சற்று முன்

உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘மிஷன் சாண்டா’   |    குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்   |    வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது!   |    ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பம்   |    'வித் லவ்' படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் ரொமான்ஸ் மெலடி பாடல்!   |    மோகன்லாலின் ‘விருஷபா’ பட பாடலை, கர்நாடக துணை முதல்வர் வெளியிட்டார்!   |    யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உபேந்திராவிற்கு நான் வாய்ப்பு தரவில்லை, அவர்தான் எனக்கு பிரேக் தந்தார் - நடிகர் சிவராஜ்குமார்   |    டிசம்பர் 24 முதல் ZEE5-ல் 'மிடில் கிளாஸ்'!   |    'தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்' என்பது ஒரு விழா மட்டும் அல்ல — இது கதைகள் வாழ்க்கையாக மாறும் இடம்   |    ஆகவே எனக்கு படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும் - விக்ரம் பிரபு   |    கிரிக்கெட் பின்னணியில் அமைக்கப்பட்ட ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ அறிமுக புரோமோ வெளியானது!   |    சிறந்த திரைப்பட விருதை வென்ற ராமின் ‘பறந்து போ’   |    'கொம்பு சீவி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது   |    ‘ஐ அம் கேம்’ படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு நேரில் வந்த பார்வையிட்ட மெகாஸ்டார் மம்மூட்டி!   |    யுவன் சங்கர் ராஜாவின் குரலால் மனதை வருடும் 'சிறை' படத்தின் இரண்டாவது சிங்கிள்!   |    1960 காலகட்டத்தில் மீண்டும் வாழ்ந்து விட்டு வந்தது போல் இருக்கிறது - இயக்குநர் சுதா கொங்கரா   |    ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும் 'ரேஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது!   |    ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் 'டியர் ரதி'!   |    பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள 'சினம் கொள்' பாடல்   |   

சினிமா செய்திகள்

நடிகர் விஜய்யின் புதிய கார் விலை உங்களுக்கு தெரியுமா???
Updated on : 29 April 2015

தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கு கார்கள் மீது எப்போதுமே தனி கவனம் செலுத்துவார்கள். அதேபோல் தங்களது அந்தஸ்தை வெளிப்படுத்தும் விதமாகவும், சொகுசாகவும் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில் தவறில்லை. பொதுவாக, பாலிவுட் பார்ட்டிகள்தான் கோடிகளை கொட்டி கார் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால், அவர்களை விஞ்சும் திறமைசாலிகள் அதிகரித்திருக்கும், கோலிவுட்டிலும், கோடிகளை கொட்டி கார் வாங்கும் கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. அவ்வாறு, கோலிவுட் பிரபலங்களிடம் இருக்கும் கார் மாடல்களையும் அதன் விலைபட்டியலையும் இப்போது காணலாம்.


 



01. ரஜினிகாந்த் கார்: பல நடிகர்கள் சினிமாவில் நடிப்பதைவிட படாடோபமாக வெளியில் நடந்து கொள்வார்கள். ஆனால், அதற்கு நேர்மாறான குணமுடைய ரஜினிகாந்த் திரையில் சூப்பர்ஸ்டாராக ஜொலித்தாலும், நிஜ வாழ்வில் எளிமையை விரும்புபவர். அவரது எளிமை பல நேரங்களில் ஆச்சரியப்படுத்தும் விஷயம். அதில், அவர் காரும்கூட ஆச்சரியப்படுத்தும் விஷயமே. ஆம், அவரிடம் டொயோட்டா இன்னோவா கார் இருக்கிறது. இதுவரை சொகுசு கார்களை அவர் நினைத்து பார்க்கவில்லை. பாலிவுட் பாதுஷா என அழைக்கப்படும் ஷாரூக்கான் பிரியத்துடன் பரிசளித்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை அன்போடு மறுத்துவிட்டார் என்பது நினைவிருக்கலாம். இன்னோவா தவிர்த்து, பிரிமியர் பத்மினி, அம்பாசடர் போன்ற கார்களையும் ரஜினிகாந்த் பயன்படுத்தினார்.



02. கமல்ஹாசன் கார்: நடிப்பில் பலருக்கு முன்னுதாரணமாய் திகழும் நடிகர் கமல்ஹாசனிடம் ஆடி ஏ8எல் சொகுசு கார் இருக்கிறது. அவருக்கு பிடித்தமான மாடலாக இருப்பதால், தினசரி பயன்பாட்டிலும் இந்த கார் முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த கார் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், சிம்மாசன உணர்வை தரும் இருக்கைகள் உள்பட பாதுகாப்பு வசதிகளும் ஏராளம். இந்த காரில் 250 பிஎஸ் பவரையும், 580என்எம் டார்க்கையும் வழங்கும் வி8 எஞ்சின் உள்ளது. மணிக்கு 200 கிமீ வேகத்தை சாலை நிலை ஒத்துழைத்தால் எளிதாக தொட்டுவிடும். ரூ.1.53 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கமலிடம் ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவியும் உள்ளது.



03. விக்ரம் கார்: தமிழ் சினிமா நடிகர்களில் மிகவும் சிரத்தையுடன், புதிய பரிமாணங்களில் நடிக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர். இவரிடம் இரண்டு ஆடி கார்கள் உள்ளன. அதில், ஆடி ஆர்8 ஸ்போர்ட்ஸ் கார் அவரது எண்ணத்திற்கும், திரையுலகில் பெற்றிருக்கும் பிம்பத்திற்கும் பொருத்தமானதாக இருக்கும். கடந்த 2006ம் ஆண்டில் பாரிஸ் மோட்டார் ஷோ மூலம் வெளியுலக்கு வந்தது. ரூ.2 கோடியையொட்டிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



04. யுவன்ஷங்கர் ராஜா கார்: முன்னணி இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவிடம் அஸ்டன் மார்ட்டின் வாண்டேஜ் கார் இருக்கிறது. அதிசக்திவாய்ந்த இந்த காரில் 313 பிஎச்பி பவரை அளிக்கும் 4,735சிசி பெட்ரோல் எஞ்சின் இருக்கிறது. இந்த கார் ரூ.3.34 கோடி விலை கொண்டது.

05. ஹாரிஸ் ஜெயராஜ் கார்: இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் லம்போர்கினி அவென்டேடார் எல்பி700 ஸ்போர்ட்ஸ் கார் இருக்கிறது. உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்த மாடலில் ஈசிஆர் ரோட்டில் ரவுண்டு செல்வதை இவர் வாடிக்கையாக கொண்டுள்ளதாக அவ்வப்போது படங்களும், செய்திகளும் அடிபடுவதுண்டு. ரூ.5.75 கோடி விலை மதிப்பு கொண்டது. ஹாரிஸிடம் ஒரு மஸராட்டி கார் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

06. சிலம்பரசன் கார்: சிம்புவிடம் பிஎம்டபிள்யூ எக்ஸ்6 க்ராஸ்ஓவர் மாடல் இருக்கிறது. தனித்துவமான பாடி ஸ்டைல் கொண்ட இந்த சொகுசு கார்தான் அவரது ஆஸ்தான வாகனமாக இருந்து வருகிறது. இந்த கார் ரூ.80 லட்சம் விலை கொண்டது.



07. த்ரிஷா கார்: நடிகை த்ரிஷாவிடம் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் சொகுசு கார் உள்ளது. சிறப்பான இடவசதி, சொகுசு வசதிகள் நிரம்பிய இந்த கார்தான் ஷூட்டிங் ஸ்பாட்டுகளுக்கு குறித்த நேரத்தில் செல்வதற்கு உதவுகிறதாம். ரூ.60 லட்சம் விலை மதிப்பு கொண்டது.



08. சந்தானம் கார்: நகைச்சுவை நடிகர் சந்தானத்திடம் ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி உள்ளது. பிரத்யேகமான பாடி ஸ்டைல் இந்த காரின் பலம். மேலும், ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்குவதுதான் சந்தானத்தின் நீண்ட நாள் ஆசையாக இருந்து வருகிறது.



09. சூர்யா கார்: மாஸ் நடிகராக உயர்வு பெற துடித்துக் கொண்டிருக்கும் சூர்யாவிடம் ஆடி ஏ7 ஸ்போர்ட்பேக் கார் சொகுசு கார் இருக்கிறது. இந்த கார் தற்போது இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டது. ரூ.86 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டது. சூர்யாவின் அனைத்து தேவைகளும் கச்சிதமாக இந்த கார் பூர்த்தி செய்வதற்கு ஏற்ற கார் மாடலாக கூறலாம்.



10 விஜய் கார்: ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில் இணைந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. வாடிக்கையாளரின் பின்னணியை பார்த்தே ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் காரை விற்பனை செய்யும். எனவே, இந்த ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில் விஜய் இணைந்திருப்பது பெருமைக்குரிய விஷயமாகும். அவரிடம் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் கார் மாடல் இருக்கிறது. ரூ.3.5 கோடி மதிப்புடையது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா