைமையிலான குழு 2022-ம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்தது.
பட்டியிலிடப்பட்டிருந்த பல்வேறு படங்களில் இருந்து இந்த குழு 'செலோ ஷோ' (தி லாஸ்ட் ஷோ), திரைப்படத்தை ஒருமனதாக தேர்வு செய்துள்ளது.
'செலோ ஷோ'வில் உள்ள சிறப்பம்சங்கள் தான் இந்த படத்தை ஒரு மனதாக தேர்வு செய்ய காரணமாக இருந்தது.
'செலோ ஷோ' என்பது வெளிநாட்டில் பொதுவாக காட்டப்படும் வழக்கமான இந்திய சினிமா போல் இல்லாமல், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு திரைப்பட ஆர்வலர்களின் உணர்ச்சிகளையும் தொடும் ஒரு திரைப்படமாகும்.
தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிறப்பான கதைக்களத்தில், சினிமாத்துவத்துடன், சிறப்பான நடிப்பு, ரம்மியமான காட்சியமைப்பு மற்றும் சிறந்த ஒலி தரத்தில் துல்லியமாக இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் இந்திய சினிமா துறையின் நுணுக்கங்களையும் பாரம்பரியங்களையும் நுட்பமாகவும் உண்மையாகவும் வெளிப்படுத்துகிறது.
இந்த அனுபவம் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு புதிதாக இருக்கும்.
கதை புதுமையாக ஆரம்பித்து நம்பிக்கை தரும் விதத்தில் முடிவடையும்.
படம் முடிந்த பின்னும் அதில் வரும் கதாபாத்திரங்கள், இடங்கள் மற்றும் கதைக்களம் ரசிகர்கள் மனதில் நிற்கும். படத்தில் கூறுவது போல சிறந்த திரைப்படங்களை உருவாக்கும் கதைகளைச் சொல்லும் ஒளியை நாம் கண்டறிவோம்.
'செலோ ஷோ' உணர்ந்து அனுபவிக்க வேண்டிய ஒரு படமாகும்.
சமீபத்திய செய்திகள்
'செவ்வாய்கிழமை' ஒரு புதிய டிரெண்டை உருவாக்கும். வித்தியாசமான படம்
விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற 'ஆர்.எக்ஸ். 100' படத்திற்குப் பிறகு, இயக்குநர் அஜய் பூபதி 'செவ்வாய்கிழமை' என்ற ரஸ்டிக் திரில்லர் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு வருகிறார். முத்ரா மீடியா ஒர்க்ஸ் பேனரின் கீழ் சுவாதி ரெட்டி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா தயாரிக்கும் இப்படத்தில் நடிகை பாயல் ராஜ்புத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் நவம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் அஜய் பூபதி, 'செவ்வாய்கிழமை' படம் பற்றி பகிர்ந்து கொண்டதாவது, "திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் புதுமையாக இருக்கும். யார் நல்லவர், யார் கெட்டவர் என்ற எளிய கேள்விகளுக்கு கூட எளிதில் பதில்களைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரங்களை மையமாக வைத்து நகரும் இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத்தின் கதாபாத்திரம் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும். திரையரங்குகளில் படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் வித்தியாசமான ஆச்சரியத்தை அனுபவிப்பார்கள். படத்தை நவம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளோம்" என்று கூறினார்.
தயாரிப்பாளர்கள் சுவாதி ரெட்டி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா கூறுகையில், "ஆர்எக்ஸ் 100' படத்தின் மூலம் அஜய் பூபதி ஒரு புதிய டிரெண்டை உருவாக்கினார். இப்போது இவரது 'செவ்வாய்கிழமை' ஒரு புதிய டிரெண்டை உருவாக்கும். வித்தியாசமான படம் இது. இந்தியத் திரையில் இதுவரை பார்த்திராத ஒரு படத்தை இயக்குநர் உருவாக்கியுள்ளார். நவம்பர் 17ஆம் தேதி பார்வையாளர்களும் இதனை உணர்வார்கள். படத்தை 99 நாட்கள் படமாக்கினோம், அதில் 51 நாட்கள் இரவு நேர படப்பிடிப்புகள். இது உயர்தர தொழில்நுட்பம் கொண்ட படம். ‘காந்தாரா' படத்தின் இசையமைப்பாளராக பிரபலமான அஜனீஷ் பி லோக்நாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 'விக்ரம் வேதா', 'காந்தாரா', 'விக்ராந்த் ரோனா', 'சலார்' போன்ற படங்களில் பணியாற்றியவரும் 'ரங்கஸ்தலம்' படத்திற்காக தேசிய விருதை வென்றவருமான எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன் இந்தப் படத்திற்கு சவுண்ட் டிசைன் செய்துள்ளார். மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம். தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் இருக்கிறோம்" என்றனர். மேலும், படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்த பான் இந்திய படத்தின் இயக்குநரான அஜய் பூபதி இதன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் உள்ளார்.
அருண் விஜய்யின் வித்தியாசமான தோற்றத்தில் இயக்குநர் பாலாவின் அடுத்த படைப்பு !
மாநாடு என்கிற வெற்றிப் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் இயக்குநர் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரித்து வரும் படம் ‘வணங்கான்’. தனது வித்தியாசமான படைப்புகளின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ள இயக்குநர் பாலா இப்படத்தை இயக்கி வருகிறார்.
அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார். ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்ள படத்தொகுப்பை சதீஷ் சூர்யா கவனிக்கிறார். கலை இயக்குனராக ஆர்.பி.நாகு பொறுப்பேற்றுள்ளார். சண்டைக்காட்சிகளை சில்வா வடிவமைக்கிறார்.
வணங்கான் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
கைகளில் சிலைகளை வைத்துக்கொண்டு முழுதும் சேறு படிந்த உடம்புடன் காட்சியளிக்கும் நடிகர் அருண் விஜய்யின் வித்தியாசமான தோற்றம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
வரும் 2024 பொங்கல் பண்டிகையில் இப்படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
தன் பாலின சேர்க்கையாளர்களின் உணர்வுகளை கூறும் படம் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே'
நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' எனும் திரைப்படம், ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகிறது.
இதைத் தொடர்ந்து படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன் போது ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தின் நிறுவனர்கள் பரணிதரன் மற்றும் செந்தில்குமார், நடிகர் அர்ஷத், நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், படத்தின் இயக்குநர் ஜெயராஜ் பழனி, பாடலாசிரியர்கள் ஜி கே பி மற்றும் சிவா சங்கர், இசையமைப்பாளர் தர்ஷன் குமார், தயாரிப்பாளர் நீலிமா இசை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஷார்ட் ஃபிளிக்ஸ் பரணிதரன் பேசுகையில், '' வாழ்வு தொடங்கும் இடம் நீதானே இந்த திரைப்படம் எங்களுடைய டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. எங்களுடைய டிஜிட்டல் தளத்தில் ஏராளமான புதிய இணைய தொடர்கள், திரைப்படங்கள், நிகழ்ச்சிகள்..என புதிய படைப்புகள் விரைவில் வெளியாக இருக்கின்றன. ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தை தொடங்குவதற்கு காரணம்.. பல புதிய இளம் படைப்பாளிகளுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக தான். இப்படத்தின் இயக்குநர் ஜெயராஜ் பழனி இதற்கு முன் 'சூல்' என்றதொரு குறும்படத்தை இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் சர்வதேச அளவில் ஏராளமான விருதுகளை வென்றது. இது தொடர்பாக அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது, அவர் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' படத்தின் கதையை விவரித்தார். இந்த கதையை கேட்டவுடன் தயாரிக்க ஒப்புக்கொண்டோம். ஏனெனில் இந்த கதையை இயல்பாக சிந்திக்காமல் வித்தியாசமாக சிந்தித்து உருவாக்கியிருந்தார். அதன் பிறகு இப்படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக நடிகை நீலிமா இசையை தொடர்பு கொண்டோம். அவர்கள் இந்தப் படத்தை மிக நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்கள். தன் பாலின சேர்க்கையாளர்களை பற்றிய இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்'' என்றார்.
படத்தின் இசையமைப்பாளர் தர்ஷன் குமார் பேசுகையில், '' தற்போதுள்ள சூழலில் ஒரு திரைப்படம் வெளியாவது என்பதே கடினம். இந்நிலையில் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' திரைப்படம் வெளியாகிறது. இதற்கு இசையமைக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் நீலிமா இசைக்கு நன்றி. இந்தத் திரைப்படத்திற்கு பாடல் அமைப்பதும், பின்னணி இசை அமைப்பதும் கடும் சவாலானதாக இருந்தது. இப்படத்தின் பின்னணி இசைக்காக பல சர்வதேச கலை இசை கலைஞர்களை பயன்படுத்தி இருக்கிறோம். படத்தின் பாடல்களும், பின்னணியிசையும் அனைவரையும் கவரும் என உறுதியாக நம்புகிறோம் ''என்றார்.
இயக்குநர் ஜெயராஜ் பழனி பேசுகையில், '' இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். முதலில் 'சூல்' எனும் பெயரில் திருநங்கைகளை முதன்மைப்படுத்திய படைப்பை உருவாக்கினேன். இந்தப் படைப்பை ஷார்ட் ஃபிளிக்ஸ் வாங்கி என்னுடைய வாழ்க்கையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் ஓகே சொல்லி போதுமான பொருட்செலவில் உருவாக்கி, பரிசாக அளித்திருக்கிறார்கள். நான் பாண்டிச்சேரியில் நாடக துறையில் பணியாற்றிருக்கிறேன். என்னுடைய உதவியாளர் ஒருவர் தன் பாலின சேர்க்கையாளர். அவரின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இந்த படைப்பு உருவாகி இருக்கிறது. ஆண், பெண்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை போல் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கும் அவர்களின் உணர்வுகளை மதித்து, சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது தான் இந்த படைப்பு.'' என்றார்.
நடிகர் அர்ஷத் பேசுகையில், '' வாழ்வு தொடங்கும் இடம் நீதானே எனும் இந்த திரைப்படத்தில் இர்ஃபான் எனும் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இந்தப் படைப்பு காகிதத்திலிருந்து டிஜிட்டல் படைப்பாக உருவாகி இருக்கிறது என்றால், அதற்கு ஷார்ட் ஃபிளிக்ஸ் கொடுத்த ஆதரவு தான் முக்கிய காரணம். கலைஞர்களாகிய நாங்கள் இந்த கதை மீது கொண்டிருந்த நம்பிக்கையை விட... ஷார்ட் ஃபிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தின் நிறுவனர்கள் இந்த கதை மீது அதீத நம்பிக்கையை வைத்து தயாரித்திருக்கிறார்கள். இதற்காக அவருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படத்தை ஷார்ட் ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்காக தயாரித்த இசை பிக்சர்ஸ் நீலிமா இசை மற்றும் இசை அவர்களிடமிருந்து ஏராளமான விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னை போன்ற வளர்ந்து வரும் நடிகர்களுக்கு இது போன்ற வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி. இது என்னுடைய கனவு நனவான தருணம். இயக்குநர் ஜெயராஜ் பழனியின் இயக்கத்தில் உருவான 'சூல்' என்ற குறும்படத்திலும் எனக்கு வாய்ப்பளித்திருந்தார். தற்போது இந்தப் படத்திலும் வாய்ப்பளித்திருக்கிறார். வாய்ப்பிற்கும் நேரத்திற்கும் நன்றி.'' என்றார்.
நடிகை ஸ்ருதி பெரியசாமி பேசுகையில், '' வாழ்வு தொடங்குமிடம் நீதானே படத்தின் கதையை இயக்குநர் எனக்கு விவரித்த போதே எனக்கு பிடித்திருந்தது. ஏனெனில் நான் பணியாற்றும் மாடலிங் துறையில் ஏராளமானவர்கள் தங்களுடைய முன்னேற்றத்திற்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதே தருணத்தில் இந்தத் துறையில் பணியாற்றுபவர்கள் பலர் எல் ஜி பி டி எனும் பிரத்தியேக சமூக குழுவில் இருக்கிறார்கள். அதனால் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என தீர்மானித்தேன். இந்தப் படத்தை தயாரித்த ஷார்ட் ஃபிளிக்ஸ் மற்றும் இசை பிக்சர்ஸிற்கு நன்றி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக இடைவெளியின்றி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் போது அயராது பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை பார்த்து விட்டு ஆதரவளிக்க வேண்டுகிறேன்'' என்றார்.
நடிகை நிரஞ்சனா நெய்தியார் பேசுகையில், '' இந்த திரைப்படத்தில் இடம்பெறும் ஷகிரா மற்றும் வினோதா கதாபாத்திரங்களை இயக்குநர் ஜெயராஜ் பழனி நேர்த்தியாக கையாண்டிருந்தார். இதில் ஷகிரா கதாபாத்திரத்தில் நான் பொருத்தமாக இருப்பேன் என்று தேர்வு செய்து நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்று மேலும் இது போன்ற திரைப்படங்கள் வருவதற்கு உந்துதலாக இருக்க வேண்டும். மேலும் வழக்கமான சமுதாய நடைமுறையில் இருந்து வித்தியாசமாக இயங்கும் இந்த சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன். '' என்றார்.
தயாரிப்பாளரும், நடிகையுமான நீலிமா இசை பேசுகையில், '' இந்தத் திரைப்படம் மைக்ரோ பட்ஜெட்டில் உருவானது. 'அரண்மனைக்கிளி' எனும் தொலைக்காட்சி தொடரில் பணியாற்றிக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் மூலமாக ஷார்ட் ஃபிளிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பரணிதரன் மற்றும் செந்தில்குமார் அறிமுகமானார்கள். ஷார்ட் ஃபிலிக்ஸ் எனும் ஆப்ஸை ஏன் அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால், இந்த செயலியில் புது முகங்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். புது இயக்குநர்கள், புதிய நடிகர்கள், புதிய தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமானவருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். இந்த மேடையில் அமைந்திருக்கும் பெரும்பாலானவர்கள் புது முகங்களே. இந்த செயலியை நாம் எப்போது வேண்டுமானாலும்... எங்கு வேண்டுமானாலும்.. பதிவிறக்கம் செய்து நாம் விரும்பக்கூடிய கால அளவுகளில் படைப்புகளை காணலாம். நாம் எந்த மனநிலையில் இருக்கிறோமோ...! அதற்கு ஏற்ற வகையிலான உள்ளடக்கங்கள் இந்த செயலியில் இருக்கிறது. ஷார்ட் ஃபிளிக்ஸில் வெளியான லேட்டஸ்ட் ஹிட் என்றால் அது 'பாணி பூரி' தான். அனைத்து ஜானரிலும் படங்களை உருவாக்க வேண்டும் என அவர்கள் விரும்பிய போது, 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' தொடங்கியது.
இந்த கதையை படமாக உருவாக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த போது, என்னுடைய கணவர் இசை, 'அவசியம் உருவாக்க வேண்டும். ஏனெனில் தற்போது இந்த சமூகம் மற்றும் சமுதாயம் செல்லும் பாதையில் இது போன்ற உள்ளடக்கங்கள் அவசியம் ' என்றார்.
அதன் பிறகு இந்தப் படத்திற்கு ஏராளமான திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒன்றிணைந்தனர். எங்களுடைய தயாரிப்பு நிறுவனம், குறைந்த முதலீட்டில் தரமான படைப்புகளை உருவாக்க முடியும் என்ற இலக்கை கொண்டது. அந்த வகையில் இந்தப் படத்திற்காக உழைத்த இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என் அனைவரும் தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினர். இது போன்ற நல்ல படைப்பிற்கு ரசிகர்களும் பேராதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
ஜவானின் ஆக்ஷன் காட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் பிரம்மாண்டம்!
நெஞ்சை பதறவைக்கும் பிரம்மாண்ட ஆக்ஷன் உலகிற்குள் அழைத்துச் செல்கிறது ஜவானின் "தி ஜர்னி ஆஃப் எ சிங்கிள் ஷாட்". இப்படிப்பட்ட பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சியை படமாக்க என்ன தேவை என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சரி, தைரியமாக இருங்கள், ஏனென்றால் 'ஜவான்' இப்போது உங்களுக்கு அதை காண்பிக்கப்போகிறது!
இந்த காட்சிக்கு மூளையாக செயல்பட்டவர் வேறு யாருமல்ல, ஹாலிவுட் ஆக்ஷன் மேஸ்ட்ரோ ஸ்பைரோ ரசாடோஸ் தான். ஹாலிவுட் பிளாக்பஸ்டர்களான "தி ஃபாஸ்ட் அண்ட் த ஃபியூரியஸ்," "கேப்டன் அமெரிக்கா," "டீனேஜ் மியூட்டன்ட் நிஞ்ஜா டர்டில்ஸ்" போன்றவற்றிலும், இப்போது பிளாக்பஸ்டர் “ஜவான்” படத்திலும் கூட அவருடைய வேலையை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்ட மேக்கிங் காட்சியான பிரத்தியேக வீடியோவில், ஒரு மேஸ்ட்ரோவின் துல்லியத்துடன் செயலை ஒருங்கிணைக்கும் பணியில் ஸ்பைரோ ரசாடோஸ் தலைமை வகிக்கிறார். மனதைக் கவரும் அதிரடி ஆக்ஷன் காட்சியை சிங்கிள் டேக்கில் படமாக்குவதற்கு, ஒரு காட்சியை வடிவமைக்கும் உன்னதமான திட்டமிடலும், அபாரமான அர்ப்பணிப்பும் தேவை என்பதற்கு ஜவானின் இந்த காட்சி தான் சாட்சி.
'ஜவான்' சாதாரண திரைப்படமல்ல. இது உங்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் ஒரு படமாகும். அனைவரின் சிறப்பான நடிப்பும் மற்றும் துடிப்புடன் கூடிய அதிரடியை வழங்கியதில் குழுவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் ஒரு காரணம். 'ஜவான்' தற்போது உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றை உருவாக்கி பல சாதனைகளை முறியடித்து வருகிறது.
ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழங்கிய படம் தான் “ஜவான்”. இப்படத்தை அட்லீ இயக்கியுள்ளார், கௌரி கான் தயாரித்துள்ளார், மேலும் கௌரவ் வர்மா இணைந்து தயாரித்துள்ளார். இப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் செப்டம்பர் 7, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
'சந்திரமுகி 2' க்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த ராகவா லாரன்ஸ்!
செப்டம்பர் 28 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் லைக்கா சுபாஷ்கரனின் 'சந்திரமுகி 2' படத்திற்காக, அப்படத்தின் கதாநாயகனான ராகவா லாரன்ஸ்.. அவருடைய குருவும், 'சந்திரமுகி' படத்தின் நாயகனும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்தை சந்தித்து ஆசியும், வாழ்த்தும் பெற்றிருக்கிறார்.
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படைப்பாகத் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'சந்திரமுகி 2' இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், 'வைகைப்புயல்' வடிவேலு, ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், ராவ் ரமேஷ், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி. கே. எம். தமிழ் குமாரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் திட்டமிட்டப்படி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
செப்டம்பர் 28 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் முன் பதிவு தற்போது தொடங்கி இருக்கிறது. தொடங்கியவுடன் ரசிகர்கள் உற்சாகமாக படத்தினை காண்பதற்கு முன்பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் படத்தின் நாயகனும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், குருவாக போற்றி வணங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, 'சந்திரமுகி 2 படம் மாபெரும் வெற்றி பெறும்' என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தையும், ஆசியையும் ராகவா லாரன்ஸிற்கு வழங்கியிருக்கிறார்.
லைக்காவின் 'சந்திரமுகி 2' தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனிடையே 'சந்திரமுகி 2' படத்தின் தெலுங்கு பதிப்பினை ரசிகர்களிடையே விளம்பரப்படுத்தும் நிகழ்வு அண்மையில் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது என்பதும், படத்தின் இரண்டாவது முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் பிரமாண்டமான புதிய திரைப்படம்!
ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், இயக்கத்தில் நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். மிகப்பிரம்மாண்டமாக உருவாகவுள்ள, இந்த புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பலகாலமாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, இருவரும் இணையும் படம் விரைவில் துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில், தனது திரைப்பயணத்தில் பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தந்து, பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு புதிய இலக்கணம் தந்தவர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். பெரிய ஹீரோக்களை வைத்து, இவர் உருவாக்கிய அத்தனை படங்களும், ஹீரோக்களுக்கு மட்டுமல்லாமல், படத்தின் அத்தனை கலைஞர்களுக்கும் திருப்புமுனை படங்களாக அமைந்தன. தற்போது சிறிது இடைவேளைக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் எனும் செய்தி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தொலைக்காட்சி வழியே அறிமுகமாகி, தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர் சிவகார்த்திகேயன். திரையுலகில் அறிமுகமான முதல் படத்திலிருந்து, அவரது தற்போதைய வளர்ச்சி அபாரமானது. வெறும் கமர்ஷியல் நாயகனாக இல்லாமல், புதிய கதைக்களத்தில், வித்தியாசமான படைப்புகளுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் நடிப்பால் கட்டிப்போட்டுள்ளார். தனக்கென தனி ரசிகர் வட்டம், மிகப்பெரிய மார்க்கெட் என அசத்தும், சிவகார்த்திகேயன், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸுடன் முதல் முறையாக இணைகிறார்.
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், நடிகர் சிவகார்த்திகேயன் இணையும் இந்தப் புதிய திரைப்படம், இந்திய சினிமாவில் ஒரு புதிய பிரம்மாண்டமாக, புதுமையான களத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில், அனைவரும் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகவுள்ளது. பெரும் பொருட்செலவில் ஶ்ரீ லக்ஷ்மி மூவீஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
தற்போது இப்படத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
திரைப்படம் நடிக்காமல் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்திருக்க முடியுமா? - சுப வீரபாண்டியன்
தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை பேராசிரியர்.ஸ்ரீனி சௌந்தரராஜன் இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தில் நிமிஷா ரியாஸ்கான், ‘பருத்திவீரன்’சரவணன், வையாபுரி, மாஸ்டர் பரத், மாஸ்டர் ஜான்,
பேபி ஷர்ஷா மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள்.
இதன் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேராசிரியர் சுப வீரபாண்டியன், இயக்குனர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு, கவிஞர் சினேகன், பட அதிபர் என்.விஜயமுரளி நடிகர் வையாபுரி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
சுப வீரபாண்டியன் பேச்சு
நான் இந்த விழாவில் கலந்து கொள்வதை பற்றி சமூக வலைதளத்தில் அழைப்பை பதிவிட்டிருந்தேன். இதில் கேள்விகள் எழுப்பப்பட்டது. திரைப்பட விழாவில் நீங்கள் எப்படி ?அதுவும் ஆத்திரான இயக்குனர் பேரரசும்,நீங்களும் ஒரே மேடையில் எப்படி? என பல்வேறு விதமாக கேள்விகள் எழுப்பப்பட்டது.
வெவ்வேறு கட்சிகள் என்பது சினிமா மேடைக்கு அல்ல. எஜமான், சின்ன கவுண்டர் படத்தை நான் உட்கார்ந்து பார்த்தவன். அந்த வாய்ப்பு இந்த மேடையில் எனக்கு கிடைத்துள்ளது.
திரைப்படம் நடிக்காமல் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்திருக்க முடியுமா? அதில் வெற்றி தான் பெற்றிருக்க முடியுமா? நாம் கலையை நேசிப்பதை விட கலைஞர்களின் நிலையை சிறப்பாக நேசிக்க கற்றுக் கொண்டிருக்கின்றோம். அதனால் ஆயிரம் மேடைகளில் பேசுவதை படத்தில் அரை மணி நேரத்தில் கூறிவிடுகிறார்கள். படத்தை ஒரு முறை பார்த்தால் போதும் அது மனதில் நிற்கும்.
திரைப்படம் எடுப்பது நல்ல தொழில்தான். நல்ல படைப்புகளை கொண்டு சேர்த்தால் மக்களுக்கு போய் சேரும். இதை கருத்தில் கொண்டுதான நல்ல கதையை எடுத்திருக்கிறார் ஸ்ரீனி சௌந்தரராஜன்.அதுவே மிகச்சிறந்த தொண்டாக நான் பார்க்கிறேன். படத்தின் பாடல்களை ஒரு முறை கேட்டேன், நான்கு ஐந்து முறை கேட்கத் தோன்றியது இதுவே இந்த படத்திற்கு வெற்றி என்று சுப. வீரபாண்டியன் பேசினார் .
இயக்குனர் பேரரசு உரை
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர் ஐயா சுப.வீ தான்.அவருடைய வாழ்த்து படத்திற்கு முக்கியமானது.நான் கடவுள் ஏற்பாளர்,அவர் கடவுள் மறுப்பாளர்.
சுப.வீ ஐயா நல்லதையே நினைப்பவர்.அவரின் மனசு தான் கடவுள் போன்றது. எனவே கடவுளையும் வணங்குகிறேன். அவரையும் வணங்குகிறேன்.
படத்தை எடுத்துக் கொண்டால் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்றாற்போல் படம் எடுத்திருக்கிறார் இயக்குனர் பேராசிரியர் ஸ்ரீனி.சௌந்தரராஜன். நான் படம் பார்க்க சென்றால என் மகளோடு தான் செல்வேன். ஆகவே பெண் குழந்தைகளும் பார்க்கும் படமாக இப்படம் உள்ளது. இது இளைஞர்களும் பெற்றோர்களும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான படம். மனதார வாழ்த்துவதில் நான் பெருமை அடைகிறேன் என்றார் இயக்குனர் பேரரசு.
கவிஞர் சினேகன் பேச்சு
எல்லா கனவுகளும் நிறைவேற அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. ஆனால் இவர் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு தன்னை உருவாக்கி இருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீனி சௌந்தரராஜன்.
படத்தின் இயக்குனர் பேராசிரியர்.ஸ்ரீனி செளந்தரராஜன் பேச்சு
மூச்சிருக்கும் வரை முயற்சி செய்யுங்கள் உங்கள் கனவை நிறைவேற. ஆறிலிருந்து அறுபது வயதுவரை இந்த கதை பொருந்தும் என்பார்கள். ஆனால் ஆறிலிருந்து மூச்சு இருக்கும் அனைத்து நபர்களுக்கும் இந்த கதை பொருந்தும்.நமது கனவு நிறைவேற மூச்சிருக்கும் வரை முயற்சி செய்யுங்கள் என்றார்.
வேல்ஸ் சர்வதேச விழாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள 'ஷாட் பூட் த்ரீ' பட நடிகர்கள்!
இங்கிலாந்தில் நடைப்பெற உள்ள மூன்றாவது வேல்ஸ் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் “ஷாட் பூட் த்ரீ” படத்தில் நடித்ததற்காக பூவையார், பிரனிதி மற்றும் வேதாந்த் ஆகியோர் சிறந்த துணை நடிகருக்கான பிரிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். பூவையார், பிரனிதி மற்றும் வேதாந்த் ஆகிய மூன்று பேரின் பங்களிப்பு இத்திரைப்படத்திற்கு பெருமை சேர்த்தது மட்டும் இல்லாமல் வேல்ஸ் குழந்தைகள் திரைப்பட விழாவின் நடுவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இவர்கள் மூன்று பேரும் வேல்ஸ் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகருக்கானப் பிரிவில் தேர்வாகியுள்ளது எனக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் பெருமையாக உள்ளது. மூன்று பேரும் அவர்களது கதாப்பாத்திரத்தை நன்றாகப் புரிந்துக்கொண்டு சிறப்பாக நடித்துள்ளனர். மூவரும் இந்த பரிந்துரைக்கு முழுத் தகுதியானவர்கள் என்று “ஷாட் பூட் த்ரீ” திரைப்படத்தை எழுதி, இயக்கி மற்றும் தயாரித்துள்ள திரு. அருணாச்சலம் வைத்யநாதன் கூறியுள்ளார்.
“ஷாட் பூட் த்ரீ” திரைப்படம் செல்லப் பிராணிகளுக்கும், நமக்கும் இடையே இருக்கும் பிணைப்பைக் கொண்டாடுவதன் மூலம் சர்வதேச திரைப்பட விழாக்களின் பார்வையாளர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
அக்டோபர் 06 திரையரங்குகளில் “ஷாட் பூட் த்ரீ” திரைப்படம் வெளியாகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குடும்பமாகப் பாக்ககூடிய சிறந்த அனுபவத்தை தரும் பொழுதுபோக்குத் திரைப்படமாக வந்துள்ளது.
இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி மற்றும் தயாரித்துள்ளார் அருணாச்சலம் வைத்யநாதன். ஆனந்த் ராகவ் மற்றும் அருணாச்சலம் வைத்யநாதன் இணைந்துத் திரைக்கதை எழுதியுள்ளனர். சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு, சிவாங்கி, பூவையார், பிரனிதி, கைலாஷ் ஹீத் மற்றும் வேதாந்த் வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிபதிவு செய்துள்ளார். வீணை செல்வன் ராஜேஷ் வைத்திய இசையமைத்துள்ளார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்துள்ளார். முகில் சந்திரன் இணைத்தயாரிப்பு செய்துள்ளார். வெங்கடேஷ் சடகோபன் நிர்வாகத்தயாரிப்பு செய்துள்ளார். அருண்ராம் கலைச்செல்வன் துணைத்தயாரிப்பு செய்துள்ளார்.
துல்கர் சல்மான் நடிக்கும் 'லக்கி பாஸ்கர்' படப்பிடிப்பு ஆரம்பம்!
இந்திய சினிமாவில் வெற்றிகரமான பான் இந்திய நடிகராக துல்கர் சல்மான் உள்ளார். அவரது திறமை மற்றும் தனித்துவமான படங்கள் தேர்வு மூலம் இன்று அவர் பெரும் உயரத்தை எட்டியது மட்டுமல்லாமல் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக உள்ளார்.
'சீதா ராமம்' போன்ற கிளாசிக் மற்றும் 'கிங் ஆஃப் கொத்தா' போன்ற கேங்ஸ்டர் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் இப்போது தெலுங்கில் திறமையான இயக்குநரான வெங்கி அட்லூரியுடன் 'லக்கி பாஸ்கர்' என்ற தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து படத்தைத் தயாரிக்கின்றனர்.
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சமீப வருடங்களில் தெலுங்கு சினிமாவில் வித்தியாசமான ஜானர்களில் படங்கள் தயாரித்து வெற்றிக் கொடுத்து வருகிறது. இப்போது அவர்கள் அடுத்து பான்-இந்திய மார்க்கெட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளனர். 'சார்/வாத்தி' படத்திற்குப் பிறகு அவர்கள் இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.
'லக்கி பாஸ்கர்' படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. இந்த விழாவில் தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டு படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
'ஒரு சாதாரண மனிதனின் அளவிட முடியாத உயரங்களை நோக்கிய அசாதாரண பயணம்' என்ற கருப்பொருளைச் சுற்றி வருவதுதான் 'லக்கி பாஸ்கர்' படத்தின் ஒன்லைன். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற எடிட்டர் நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார். மேலும் படம் குறித்தான தகவல்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்படும்.
நவரசநாயகன் பட்டத்தை யாரும் அடைய முடியாது. அவருக்கு நிகர் அவர் தான் - இயக்குனர் ஜெயமுருகன்
மனிதன் சினி ஆட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரித்து, ஜெயமுருகன் T. M கதை, இயக்கத்தில் உருவாகி வரும் படம் தீ - இவன்.
இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஹாலிவுட் குயின் சன்னி லியோன் கார்த்திகை தீபம் புகழ் அத்திகா, சுகன்யா, சேது அபிதா, மஸ்காரா அஸ்மிதா, யுவராணி, ராதாரவி, இளவரசு, ஜான் விஜய், சிங்கம் புலி, சரவண சக்தி, சுமன்.து, ஹேமந்த்;, ஸ்ரீதர், சாரப்பாம்பு சுப்புராஜ், கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
தீ இவன் படம் குறித்து இயக்குனர் ஜெயமுருகன் கூறியது...
பராசக்தி மாமன்னன், விடுதலை படவரிசையில் சமூக பார்வை கொண்ட படம் தான் தீ-இவன் இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் நவரசங்களையும் கொட்டி இருக்கிறார். யார் பட்டத்தை யார் வேண்டுமானாலும் அடையலாம் ஆனால், நவரசநாயகன் பட்டத்தை யாரும் அடைய முடியாது. அவருக்கு நிகர் அவர் தான் அந்த வித்தையை தீ-இவன் திரைப்படத்தில் பார்க்கலாம்.
அதே சமயம் ஆழமான கலாச்சாரத்தைச் சொல்லும் போது. ஆம்பள கெட்டா வாழ்கைபோச்சு பொம்பள கெட்டா வம்சமே போச்சு என்று சொல்வார்கள் அதன் படி ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த ஆனோ, பொண்னோ கலாச்சாரம் மீறி படி தாண்டி விட்டால். அது அவர்கள் வாழ்வை மட்டுமல்ல அவர்கள் சந்ததியையே சமாதி ஆக்கிவிடும் என்பதையும், தாலிகட்டாம தாயவாதும் தாலிகட்டாம தாரமா வாழ்வதும் தரங்க கெட்ட செயல் என்றும் சொல்வார்கள். அதுபோல முறையற்ற வாழ்கை வாழ்பவர்கள் அவர்கள் வாழ்வுமட்டு மல்ல அவர்களின் சந்ததிகளின் வாழ்வும் எப்படி சீரழிந்து சின்னா பின்னமாகிறது என்பதையும், ஆள்பவர்கள் மட்டுமல்ல வாழ்பவர்களும் நல்லவர்களா இருந்தால் தான் நல்ல சமூகம் படைக்க முடியும் என்ற சமூக நீதியையும் சொல்லும் சமூகப் பார்வை கொண்ட படைப்பு தீ-இவன்.
இத்திரைப்படம் பற்றி சக்தி பிலிம்ஸ் திருப்பூர் சுப்பரமணியம் சொன்னது, நான் இந்தப் படம் பார்த்தேன் மிக அற்புதமான படம் இது பேமிலிஸ்டோரி கார்த்திக்கும், சுகண்யாவும் இணைந்து நடித்துள்ளனர். கார்த்திக் ரொம்ப அருமையாக நடித்துள்ளார். சண்டைக் காட்சிகளை பிரம்மாண்டமா எடுத்துள்ளார்கள். கார்த்திக் மிரட்டி உள்ளார். திருப்பூரை சேர்ந்த தம்பி சுமன்.ஜெ, கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அதே போல் வில்லன் நடிகர் ஸ்ரீதர், அசத்தி இருக்கிறார்.
படத்தில் பாடல் அனைத்தும் அற்புதமாக உள்ளது பொதுவாகவே ஜெயமுருகன் அவர்கள் படம் என்றால் ரோஜா மலரே ஆகட்டும் அதற்க்கு முன் பின் வந்த படங்களாகட்டும் பாடல்கள் சிரப்பாக இருக்கும், மற்றொரு சிறப்பு அவரை பாட்டுக் காரர் என்று தான் சொல்வார்கள். அந்த அளவிற்க்கு மிகச்சிறப்பா பாடல்கள் தருவார். ஒரு பாட்டிற்கு சன்னிலியோனை ஆடவைத்து மிக பெரிய செலவில் பிரம்மாண்டமாய் செட்டுப்போட்டு படமாக்கியுள்ளார்கள்.
எல்லாவற்றிக்கும் மேலாக இந்தபடத்தில் ஒரு பேமிலி செண்டி மெண்டு நெஞ்சை தொடும் அளவிற்க்கு நன்றாக எடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் மிகப் பெரிய வெற்றியை பெற வாழ்த்துகிறேன்.
மேலும் சன்னி லியோனியின் மேலே ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம் என்ற குஷியான பாடலும் நியூ ஸ்டார் சுமன்.ஜெ-யின் ரைட்டும் ஓடுது ஓன் வேயில் ராங்கும் ஓடுது என்ற ஸ்டைலான அலிமிர்சாவின் குரலிலான பாடலும், காலில் சலங்கைகட்டி காஞ்சிபுரம் பட்டுகட்டி என்ற செந்தில் ராஜலட்சுமியின் குத்துப்பாடலும், கண்ணுக்கு இதமாக காட்சி படுத்தப்பட்டு உள்ளது.
தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயன் சிவகுமார் இந்த படத்தின் பாடல் மற்றும் ட்ரைலரை பார்த்துவிட்டு நவரச நாயகன் கார்த்திக்,ராதாரவி, சன்னி லியோன், அத்திகா, சுகன்யா, சுமன்ஜெ, உள்பட அனைத்து கதாபாத்திரங்களும் அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
நம் மண்ணின் கலாச்சாரத்தை தழுவி எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளது அந்த வகையில் இந்த படமும் உறுதியாக வெற்றி பெறும். வாழ்த்துக்கள் என்று பாராட்டினார்.
தரமான படமாக தீ-இவன் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து இயக்கியுள்ளார் ஜெயமுருகன். T. M.
ஒளிப்பதிவு Y. N. முரளி, படத்தொகுப்பு மொகமத் இத்ரிஸ், பின்னணி இசை A. J.அலி மிர்ஸா, தயாரிப்பு மேற்பார்வை - M. அப்பு, மக்கள் தொடர்பு- மணவை புவன். பிரமாண்ட பொருட்செலவில் நிர்மலாதேவி ஜெயமுருகன் தயாரித்துள்ளார்.
இது அனைத்து தரப்பினரும் விரும்பும் படமாகவும், தமிழ்சினிமாவிற்க்கு நல்லதொருப் படைப்பாகவும் இருக்கும், நல்ல படைப்புகளை ரசிகர்கள் என்றைக்கும் அங்கிகரிக்கத் தவறியது கிடையாது. ரசிகர்கள் பேராதரவுடன் இப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று நம்புகிறோம் என்று ஜெயமுருகன் T. M தெரிவித்தார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா