சற்று முன்

விஜய் சேதுபதி, இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அடுத்த வெப் சீரிஸ்   |    சூரி 'பாபா பிளாக்‌ ஷீப்' படக்குழுவினருக்கு வாழ்த்து   |    சூர்யா குடும்பத்தினருடன் சென்ற தமிழரின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் அருங்காட்சியகம்   |    'டைகர் நாகேஸ்வரராவ்' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு   |    'ஆதி புருஷ்' படக்குழு வெளியிட்டிருக்கும் தெய்வீகமான போஸ்டர்   |    அஜீத்தின் முதல் படம் டிஜிட்டலில் வெளிவருகிறது!   |    லைகா சார்பில் தமிழ்க்குமரன் அஜித்துக்கு ஆறுதல்   |    ரஜினி, விஜய், அஜித்துக்கு நிகராக அங்கீகாரம் பெற்ற நடிகர் சூரி!   |    தளபதி மற்றும் சூப்பர்ஸ்டாருக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் இசையமைப்பாளராகிறார்   |    ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடிக்கும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்   |    1970களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவ கதையில் பிரபல நடிகை  ஷில்பா ஷெட்டி   |    வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்குகள் விற்பனை   |    ’பொன்னியின் செல்வன் - 2 'ல் கார்த்தி, திரிஷா இடம் பெறும் காதல் பாடல் வெளியானது   |    இந்தியில் வெளியாகும் நடிகர் சூர்யா நடித்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது   |    தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்திகேயாவுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா மேனன்   |    விருமாண்டி புகழ் நடிகை அபிராமி.நீண்ட நாளைக்கு பிறகு நடிக்கும் 'பாபா பிளாக்‌ ஷீப்'   |    பிரபலங்கள் பாராட்டும் 'D3' திரைப்படம்   |    நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இணைந்து கலக்கப்போகும் பிரபல நடிகைகள் !   |    ஆஸ்கார் விருது பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் - பெருமகிழ்ச்சியில் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்   |    ’தி லிட்டில் மெர்மெய்ட்’ மே 26, 2023 அன்று திரையரங்குகளில் !   |   

சினிமா செய்திகள்

“பாயும் ஒளி நீ எனக்கு ” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் புதிய இயக்குனர்
Updated on : 18 January 2023

SP சினிமாஸ் தமிழ்த் திரையுலகில் தனித்துவமான மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதில் முன்னோடியாக இருந்து வருகிறது. நல்ல தரமான திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனம் SP சினிமாஸ். அந்த வகையில் தான்  விக்ரம் பிரபுவின்  நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படமான “பாயும் ஒளி  நீ எனக்கு ” திரைப்படத்தை SP சினிமாஸ் தேர்ந்தெடுத்துள்ளது, மேலும் அதை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வெளியிடவுள்ளது. இப்படம் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.



 



கார்த்திக் அத்வைத் இந்த படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். அதோடு, தனது தயாரிப்பு நிறுவனமான கார்த்திக் மூவி ஹவுஸுக்காக இந்தப் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். கார்த்திக் அத்வைத் நியூயார்க் ஃபிலிம் அகாடமியின் முன்னாள் மாணவர். தனது பட்டப்படிப்பிற்குப் பிறகு, இயக்குனர் ராஜமௌலி அவர்களுடன் தொடர்ந்து பயணித்த புகழ்பெற்ற மூத்த எடிட்டரான கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் அவர்களின் கீழ் கார்த்திக் பணியாற்றினார். கார்த்திக் பல விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார், மேலும் அவரது அடுத்த படம் கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர்.சிவராஜ் குமாருடன் அமையவிருக்கிறது. சிவராஜ் குமார், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  உடன் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.



 



பிரமாதமாக வழங்கப்பட்ட இந்த படத்தின் ஆக்‌ஷன் டீஸர், அதன் நேர்த்தியான காட்சிகள் மற்றும் படத்தொகுப்புகள், அட்டகாசமான இசை மற்றும் விக்ரம் பிரபுவின் சிறந்த திரை ஈர்ப்பு ஆகியவை , படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்கனவே உயர்த்தியுள்ளது.



 



கன்னட திரைதுறையின் மிகவும் பிரபலமான நடிகர் டாலி தனஞ்சயா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.  அவரது அதிரடி காட்சிகள் படத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் வகையில் அமைந்துள்ளன  . வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் இந்த படத்தில் ஆனந்த், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் சாகர் மஹதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அவர் ஏற்கனவே தெலுங்குத் துறையில்  பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார் . “பாயும் ஒளி  நீ எனக்கு ” திரைப்படம் தமிழ்த் துறையில் அவரது இசை அறிமுகத்தைக் குறிக்கிறது. ‘பரியேறும் பெருமாள்’ புகழ் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பை கவனிக்கிறார். 



 



SP சினிமாஸ் நிறுவனம் தற்போது ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் டீசல்  என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது. மேலும் SP சினிமாஸ்,  K13 (அருள்நிதி), மாறா (மாதவன்), ஓ மனபெண்ணே (ஹரிஷ் கல்யாண்) போன்ற தனித்துவமான கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. . SP சினிமாஸ் சிறந்த உள்ளடக்கம் கொண்ட பல வெற்றி படங்களை விநியோகித்துள்ளது, அதில் அசோக் செல்வன் நடித்த வேழம் மற்றும் தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படமான ‘பாரம்’ ஆகியவை  குறிப்பிடத்தக்கவை.



 



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா