சற்று முன்

17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |    ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு   |    பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!   |    தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’   |    ‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்   |    நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai   |    ‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!   |    ‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே அடுத்த படத்திற்கு ஒப்பந்தமான கே.ஜெ. சுரேந்தர்!   |    தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணி… பூஜையுடன் தொடங்கிய #D55   |    “மங்காத்தா நாள்… அஜித் குடும்பத்தில் எழும் மோதல்?”   |    சுந்தர் சி – விஷால் கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி விருந்து   |    சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வாவின் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகளும் அவர்களது அனுபவங்களும்!   |    ZEE5 தமிழில் சமுத்திரகனியின் அடுத்த அதிரடி திரில்லர் “தடயம்” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    வரலாற்றுக் காவியத்தில் வீரத் தோற்றம் - ‘திரௌபதி 2’ மூலம் புதிய உயரம் தொடும் ரிச்சர்ட் ரிஷி   |    கோயம்புத்தூரில் பொங்கல் விழாவுடன் முடிவடைந்த ‘அறுவடை’ படப்பிடிப்பு   |    300 கோடி வசூல் சாதனை… ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி கூறிய ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி   |    சசிகுமார் நடிப்பில் அரசியல் & உணர்வு காட்சிகள் நிறைந்த “மை லார்ட்” டிரெய்லர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

‘தெற்கத்தி வீரன்’ மூலம் இயக்குனராக அறிமுகமாகும் சந்திரபாபுவின் பேரன்
Updated on : 28 November 2022

ஒரு திரைப்படத்தில் பல பொறுப்புகளை ஏற்று அதை திறம்படச் செய்யும் படைப்பாளனை தமிழ் சினிமா அஷ்டாவதானியாக அரவணைத்துக்கொள்ளும். அப்படியொரு கலைஞனாக தன்னை அடையாளப்படுத்த முனைந்து ‘தெற்கத்தி வீரன்’ படம் மூலம் அறிமுகமாகிறார் சாரத்.



 



சந்திரபாபு பிலிம் ஃபேக்டரி பட நிறுவனம் சார்பில் அறிமுக நாயகன் சாரத், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, தயாரித்து, நாயகனாக  அறிமுகம் ஆகும் படம் ‘தெற்கத்தி வீரன்’. இப்படத்தில் சாரத்தின் நண்பர்களாக ’முருகா’ அசோக், ‘நாடோடிகள்’ பரணி, ’மாரி’ வினோத் ஆகியோர் நடிக்கின்றனர். நாயகனின் தந்தையாக வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். மேலும் மதுசூதனன், கபீர் துஹான் சிங், பவன், ஆர்.என்.ஆர்.மனோகர், நமோ நாராயணா, ராஜசிம்மன், ஆர்யன், ரேணுகா, உமா பத்மநாபன் என பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர்.



 



படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளதுடன் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார். என்.சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு  செய்ய வி.ஜே.சாபு ஜோசப் எடிட்டிங் செய்துள்ளார். கலை இயக்கத்தை குருராஜ் கவனிக்க, பாரதி மற்றும் சாண்டி நடனம் அமைத்துள்ளனர். சண்டை பயிற்சி : சூப்பர் சுப்புராயன் – கனல்கண்ணன். 



 



படம் பற்றி படத்தின் நாயகனும் இயக்குனருமான சாரத்திடம் கேட்டபோது, “தூத்துக்குடியில் நடக்கும் சில சம்பவங்களின் தொகுப்பே ‘தெற்கத்தி வீரன்’ கதை. எனது சொந்த ஊரும் தூத்துக்குடிதான். அங்கு நடந்த உண்மை சம்பவத்தையே நான் படமாக்கியுள்ளேன். 5 வில்லன்கள் நான்கு நண்பர்களுக்கிடையே எழும் பகையும் அதனால் நடக்கும் மோதல்கள் அதற்குள் பின்னப்பட்ட ஒரு காதல் என திரைக்கதை, விறுவிறுப்பாகவும் அடுத்த என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும். படத்தில் 8 சண்டை, 5 பாடல்கள் இடம்பெறுகிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் தேவா சார் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓபனிங் சாங் பாடியுள்ளார். தூத்துக்குடி துறைமுகத்தில் படமான இந்த பாடல் காட்சியில் சாண்டி மாஸ்டர் அழகாக நடனம் அமைத்துக்கொடுத்தார். அதிரடி சண்டை காட்சிகள் ஆக்‌ஷன் ப்ரியர்களுக்கு விருந்தாக அமையும்” என்றார்.



 



இதற்குமுன் முன் உங்கள் சினிமா அனுபவம்?





“இதுதான் எனக்கு முதல் படம். யாரிடமும் நான் உதவி இயக்குனராக இருந்ததில்லை. எனது மானசீக குருவே சினிமாதான். தவிர இன்றும் தமிழ்சினிமாவால் கொண்டாடப்படும் சந்திரபாபுவின் பேரன் நான். அவரது ரத்தம் எனக்குள்ளும் இருப்பதால் நான் சினிமாவுக்கு வர காரணமாக இருக்கலாம். ‘தெற்கத்தி வீரன்’ ரசிகர்களை கவரும் என்று நம்புகிறேன்” என்றார்.



 



நாயகனின் நண்பராக வரும் அசோக் படம் பற்றி பேசுகையில், “நாயகனாக நடித்துவரும் எனக்கு இப்படியொரு கேரக்டர் சரிபட்டு வருமா என்று முதலில் தயங்கினேன். ஆனால் சாரத் என்னிடம் கதை சொன்ன விதமும் கதையும் பிடித்திருந்ததால் நடிக்க சம்மதித்தேன். டி.ஆர்.போல எல்லா திறமைகளும் கொண்டவர் சாரத். இந்த படம் எனக்கு முக்கியமான படமாகவும் இருக்கும்.” என்றார்.



 



இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிடம் கேட்டபோது, “ஒரு படத்தில் பல பொறுப்புகளை ஏற்று வேலை செய்வது சவாலானது. சாரத் சினிமாவுக்கு புதிது என்றாலும் அனுபவம் பெற்ற இயக்குனர் போல  இந்தப் படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். எனது இசையில் அப்பா பாடிய ”கடலம்மா..” பாடல் சூப்பரா வந்திருக்கு. இந்தப்படத்தில் வில்லனாக நடிக்கவேண்டும் என்று இயக்குனர் என்னிடம் கேட்டார். நான் மறுக்கவே ”கடலம்மா” பாடலில் நடிக்கவைத்துவிட்டார்.”என்றார்.

. டிசம்பர் 2ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரைலரும், ”கடலம்மா கடலம்மா..” பாடலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா